பாசுரம் 8 : *பேதைநெஞ்சே!* - ஞானமில்லாத மனமே! *இன்றைப்பெருமை* - இன்று என்ன தினம் அதன் பெருமை என்னவென்று *அறிந்திலையோ!* - அறிந்துகிள்ளவில்லையோ? *ஏது பெருமை* *இன்றைக்கென்றென்னில்!* - இன்றைய நாளுக்கு என்ன பெருமை என்று எண்ணுகிறாயோ? *ஓதுகின்றேன்* - சொல்லுகின்றேன் *வாய்த்தபுகழ் மங்கையர்கோன்* - பெரும் புகழை உடையவரான திருமங்கையாழ்வார் *மாநிலத்தில்* - இப்பூவுலகில் *வந்துதித்த* - வந்து அவதாரம் செய்தருளிய *கார்த்திகையில்* *கார்த்திகைநாள் காண்* - கார்த்திகை மாதத்தில் வரும் க்ருத்திகா (நக்ஷத்ரம்) கண்டுகொள்.
YathirajaSampathKumar Iyengar's Blog