Skip to main content

Posts

Showing posts with the label Upadesa Rathinamalai Pathavurai

உபதேச இரத்னமாலை - பாசுரம் 14 : பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 14 :* ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப் பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள் *பதவுரை:* *ஏரார்* - (ஏர் + ஆர்) சீர்மை மிகுந்த  *வைகாசி விசாகத்தின்* - வைகாசிமாதத்து விசாகநாளின்  *ஏற்றத்தை* - பெருமையை  *பாரோரறியப்* - உலகோர்கள் அறிந்துகொள்ள *பகர்கின்றேன்* - சொல்லுகின்றேன்  *சீராரும் வேதம்* - சீர்நிறைந்த வேதத்தை  *தமிழ்செய்த மெய்யன்* - தமிழில் திராவிடவேதமாக அருளிச்செய்த  *எழில் குருகை நாதன்* - அழகிய (ஆழ்வார்) திருநகரிக்கு நாதனாகிய ஸ்வாமி நம்மாழ்வார்  *அவதரித்த நாள்* - அவதாரம் செய்த நாள்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 13 : பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 13 :* மாசிப் புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர் தேசித் திவசத்துக்கு ஏது என்னில் -பேசுகின்றேன் கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால் நல்லவர்கள் கொண்டாடும் நாள் *பதவுரை:* *மாசிபுனர்பூசம் காண்மினின்று* - இன்றைய தினம் மாசி மாதத்து புனர்வசு நாளாகும். *மண்ணுலகீர்* - உலகோர்களே *தேசித் திவசத்துக் கேதென்னில்* - பெருமை இந்த தினத்திற்கு என்னவென்றால்  *பேசுகின்றேன்* - சொல்லுகின்றேன் கொல்லிநகர்கோன் - கொல்லி என்னும் நகரத்துக்கு தலைவரான  *குலசேகரன்* - ஸ்வாமி குலசேகராழ்வார் *பிறப்பால்* - திருவவதாரத்தினால்  *நல்லவர்கள்* - சாதுக்கள்  *கொண்டாடும் நாள்* - குதூகலிக்கும் நாள்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 12 : பதவுரை

*உபதேச ரத்னமாலை - பாசுரம் 12 :* தையில் மகம் இன்று தாரணீயிர் ஏற்றம் இந்தத் தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் துய்ய மதி பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று நற்றவர்கள் கொண்டாடும் நாள் *பதவுரை: * *தையில் மகம் இன்று* - இன்றையதினம் தை மாதத்தில் வரும் மகம் (நக்ஷத்திரம்) நாளாகும் *தாரணியீர்!* - உலகோர்களே *ஏற்றம் இந்த தையில் மகத்துக்கு* - என்ன பெருமை இந்த தையில் மகத்திற்கு என்று *சாற்றுகின்றேன்* - கூறுகின்றேன்  *துய்யமதி பெற்ற மழிசைப்பிரான்* - பரிசுத்தமான ஞானமுடைய திருமழிசையாழ்வார் *பிறந்த நாள் என்று* - திருவவதாரம் செய்த நாள் என்று  *நற்றவர்கள்* - பெரும் தவசீலர்கள்  *கொண்டாடும் நாள்* - குதூகலிக்கும் நாள்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 9 : பதவுரை

உபதேச இரத்னமாலை பாசுரம் 9 :  *மாறன் பணித்த* - ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த   *தமிழ்மறைக்கு* - திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களுக்கும்   *மங்கையர்கோன்* - திருமங்கைஆழ்வார்   *ஆறங்கம் கூற* - ஆறு அங்கங்களாக ஆறு பிரபந்தங்களை அருளிச்செய்ய   *அவதரித்த* - திரு அவதாரம் செய்த   *வீறுடைய* - பெருமை உடைய   *கார்த்திகையில் கார்த்திகைநாள்* - கார்த்திகை மாதத்து க்ருத்திகா (நக்ஷத்ரம்) நாள்   *இன்றென்று* - இன்று என்று   *காதலிப்பார்* - கொண்டாடுபவர்களுடைய    *வாய்த்த மலர்த்தாள்கள்* - திருவடிகளை   *நெஞ்சே! வாழ்த்து* - நெஞ்சமே உகந்து போற்று.

