ஒவ்வொருவரின் மனதிலும் பல சிறந்த எண்ணங்கள் ஒவ்வொருநாளும் தோன்றிக்கொண்டு தான் இருக்கும். ஆனால் எந்த அளவுக்கு அதை நாம் நம் வாழ்க்கையில் செயல்படுத்துகிறோம் என்பதை பொறுத்து தான் அந்த எண்ணங்களின் சொந்தக்காரனாக நாம் ஆக முடியும். இல்லாவிட்டால் நம்மைப்போன்ற நல்ல எண்ணங்கள் தோன்றி நன்மை செய்யும் மற்றவர்களை பார்த்தோ அல்லது சினிமாவில் பார்த்தோ ஏக்கப்பெருமூச்சு விட்டுக்கொள்ளவேண்டியது தான். முதலில் நாம் மிகவும் சிறந்தவர்கள், சிறப்பான பல செயல்களை செய்வதற்காக இந்த உலகில் பிறவி எடுத்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது மிகவும் அவசியம். ஏன் என்றால் அது தான் சுய-பலம். பல நேரங்களில் நம்முடைய எண்ணங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள கூடாது, முடியாதும் கூட. அந்த சூழ்நிலைகளில் அந்த எண்ணங்களை அப்படியே மூட்டை கட்டி வைத்து விடுவதா என்ன? இல்லை, அதனை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்கிற உறுதியை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ளவேண்டும். சரி, அப்படி செயல்படுத்தும் போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய, சம...
YathirajaSampathKumar Iyengar's Blog