மிகவும் அவசியமான நிச்சயம் விவாதிக்க வேண்டிய ஒரு தலைப்பு இன்று. காரணம், "Public Behaviour" என்று ஆங்கிலத்தில் இன்று பரவலாக பேசப்படும் ஒரு நிகழ்வு இது. பல லக்ஷம் செலவு செய்து பார்க்கக்கூடிய காணொளியும் இதைப்பற்றித்தான். மேலும் "Softskills Development" என்று அதிக கட்டணத்தோடு கற்றுக்கொள்ளும் கல்வியில் / பயிற்சியில் பெரிய பங்கு இந்த Public Behaviourக்கு உண்டு. அப்படி என்ன இதற்க்கு இவ்வளவு அவசியம்? இது சரியாக இல்லாவிட்டால் வாழ முடியாதா? எல்லோரும் இதையெல்லாம் பார்த்துதான் வாழ்கிறார்களா என்ன? இது போன்ற எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் "ஆம்" என்பது தான். நாம் ஒரு கோவிலுக்கு செல்கிறோம், அல்லது ஒரு பொது இடத்திற்கு செல்கிறோம், அங்கு அமைதியாக, மிகவும் தன்னடக்கதோடு, ஒழுங்காக நடந்து கொள்பவரைப்பார்த்து நாமே என்ன சொல்கிறோம்? இருந்தால் இப்படி இருக்க வேண்டும். ஆனால் அது எப்படி சாத்தியம் ஆயிற்று என்றால், தொடர்ந்து நெறிப்படுத்துதல் மூலமாக. இறுதியில் நம் குழந்தைகளே அவ்வாறு செய்யும் போது, நம் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது, ஒரு திருப்தியும் எற்படும். எல்லாம் சரி, இதில் என்னவெல்...
YathirajaSampathKumar Iyengar's Blog