துருவ மஹாராஜருடைய வைபவம் பராசரர் மகரிஷி மைத்ரேய முனிவரைப் பார்த்து, முநி ஸ்ரேஷ்டரே! சுவாயம்புவ மனுவுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என்னும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களிலே உத்தானபாதனுக்கு சுருசி, சுநீதி என்னும் இரண்டு மனைவியர் இருந்தார்கள். அவர்களில் சுருசி என்பவள் உத்தானபாதனுக்கு மிகவும் பிரியமுள்ளவளாக இருந்தாள். அவளுக்கு உத்தமன் என்று ஒரு மகன் இருந்தான். அவன் தகப்பனுக்கு மிகவும் ப்ரியமகனாக இருந்தான். சுநீதியிடத்தில் அரசனுக்கு அவ்வளவு ப்ரியமில்லை. சுநீதிக்கு துருவன் என்ற மகன் பிறந்தான். அவன் நற்குண நற்செய்கைகளைக் கொண்ட ஒரு உன்னதமான ஆத்மா. ஒருநாள் சின்னஞ்சிறு குழந்தையாகிற துருவன் தன் தந்தையான மன்னன் உத்தானபாதனின் அந்தப்புரத்திற்குச் சென்றான். அங்கே, தன் தந்தையின் மடியில் தன் சகோதரன் உத்தமன் உட்கார்ந்திருப்பதைப் கண்டான். தானும் அவனைப் போல, உட்கார ஆசைப்பட்டு, தந்தையின் அருகே சென்றான். அப்போது சுருசி தன்னருகில் இருந்ததால், துருவன் விருப்பத்தை மன்னன் ஏற்கவில்லை. இப்படி தன் தந்தையின் மடியின்மீது உட்காரவந்த தன் சக்களத்தி மகனான துருவனைப் பார்த்து, சுருசி ஏளனமாகச் சிரித்து, '...
YathirajaSampathKumar Iyengar's Blog