இன்று நாம் விவாதிக்கும் ஒரு தலைப்பு, வாழ்க்கையில் முன்னேற நல்ல குண நலன்களோடு வாழ பிறருக்கு தொந்தரவு மனதாலும் செய்கையினாலும் செய்யாமல் இருப்பது எப்படி என்பது தான். ஆனால் தலைப்பு "நான் திருந்தவே மாட்டேன்" என்று இருக்கிறதே என்றால், இந்த ஒரே வரி தான் மேலே சொன்ன எல்லாவற்றிக்கும் காரணம். எப்படி என்றால், நாம் ஒரு செயலை செய்யும் போது அது அடுத்தவருக்கு எந்த விதத்திலும் துன்பமோ இடைஞ்சலோ தராமல் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அப்படி எல்லாமே நடப்பதில்லை. அது தான் வருத்தத்திற்கு உரிய விஷயமாக இருக்கிறது. இனி உதாரணங்களைப்பார்ப்போம். நாம் ஒரு பேருந்தில் பயணம் செய்கிறோம். அப்போது அப்பேருந்தில் உட்கார இடம் இருக்கலாம். இடம் இருந்தால் உட்கார்ந்து கொள்ளலாம். இல்லையெனில் நின்றுகொண்டு பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்போது, அமர்ந்திருப்பவர்களுக்கு இடையூறு இல்லாமல் நிற்க வேண்டியது அவசியம். நாம் முதலில் எங்கு பிடித்து நிற்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உயரமாக இருக்கிறோம், கைகளில் ஏதும் பிரச்சினை இல்லை என்றால், பேருந்தின் மேல்புறம் பிடி...
YathirajaSampathKumar Iyengar's Blog