கலியுக தர்மம் (விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது) கலியின் குணம் மைத்ரேயரே! மாபெரும் அறிஞரான வேத வியாசரும் கலிபுருஷன் விஷயத்தில் ஒரு விசேஷத்தைச் சொல்லியிருக்கிறார். அதையும் நாம் உமக்குச் சொல்கிறோம். ஒரு காலத்தில் தவமுனிவர்களிடையே ஒரு புண்ணிய வாதம் உண்டாயிற்று. அதாவது “கொஞ்சம் தருமம் செய்தாலும் பயன் அதிகமாகக் கிடைக்கும் காலம் எது? எவர் அத்தகைய தருமத்தை எளிதில் செய்வதற்கு உரியவர்கள்?” என்பதே அவர்களது விவாதமாகிவிட்டது. எனவே இந்த தர்மத்தைப் பற்றிய தெளிவு பெற, உண்மையை அறிந்து கொள்ள, முனிவர்கள் அனைவரும் வேதவ்யாச மகரிஷியின் ஆஸ்ரமத்தை நோக்கிச் சென்றார்கள். அப்போது என் மகனான வேதவ்யாசர், கங்கை நதியிலே நீராடிக் கொண்டிருந்தார். அதனால் அந்த முனிவர்கள் அவர் நீராடிவிட்டு வரும் வரையில் கரையோரமாக இருந்த மரங்களின் நிழல்களில் உட்கார்ந்திருந்தனர். அப்போது கங்கா தீர்த்தத்தில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்த என் குமாரர், முழுக்கிலிருந்து எழுந்து “சூத்திரன் ஸாது; கலி ஸாது” என்று முனிவர்களின் காதுகளில் கேட்கும்படிச் சொல்லிவிட்டு மீண்டும் நீரில் மூழ்கினார். பிறகு அவர் எழுந்து, “ஸாது ஸாது சூத்...
YathirajaSampathKumar Iyengar's Blog