Skip to main content

Posts

Showing posts with the label உபதேச இரத்னமாலை - பாசுரம் 3: பதவுரை

உபதேச இரத்னமாலை - பாசுரம் 3: பதவுரை

உபதேசஇரத்னமாலை - பாசுரம் 3:   *ஆழ்வார்கள் வாழி -* பன்னிரு ஆழ்வார்களுக்கு பல்லாண்டு வாழி  *அருளிச்செயல் வாழி* - அவ்வாழ்வார்கள் அருளிசெய்த நாலாயிர திவ்யப்பிரபந்தங்கள் வாழி  *தாழ்வாதுமிழ்* - குறைவொன்றும் இல்லாத  *குரவர் தாம் வாழி* - ஆச்சார்யர்கள் வாழி  *ஏழ்பாரும் உய்ய* - ஏழுலகத்தினில் வாழ்பவர்கள் யாவரும் வாழ  *அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி* - உபயமாக ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அருளிய அனைத்தும் வாழி  *செய்யமறை தன்னுடனே சேர்ந்து* - இவை அனைத்தும் வேதங்களோடு கூடி வாழ்ந்திடுகவே!