பாசுரம்: அங்கண்மா ஞாலத் தரச ரபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ திங்களு மாதித்தியனு மெழுந்தாற்போல் அங்க ணிரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேற் சாப மிழிந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: அம் கண் மா ஞாலத்து அரசர் - அழகியதாய், இடமுடையதாய், பெரிதாயுள்ள பூமியில் (ஆண்டுவரும்) அரசர்கள் அபிமான பங்கமாய் வந்து-(தங்களுடைய) அஹங்காரம் குலைந்து வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே-உன் சிங்காசனத்தின் கீழே சங்கம் இருப்பார்போல்-திரளாகக் கூடி இருப்பதைப்போல் வந்து-(நாங்களும் நீயிருக்குமிடம்) வந்து தலைப்பெய்தோம்-அணுகினோம் கிங்கிணி வாய்ச்செய்த-கிங்கிணியின் வாய்போலே பாதிமலர்ந்த தாமரை பூ போலே- தாமரைப் பூவைப்போலே செம் கண் - சிவந்திருக்கும் திருக்கண்கள் சிறுச்சிறிதே - சிறிது சிறிதாக எம்மேல் விழியாவோ - (அடியாரான) எங்கள்மேல் விழிக்கமாட்டாவோ? திங்களும் ஆதித்தியனும்-சந்திரனும் ஸூர்யனும் எழுந்தால் போல்-உதித்தாற்போல் அம் கண் இரண்டும் கொண்டு-அழகிய கண்கள் இரண்டாலும் எங்கள் மேல ...
YathirajaSampathKumar Iyengar's Blog