Skip to main content

Posts

Showing posts with the label உபதேச இரத்னமாலை பதவுரை

உபதேச இரத்னமாலை - பதவுரை

    ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச இரத்னமாலை பதவுரை உபதேச இரத்னமாலை - பாசுரம் 11 : மன்னியசீர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர் என்னிதனுக் கேற்ற மெனில் உரைக்கேன் - தன்னுபுகழ் மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால் நான்மறையோர் கொண்டாடும் நாள். மன்னிய சீர் - மிகவும் சிறப்பு பொருந்திய  மார்கழியில் கேட்டை இன்று - மார்கழிமாதத்தில் கேட்டை நாள் இன்று மாநிலத்தீர் - உலகத்தீர் என்னிதனுக்கேற்றமெனிலுறைக்கேன் - இம்மார்கழி கேட்டைக்கு என்ன சிறப்பு என்றால் சொல்லுகின்றேன்  துன்னுபுகழ் - மிக்க புகழையுடைய  மாமறையோன் - பரம வைஷ்ணவரான (வைதீகரான)  தொண்டரடிப்பொடியாழ்வார்  பிறப்பால் - தொண்டரடிப்பொடியாழ்வாருடைய திருவவதாரத்தினால்  நான்மறையோர் கொண்டாடும் நாள் - இது நமக்கான நாள் என்று எல்லா வைதீகர்களும் கொண்டாடும் நாள் உபதேச ரத்னமாலை - பாசுரம் 12 : தையில் மகம் இன்று தாரணீயிர் ஏற்றம் இந்தத் தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் துய்ய மதி பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று நற்றவர்கள் கொண்டாடும் நாள் தையில் மகம் இன்று - இன்றையதினம் தை மாதத்...

உபதேச இரத்னமாலை - பதவுரை

  ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச இரத்னமாலை பதவுரை உபதேச இரத்னமாலை - பாசுரம் 5 : அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த வாழ்வார்கள் இந்தவுலகி லிருணீங்க- வந்துதித்த மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர் தாமறிய ஈதென்று சொல்லுவோமி யாம். அந்தமிழால் - அழகிய தொன்மையான தமிழ் மொழியினால்  நற்கலைகள் - நல்ல தமிழ் பாசுரங்களைக்கொண்ட திவ்யப்ரபந்தங்களை  ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் - நன்கு ஆராய்ந்து பொருந்தும்படி அருளிச்செய்த ஆழ்வார்கள்  இந்தவுலகிலிருள்நீங்க - அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்த உலகத்தில் இக்காரிருள் நீங்க  வந்துதித்த - வந்து அவதாரம் செய்த  மாதங்கள் நாள்கள்தமை - மாதங்கள் மற்றும் நக்ஷத்திரங்களையும்  மண்ணுலகோர் - இப்பூவுலகில் வாழ்வோர் யாவரும்   தாமறிய - அவர்கள் தாம் அறிய  ஈதென்று - இது இவ்வாழ்வார் அல்லது ஆசாரியன் அவதார விசேஷம் என்று  சொல்லுவோம்யாம் - நாம் கூறுவோம் உபதேச இரத்னமாலை  - பாசுரம் 6 : ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை  ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - எப்புவியும்  பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வா...