ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
உபதேச இரத்னமாலை
பதவுரை
உபதேச இரத்னமாலை - பாசுரம் 5 :
அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த வாழ்வார்கள்
இந்தவுலகி லிருணீங்க- வந்துதித்த
மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர் தாமறிய
ஈதென்று சொல்லுவோமி யாம்.
அந்தமிழால் - அழகிய தொன்மையான தமிழ் மொழியினால்
நற்கலைகள் - நல்ல தமிழ் பாசுரங்களைக்கொண்ட திவ்யப்ரபந்தங்களை
ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் - நன்கு ஆராய்ந்து பொருந்தும்படி அருளிச்செய்த ஆழ்வார்கள்
இந்தவுலகிலிருள்நீங்க - அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்த உலகத்தில் இக்காரிருள் நீங்க வந்துதித்த - வந்து அவதாரம் செய்த
மாதங்கள் நாள்கள்தமை - மாதங்கள் மற்றும் நக்ஷத்திரங்களையும்
மண்ணுலகோர் - இப்பூவுலகில் வாழ்வோர் யாவரும்
தாமறிய - அவர்கள் தாம் அறிய
ஈதென்று - இது இவ்வாழ்வார் அல்லது ஆசாரியன் அவதார விசேஷம் என்று
சொல்லுவோம்யாம் - நாம் கூறுவோம்
உபதேச இரத்னமாலை - பாசுரம் 6 :
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - எப்புவியும்
பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
பேயாழ்வார் தேசுடனே தோன்று சிறப்பால்.
ஐப்பசியில் - ஐப்பசி மாதத்தில்
ஓணம் அவிட்டம் சதயம் இவை - திருஓணம், அவிட்டம், சதயம் ஆகிய நக்ஷத்திரங்கள்
ஒப்பிலவா நாள்கள் - ஒப்புயர்வற்ற நாள்களாகும் (ஏனென்றால்)
உலகத்தீர் - உலகிலுள்ளீர்களே!
எப்புவியும் பேசுபுகழ் - பரந்த உலகம் எங்கும் பேசுகின்ற புகழ் வாய்ந்த
பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் - முதல் ஆழ்வார்களாகிய
பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று சிறப்பால் - சிறந்த தேஜஸுடனே / புகழுடன்
திருவவதாரம் செய்தமையால்
உபதேச இரத்னமாலை - பாசுரம் 7 :
மாற்றுள்ளவாழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல்செய்து நாட்டையுய்த்த பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு
நின்றதுலகத்தே நிகழ்ந்து.
மாற்றுள்ளவாழ்வார்களுக்கு - பன்னிரு ஆழ்வார்களில் நான்காம் ஆழ்வாரான திருமழிசைப்பிரான் முதலான ஆழ்வார்களுக்கு
முன்னே வந்துதித்து - முன்பு வந்து தோன்றி
நற்றமிழால் - சிறந்த தமிழ் நூலினால்
நூல்செய்து - சிறந்த பிரபந்தங்களை அருளி
நாட்டையுய்த்த - நாட்டுமக்கள் உய்வதற்கு உதவும் வண்ணம்
பெற்றிமையோர் என்று - போற்றத்தகுந்த பெரியோர்கள்
முதலாழ்வார்கள்- முதல் ஆழ்வார்கள் (முதன்முதலில் தோன்றியவர்கள்)
என்னும் பேரிவர்க்கு - என்கின்ற பெயர் இவர்களுக்கு நின்றதுலகத்தே - உலகத்தில் நிலைபெற்ற
நிகழ்ந்து - நிகழ்வு நடைபெற்றது.
உபதேச இரத்னமாலை - பாசுரம் 8 :
பேதை நெஞ்சே இன்றை பெருமை அறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக் கென்றியேல் - ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகைநாள் காண்
ஏது பெருமை இன்றைக் கென்றியேல் - ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகைநாள் காண்
பேதைநெஞ்சே! - ஞானமில்லாத மனமே!
இன்றைப்பெருமை - இன்று என்ன தினம் அதன் பெருமை என்னவென்று
அறிந்திலையோ! - அறிந்துகிள்ளவில்லையோ?
ஏது பெருமை இன்றைக்கென்றென்னில்! - இன்றைய நாளுக்கு என்ன பெருமை என்று எண்ணுகிறாயோ?
ஓதுகின்றேன் - சொல்லுகின்றேன்
வாய்த்தபுகழ் மங்கையர்கோன் - பெரும் புகழை உடையவரான திருமங்கையாழ்வார் மாநிலத்தில் - இப்பூவுலகில்
வந்துதித்த - வந்து அவதாரம் செய்தருளிய
கார்த்திகையில் கார்த்திகைநாள் காண் - கார்த்திகை மாதத்தில் வரும் க்ருத்திகா (நக்ஷத்ரம்) கண்டுகொள்.
உபதேச இரத்னமாலை பாசுரம் 9 :
மாறன் பணிந்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன்
ஆரங்கம் கூற அவதரித்த - வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகைநாள் இன்றென்று காதலிப்பார்
வாய்த்தமலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து
மாறன் பணித்த - ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த
தமிழ்மறைக்கு - திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களுக்கும்
மங்கையர்கோன் - திருமங்கைஆழ்வார்
ஆறங்கம் கூற - ஆறு அங்கங்களாக ஆறு பிரபந்தங்களை அருளிச்செய்ய
அவதரித்த - திரு அவதாரம் செய்த
வீறுடைய - பெருமை உடைய
கார்த்திகையில் கார்த்திகைநாள் - கார்த்திகை மாதத்து க்ருத்திகா (நக்ஷத்ரம்) நாள்
இன்றென்று - இன்று என்று
காதலிப்பார் - கொண்டாடுபவர்களுடைய
வாய்த்த மலர்த்தாள்கள் - திருவடிகளை
நெஞ்சே! வாழ்த்து - நெஞ்சமே உகந்து போற்று.
உபதேச இரத்னமாலை - பாசுரம் 10 :
கார்த்திகையுரோஹிணி நாள் காண்மினின்று
காசினியீர் வாய்த்த புகழ்ப்பாணர் வந்துதிப்பால்
ஆத்தியர்கள் அன்புடனே தான் அமலனாதிபிரான்
கற்றதிற்பின் கொண்டாடும் நாள்
கார்த்திகையுரோஹிணி நாள் - கார்த்திகை மாதத்தில் ரோஹிணி நாள்
காண்மினின்று - இன்று கண்டுகொள்ளுங்கள்
காசினியீர் - உலகத்தீரே!
வாய்த்த புகழ்ப்பாணர் - மிகப்பொருந்திய புகழை உடைய திருப்பாணாழ்வார்
வந்துதிப்பால் - திருவவதாரம் செய்தருளினதைக்கொண்டு
ஆத்தியர்கள் - ஆஸ்திகர்கள்
அன்புடனே தான் - ப்ரியமுடன்
அமலனாதிபிரான் கற்றதிற்பின் - ஸ்வாமி அருளிச்செய்த அமலனாதிபிரான் நமக்கு கிடைக்கப்பெற்றோம் என்று நன்குடனே
கொண்டாடும் நாள் - ஆராதித்து கொண்டாடும் நாள்
Comments
Post a Comment