பாசுரம்: தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான்மகளே! மணிக்கதவம் தாள் திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ உன்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய். பதவுரை: தூ மணி மாடத்து-தூய்மையை இயற்கையாக உடைய ரத்னங்களினால் இழைக்கப்பெற்ற மாளிகையில் சுற்றும் - எல்லாவிடத்திலும் விளக்கு எரிய-மங்கள தீபங்கள் ஒளிவிடவும் தூபம் கமழ-(அகில் முதலியவற்றின்) புகை மணம் வீசவும் துயில் அணைமேல் (படுத்தாரைத்) தூங்கச்செய்யும் படுக்கையின்மேல் கண் வளரும்-கண்ணுறங்குகிறவளான மாமான் மகளே-மாமன்மகளே! மணி கதவம் தாள்- மாணிக்கக் கதவுகளின் தாள்களை திறவாய்-திறந்துவிட வேண்டும் மாமீர் - மாமியே! அவளை எழுப்பீரோ-உம்முடைய மகளைத் துயிலெழுப்பவேணும்; உன் மகள் தான்-உன்னுடைய மகள் ஊமையோ-வாய் பேசமாட்டாத ஊமைப் பெண்ணோ? அன்றி—அல்லாவிடில் செவிடோ-காதுகேளாத செவிடியோ? அனந்தலோ—(களைப்பினால்) உறங்குகிறாளோ? ஏமப்பட்டாளோ - காவலிடப்பட்டாளோ? பெருந் துயில் மந்திரப்பட்டாளோ- நெடுநேரம் தூங்கும...
YathirajaSampathKumar Iyengar's Blog