பாசுரம்:
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை:
புள்ளின் வாய் கீண்டானை- பறவையுருவங்கொண்டு வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும்
பொல்லா அரக்கனை கிள்ளிகளைந்தானை-பொல்லாங்கு
களுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பிரானுடைய
கீர்த்திமை பாடி போய்-வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று
பிள்ளைகள் எல்லாரும் - எல்லாப் பெண்பிள்ளைகளும்
பாவைக்களம்- (க்ருஷ்ணனும் தாங்களும்) நோன்பு நோற்கைக்காகக் குறித்த இடத்திற்கு
புக்கார்-புகுந்தனர்
வெள்ளிஎழுந்து-சுக்கிரன் மேலெழுந்து
வியாழம் உறங்கிற்று - குரு அஸ்தமித்தது
(மேலும்,)
புள்ளும் சிலம்பின காண் - பறவைகளும் (இறைதேடக்) கூவிச்செல்கின்றன
போது அரி கண்ணினாய்-பூவையும்
மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே! பாவாய்-
இயற்கையாகவே ஸ்த்ரீத்வத்தைப் பெற்றவளே!
நீ -நீ
நல்நாள் - கிருஷ்ணனும் நாமும் கூடப்போகும் இந்த நல்லநாளில்
கள்ளம் தவிர்ந்து- (கிருஷ்ண குணங்களைத் தனியிருந்து அநுபவிக்கையாகிற) கபடத்தை விட்டு
கலந்து— (எங்களோடு) சேர்ந்து
குள்ளக் குளிர குடைந்து நீராடாதே-
மிகக் குளிர்ச்சியாயிருக்கும் நீரில் நன்றாக நீராடாமல்
பள்ளி கிடத்தியோ-படுக்கையில் கிடந்து உறங்குகின்றாயோ?
ஆல்-
ஆச்சரியம்!
Comments
Post a Comment