*உபதேச இரத்னமாலை - பாசுரம் 5 :* அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த வாழ்வார்கள் இந்தவுலகி லிருணீங்க- வந்துதித்த மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர் தாமறிய ஈதென்று சொல்லுவோம் யாம். *அந்தமிழால்* - அழகிய தொன்மையான தமிழ் மொழியினால் *நற்கலைகள்* - நல்ல தமிழ் பாசுரங்களைக்கொண்ட திவ்யப்ரபந்தங்களை *ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள்* - நன்கு ஆராய்ந்து பொருந்தும்படி அருளிச்செய்த ஆழ்வார்கள் *இந்தவுலகிலிருள்நீங்க* - அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்த உலகத்தில் இக்காரிருள் நீங்க வந்துதித்த - வந்து அவதாரம் செய்த *மாதங்கள் நாள்கள்தமை* - மாதங்கள் மற்றும் நக்ஷத்திரங்களையும் *மண்ணுலகோர்* - இப்பூவுலகில் வாழ்வோர் யாவரும் *தாமறிய* - அவர்கள் தாம் அறிய *ஈதென்று* - இது இவ்வாழ்வார் அல்லது ஆசாரியன் அவதார விசேஷம் என்று *சொல்லுவோம்யாம்* - நாம் கூறுவோம்
YathirajaSampathKumar Iyengar's Blog