கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 10 : பயன் அன்றாகிலும்* பாங்கல்லர் ஆகிலும்* செயல் நன்றாகத்* திருத்திப் பணி கொள்வான்* குயில் நின்றார் பொழில் சூழ்* குருகூர் நம்பி* முயல்கின்றேன்* உந்தன் மொய்கழற்க்கு அன்பையே* பதவுரை: பயன் அன்றாகிலும் - தாம் உபதேசிக்கும் ஒருவரால் எந்த வித உபகாரமும் இல்லாவிடினும் பாங்கல்லர் ஆகிலும் - தம்முடைய உபதேசத்தைக்கேட்டு ஒரு பிரயோஜனமும் ஏற்படாமல் தம் நிலையிலேயே இருப்பவர்களாகிலும் செயல் நன்றாகத் - தம் செயலாலே (கருணையால்) நன்றாம் படி திருத்திப் பணி கொள்வான் - நல்வழியிலே திருத்தி பணிகொண்டு குயில் நின்றார் - தம் (நம்மாழ்வார்) பாசுரங்களை குயில்கள் பயின்று சொல்லும் பொழில் சூழ் - அழகிய பொழிகளால் சூழப்பட்ட குருகூர் நம்பி - குருகூரில் அவதரித்த குணபூர்னரான ஆழ்வாரிடம் முயல்கின்றேன் - மீண்டும் மீண்டும் முயற்சிக்கின்றேன் உந்தன் மொய்கழற்க்கு - தன்னை அண்டினவரின் மேல் விழுந்து காக்கும் தன்மையுடைய திருவடிகளுக்கு அன்பையே - அன்படிமைசெய்யவே கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 11 : அன்பன் தன்னை* அடைந்தவர்கட்கெல்லாம் அன்பன்* தென் குருகூர் நகர் நம்பிக்கு* அன்பனாய்* மதுர கவி சொன்ன சொல் நம்புவார...
YathirajaSampathKumar Iyengar's Blog