கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 6 :
இன்று தொட்டும்* எழுமையும் எம்பிரான்*
நின்று தன் புகழ்* ஏத்த அருளினான்*
குன்ற மாடத்* திருக்குருகூர் நம்பி*
என்றும் என்னை* இகழ்விலன் காண்மினே*
பதவுரை:
இன்று தொட்டும் - இனிமேல் எப்பொழுதாவது எண்ணும் படி இல்லாமல் இன்றே இப்பொழுதே
எழுமையும் - இனிமேல் உள்ள காலமெல்லாம்
எம்பிரான் - அடியேனுக்கு உபகாரம் செய்து உய்விக்கிறவரான
நின்று தன் புகழ் - எப்போதும் இருக்கிறபடி நிரந்தரமாக தன் புகழே
ஏத்த அருளினான் - நிலைத்திருக்கும்படி அருளினான்
குன்ற மாடத் - சிறு மலையை போன்று மணிமாட செல்வம் நிறைந்த
திருக்குருகூர் நம்பி - திருக்குருகூரில் தோன்றிய குணபரிபூர்ணர்
என்றும் என்னை இகழ்விலன் - எக்காலத்தும் அடியேனைக் கைவிடாது காப்போன்
காண்மினே - காணுங்கள்
எழுமையும் - இனிமேல் உள்ள காலமெல்லாம்
எம்பிரான் - அடியேனுக்கு உபகாரம் செய்து உய்விக்கிறவரான
நின்று தன் புகழ் - எப்போதும் இருக்கிறபடி நிரந்தரமாக தன் புகழே
ஏத்த அருளினான் - நிலைத்திருக்கும்படி அருளினான்
குன்ற மாடத் - சிறு மலையை போன்று மணிமாட செல்வம் நிறைந்த
திருக்குருகூர் நம்பி - திருக்குருகூரில் தோன்றிய குணபரிபூர்ணர்
என்றும் என்னை இகழ்விலன் - எக்காலத்தும் அடியேனைக் கைவிடாது காப்போன்
காண்மினே - காணுங்கள்
கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 7 :
கண்டு கொண்டென்னைக்* காரி மாறப் பிரான்*
பண்டை வல்வினை* பாற்றி அருளினான்*
எண் திசையும்* அறிய இயம்புகேன்*
ஒண் தமிழ்* சடகோபன் அருளையே*
பதவுரை:
கண்டு கொண்டென்னைக் - (கண்டு + கொண்டு + என்னை) என் தாழ்மையான நிலையைக்கண்டும் கூட என்னைக் கைக்கொண்டு
காரி மாறப் பிரான் - காரிமாறனாகிய பேருபகாரனான ஆழ்வார்
பண்டை வல்வினை - அனுபவித்துக் கழியாத என்னுடைய பழவினைகளை
பாற்றி அருளினான் - முழுமையாக அழிந்துபோகும்படி செய்தருளினார்
எண் திசையும் - எல்லா திசைகளில் (எட்டு திக்கும்) உள்ளோரும்
அறிய இயம்புகேன் - அறிந்துகொள்ளும்படி ஆழ்வாரது பெருமைகளை சொல்லித் திரிவேன்
ஒண் தமிழ் - ஒன்றிய தமிழ் மாலையை அருளிய
சடகோபன் - சடத்தைக் கோபித்த எம் ஆழ்வாரது
அருளையே - கருணையே
கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 8 :
அருள் கொண்டாடும்* அடியவர் இன்புற*
அருளினான்* அவ்வருமறையின் பொருள்*
அருள் கொண்டு* ஆயிரம் இன்தமிழ் பாடினான்*
அருள் கண்டீர்* இவ்வுலகினில் மிக்கதே*
பதவுரை:
அருள் கொண்டாடும் - எம்பெருமானுடைய அருளையே கொண்டாடிக் கொண்டிருக்கிறன்ற அடியவர் - இவ்வாழ்வாரைப்போல உள்ள அடியோர்கள்
இன்புற - மகிழ்ந்திருக்க வேண்டி
அருளினான் - திருவாய்மொழியை அருளி
அவ்வருமறையின் பொருள் - மிகவும் அரிதான வேதத்தின் அர்த்தத்தை
அருள் கொண்டு - எம்பெருமானின் அருளையே துணையாகக்கொண்டு
ஆயிரம் இன்தமிழ் - இனிய தமிழால் ஆயிரம் பாசுரமாக
பாடினான் - பாடின அடியாராகிய ஆழ்வாருடைய
அருள் கண்டீர் - கருணையை கண்டீர்கள் என்றால்
இவ்வுலகினில் மிக்கதே - இவ்வுலகைவிட பெரியதே ஆகும்.
கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 9:
மிக்க வேதியர்* வேதத்தின் உட்பொருள்*
நிற்கப் பாடி* என் நெஞ்சுள் நிறுத்தினான்*
தக்க சீர்ச்* சடகோபன் என் நம்பிக்கு* ஆள்
புக்க காதல்* அடிமைப் பயன் அன்றே*
பதவுரை:
மிக்க வேதியர் - வேதாந்தமான உபநிஷத்தையே நெறியாக கொண்டவர்களுடைய
வேதத்தின் உட்பொருள் - வேதாந்தத்தின் உட்பொருளான பாகவத பரிமளிப்பை (சேஷத்வம்)
நிற்கப் பாடி - எப்போதும் நிலைத்திருக்கும் படி பாடி
என் நெஞ்சுள் - அடியேனுடைய நெஞ்சினுள்ளே
நிறுத்தினான் - பொருத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் - எல்லா மேன்மைகளை நிறைந்திருக்கின்ற சடகோபனான
என் நம்பிக்கு - ஸ்வாமி நம்மாழ்வார் எனும் குணபூர்ணருக்கு
ஆள் புக்க காதல் - அடிமை செய்ய வேண்டும் என்கிற அவா (ப்ரேமை)
அடிமைப் பயன் அன்றே - இன்ப பயன் தரும் அடிமைத்தனம் அன்றோ?
Comments
Post a Comment