கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 6 : இன்று தொட்டும்* எழுமையும் எம்பிரான்* நின்று தன் புகழ்* ஏத்த அருளினான்* குன்ற மாடத்* திருக்குருகூர் நம்பி* என்றும் என்னை* இகழ்விலன் காண்மினே* பதவுரை: இன்று தொட்டும் - இனிமேல் எப்பொழுதாவது எண்ணும் படி இல்லாமல் இன்றே இப்பொழுதே எழுமையும் - இனிமேல் உள்ள காலமெல்லாம் எம்பிரான் - அடியேனுக்கு உபகாரம் செய்து உய்விக்கிறவரான நின்று தன் புகழ் - எப்போதும் இருக்கிறபடி நிரந்தரமாக தன் புகழே ஏத்த அருளினான் - நிலைத்திருக்கும்படி அருளினான் குன்ற மாடத் - சிறு மலையை போன்று மணிமாட செல்வம் நிறைந்த திருக்குருகூர் நம்பி - திருக்குருகூரில் தோன்றிய குணபரிபூர்ணர் என்றும் என்னை இகழ்விலன் - எக்காலத்தும் அடியேனைக் கைவிடாது காப்போன் காண்மினே - காணுங்கள் கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 7 : கண்டு கொண்டென்னைக்* காரி மாறப் பிரான்* பண்டை வல்வினை* பாற்றி அருளினான்* எண் திசையும்* அறிய இயம்புகேன்* ஒண் தமிழ்* சடகோபன் அருளையே* பதவுரை: கண்டு கொண்டென்னைக் - (கண்டு + கொண்டு + என்னை) என் தாழ்மையான நிலையைக்கண்டும் கூட என்னைக் கைக்கொண்டு...
YathirajaSampathKumar Iyengar's Blog