*உபதேச இரத்னமாலை - பாசுரம் 10:*
கார்த்திகையுரோஹிணி நாள் காண்மினின்று
காசினியீர் வாய்த்த புகழ்ப்பாணர் வந்துதிப்பால்
ஆத்தியர்கள் அன்புடனே தான் அமலனாதிபிரான்
கற்றதிற்பின் கொண்டாடும் நாள்
*பதவுரை:*
*கார்த்திகையுரோஹிணி நாள்* - கார்த்திகை மாதத்தில் ரோஹிணி நாள்
*காண்மினின்று* - இன்று கண்டுகொள்ளுங்கள்
*காசினியீர்* - உலகத்தீரே!
*வாய்த்த புகழ்ப்பாணர்* - மிகப்பொருந்திய புகழை உடைய திருப்பாணாழ்வார்
*வந்துதிப்பால் -* திருவவதாரம் செய்தருளினதைக்கொண்டு
*ஆத்தியர்கள்* - ஆஸ்திகர்கள்
அன்புடனே தான் - ப்ரியமுடன்
*அமலனாதிபிரான் கற்றதிற்பின்* - ஸ்வாமி அருளிச்செய்த அமலனாதிபிரான் நமக்கு கிடைக்கப்பெற்றோம் என்று நன்குடனே
*கொண்டாடும் நாள்* - ஆராதித்து கொண்டாடும் நாள்
Comments
Post a Comment