உபதேச இரத்னமாலை பாசுரம் 9 : *மாறன் பணித்த* - ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த *தமிழ்மறைக்கு* - திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களுக்கும் *மங்கையர்கோன்* - திருமங்கைஆழ்வார் *ஆறங்கம் கூற* - ஆறு அங்கங்களாக ஆறு பிரபந்தங்களை அருளிச்செய்ய *அவதரித்த* - திரு அவதாரம் செய்த *வீறுடைய* - பெருமை உடைய *கார்த்திகையில் கார்த்திகைநாள்* - கார்த்திகை மாதத்து க்ருத்திகா (நக்ஷத்ரம்) நாள் *இன்றென்று* - இன்று என்று *காதலிப்பார்* - கொண்டாடுபவர்களுடைய *வாய்த்த மலர்த்தாள்கள்* - திருவடிகளை *நெஞ்சே! வாழ்த்து* - நெஞ்சமே உகந்து போற்று.
YathirajaSampathKumar Iyengar's Blog