விஷ்ணு புராணம் (விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது) கலியுக தர்மம் மைத்ரேய முநி, ஸ்ரீபராசர மகரிஷியை நோக்கி, “முனிஸ்ரேஷ்டரே! உலக சிருஷ்டியையும் வம்சங்களையும் மன்வந்தரங்களின் நிலைகளையும் எனக்கு விளக்கமாகக் கூறினீர்கள். இனி கல்பத்தின் முடிவில் மகாப்ரளயம் பற்றியும் தாங்கள் கூறவேண்டும்!" என்று கேட்டார். "கல்பாந்தத்திலும் ப்ராகிருதத்திலும் பிரளயம் உண்டாகும் விதத்தைச் சொல்கிறேன், கேளுங்கள். நம்முடைய மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். நமது வருஷம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். இரண்டாயிரம் சதுர்யுகங்கள் பிரம்மனுக்கு ஒருநாள். சதுர்யுகம் என்பது கிருதயுகம், திரேதயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நான்கும் சேர்ந்ததாகும். இந்த நான்கு யுகங்களும் தேவமானத்தினால் பன்னீராயிரம் ஆண்டுகளாகும். மைத்ரேயரே! கல்பத்தின் ஆதியான கிருதயுகத்தையும் முடிவான கலியுகத்தையும் தவிர மற்றைய சதுர்யுகங்கள் யாவும் சமானமானவையே ஆகும். ஆதிக்ருத யுகத்திலே பிரம்மா எப்படிப்படைக்கிறாரோ, அப்படியே இறுதியான கலியுகத்திலே சம்காரம் செய்கிறார்” என்று பராசரர் சொல்லும்போது, மைத்ரேயர் மற்றொரு விஷயத்தைப் பற்றிக் கேட்க ஆசைகொண்டு, மகரி...
YathirajaSampathKumar Iyengar's Blog