பாசுரம்: ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப்படைத்தான் மகனே! அறிவுறாய்! ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: ஏற்ற கலங்கள்—(தானாகச் சுரக்கும்) பாலை ஏற்றுக்கொள்ள இடப்பட்ட பாத்திரங்களெல்லாம் எதிர்பொங்கி-எதிரே பொங்கி மீது அளிப்ப-மேலே வழியும்படியாக மாற்றாதே-இடைவிடாமல் பால் சொரியும் - பாலைப் பொழியும்படியான வள்ளல்-வண்மையையுடைய பெரும் பசுக்கள் - பெரிய பசுக்களை ஆற்ற படைத்தான் மகனே - விசேஷமாக உடையவரான நந்தகோபருக்குப் பிள்ளையானவனே! அறிவுறாய்- திருப்பள்ளியுணரவேணும் ஊற்றம் உடையாய்-(மேலான ப்ரமாணமாகிற வேதத்தில் சொல்லப்படுகையாகிற) திண்மையை உடையவனே! பெரியாய்-(அந்த வேதத்தாலும் அறியப்படாத) பெருமையை உடையவனே! உலகினில்-இவ்வுலகத்தில் தோற்றம் ஆய் நின்ற-(ஸகல சேதனருடைய கண்ணுக்கும்) தோன்றி நின்ற சுடரே-தேஜோ ரூபியானவனே! துயில் எழாய்- துயிலுணர்வாயாக மாற்றார்-உன் னுடைய எதிரிகள் உனக்கு வலி தொ...
YathirajaSampathKumar Iyengar's Blog