உபதேச இரத்னமாலை - பாசுரம் 7 : பதவுரை

*உபதேச இரத்னமாலை* - பாசுரம் 7 : மாற்றுள்ளவாழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து  நற்றமிழால் நூல்செய்து நாட்டையுய்த்த பெற்றிமையோர்  என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு  நின்றதுலகத்தே நிகழ்ந்து.  *மாற்றுள்ளவாழ்வார்களுக்கு* - பன்னிரு ஆழ்வார்களில் நான்காம் ஆழ்வாரான திருமழிசைப்பிரான் முதலான ஆழ்வார்களுக்கு   *முன்னே வந்துதித்து* - முன்பு வந்து தோன்றி    *நற்றமிழால்* - சிறந்த தமிழ் நூலினால்   *நூல்செய்து* - சிறந்த பிரபந்தங்களை அருளி   *நாட்டையுய்த்த* - நாட்டுமக்கள் உய்வதற்கு உதவும் வண்ணம்   *பெற்றிமையோர் என்று* - போற்றத்தகுந்த பெரியோர்கள் *முதலாழ்வார்கள்*- முதல் ஆழ்வார்கள் (முதன்முதலில் தோன்றியவர்கள்)  *என்னும் பேரிவர்க்கு* - என்கின்ற பெயர் இவர்களுக்கு  *நின்றதுலகத்தே* - உலகத்தில் நிலைபெற்ற *நிகழ்ந்து* - நிகழ்வு நடைபெற்றது.

உபதேச இரத்தினமாலை - பாசுரம் 5: பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 5 :* அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த வாழ்வார்கள் இந்தவுலகி லிருணீங்க- வந்துதித்த மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர் தாமறிய ஈதென்று சொல்லுவோம் யாம். *அந்தமிழால்* - அழகிய தொன்மையான தமிழ் மொழியினால்  *நற்கலைகள்* - நல்ல தமிழ் பாசுரங்களைக்கொண்ட திவ்யப்ரபந்தங்களை  *ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள்* - நன்கு ஆராய்ந்து பொருந்தும்படி அருளிச்செய்த ஆழ்வார்கள்  *இந்தவுலகிலிருள்நீங்க* - அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்த உலகத்தில் இக்காரிருள் நீங்க வந்துதித்த - வந்து அவதாரம் செய்த  *மாதங்கள் நாள்கள்தமை* - மாதங்கள் மற்றும் நக்ஷத்திரங்களையும்  *மண்ணுலகோர்* - இப்பூவுலகில் வாழ்வோர் யாவரும்   *தாமறிய* - அவர்கள் தாம் அறிய  *ஈதென்று* - இது இவ்வாழ்வார் அல்லது ஆசாரியன் அவதார விசேஷம் என்று  *சொல்லுவோம்யாம்* - நாம் கூறுவோம்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 10: பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 10:*  கார்த்திகையுரோஹிணி நாள் காண்மினின்று  காசினியீர் வாய்த்த புகழ்ப்பாணர் வந்துதிப்பால்  ஆத்தியர்கள் அன்புடனே தான் அமலனாதிபிரான்  கற்றதிற்பின் கொண்டாடும் நாள் * பதவுரை :*   *கார்த்திகையுரோஹிணி நாள்* - கார்த்திகை மாதத்தில் ரோஹிணி நாள்   *காண்மினின்று* - இன்று கண்டுகொள்ளுங்கள்   *காசினியீர்* - உலகத்தீரே!    *வாய்த்த புகழ்ப்பாணர்* - மிகப்பொருந்திய புகழை உடைய திருப்பாணாழ்வார்   *வந்துதிப்பால் -* திருவவதாரம் செய்தருளினதைக்கொண்டு   *ஆத்தியர்கள்* - ஆஸ்திகர்கள்  அன்புடனே தான் - ப்ரியமுடன்   *அமலனாதிபிரான் கற்றதிற்பின்* - ஸ்வாமி அருளிச்செய்த அமலனாதிபிரான் நமக்கு கிடைக்கப்பெற்றோம் என்று நன்குடனே  *கொண்டாடும் நாள்* - ஆராதித்து கொண்டாடும் நாள்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 2: பதவுரை

உபதேச இரத்னமாலை - பாசுரம் 2 :  *கற்றோர்கள் தாமுகப்பர் -* கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் இப்பிரபந்தத்தை உகப்பாய் ஏற்றிடுவார்  *கல்விதன்னில் ஆசையுள்ளோர் -* கற்பதனில் ஆசையுள்ளோர்   *பெற்றோமெனவுகந்து* - இது கிடைக்கப்பெற்றோமே என கொண்டாடி   *பின்புகற்பர்* - பிறகு இப்பிரபந்தத்தை கற்பார்கள்  *மற்றோர்கள்* - மேலே சொன்னது போல் இவ்விரண்டு நிலைகளிலும் சேராதோர்  *மாச்சர்யத்தாழிகளில்* - வெறுப்பினால் இதனையிகழ்ந்தால்   *வந்ததென்நெஞ்சே!* - நெஞ்சே, நமக்கு என்ன இழப்பு உள்ளது?  *இகழ்கை* - இப்படிப்பட்ட கிரந்தத்தினை இழப்பதென்பது   *ஆச்சர்யமோதானவர்க்கு* - ஆச்சர்யமானதா? (இல்லையே)

உபதேச இரத்னமாலை - பாசுரம் 4: பதவுரை

உபதேச இரத்னமாலை - பாசுரம் 4 :  *பொய்கையார்* - இப்பூவுலகில் முதலில் தோன்றிய ஆழ்வார் பொய்கையாழ்வார்   *பூதத்தார்* - பூதத்தாழ்வார் இரண்டாமவர்  *பேயார்* - மூன்றாவதாக தோன்றியவர்   *புகழ்மழிசை ஐயன்* - புகழையுடைய திருமழிசை ஆழ்வார் நான்காவதாக தோன்றினவர்  *அருள்மாறன்* - திருமாலின் அருள் நிரம்பப்பெற்ற ஸ்வாமி நம்மாழ்வார் ஐந்தாவதாக தோன்றினார்   *சேரலர்கோன்* - சேர குல மன்னனான குலசேகராழ்வார் ஆறாமவர்  *துய்யப்பட்ட நாதன்* - பவித்ரமான பரிசுத்தமான பெரியாழ்வார் ஏழாவதாக அவதரித்தவர்  *அன்பர்தாள்தூளி* - நண்பரான தொண்டர்களின் பாத தூளி தானே என்னும்படி வந்து தோன்றின தொண்டரடிப்பொடியாழ்வார் எட்டாமவர்   *நற்பாணன்* - லோகாசாரங்கமுனிவரால் கல்லடி பட்டாலும் சாத்விகமாக அவ்விடம் விட்டு நகர்ந்த நம் திருப்பாணாழ்வார் ஒன்பதாவதாக வந்து தோன்றியவர்   *நன்கலியன்* - நம் நாராயணனே "கலியனோ?" என்று வியந்த திருமங்கையாழ்வார் பத்தமாவர்   *ஈதிவர்* - (ஈது + இவர்)  இதுவே இவர்களது   *தோற்றத்தடைவாமிங்கு* - (தோற்றத்து அடைவு) தோன்றின வரிசைக்கிரமம...

உபதேச இரத்னமாலை - பாசுரம் 3: பதவுரை

உபதேசஇரத்னமாலை - பாசுரம் 3:   *ஆழ்வார்கள் வாழி -* பன்னிரு ஆழ்வார்களுக்கு பல்லாண்டு வாழி  *அருளிச்செயல் வாழி* - அவ்வாழ்வார்கள் அருளிசெய்த நாலாயிர திவ்யப்பிரபந்தங்கள் வாழி  *தாழ்வாதுமிழ்* - குறைவொன்றும் இல்லாத  *குரவர் தாம் வாழி* - ஆச்சார்யர்கள் வாழி  *ஏழ்பாரும் உய்ய* - ஏழுலகத்தினில் வாழ்பவர்கள் யாவரும் வாழ  *அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி* - உபயமாக ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அருளிய அனைத்தும் வாழி  *செய்யமறை தன்னுடனே சேர்ந்து* - இவை அனைத்தும் வேதங்களோடு கூடி வாழ்ந்திடுகவே!

உபதேச இரத்னமாலை - பாசுரம் 1: பதவுரை

பாசுரம் 1 :  *எந்தை* - என் ஸ்வாமியான   *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற திருமலையாழ்வாருடைய    *இன்னருளால் வந்த* - பரம கிருபையால் கிடைத்த   *உபதேச மார்கத்தை சிந்தை செய்து* - அவர் தாம் உபதேசித்த வழியை பின்பற்றி   *பின்னரும் கற்க* - தொடர்பவர்கள் அனைவரும் கற்கும் வண்ணம்   *உபதேசமாய் பேசுகின்றேன்* - உபதேசம் செய்வதை போல் கூறுகின்றேன்   *மன்னிய சீர் வெண்பாவில் வைத்து* - ஆச்சார்யர்களின் பெருமைகளையும் குணங்களையும் "மன்னியசீர் வெண்பா" என்னும் வெண்பாவில் வைத்து.

உபதேச இரத்னமாலை - தனியன்: பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: *உபதேச இரத்னமாலை* - தனியன்:  பதவுரை *முன்னம்* - முற்காலத்தில்  *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  *தாம் உபதேசித்த* - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும் ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  *நேர் தன்னின் படியை தணவாத சொல்* - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான *மணவாளமுனி* - மணவாளமாமுனி *தன் அன்புடன் செய்* - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  *உபதேசரத்னமாலை தன்னை* - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  *தம் நெஞ்சு தன்னில்* - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே *தரிப்பவர்* - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  *தாள்கள் சரண் நமக்கே.* - திருவடிகளே நமக்கு தஞ்சம்.