Skip to main content

Posts

Showing posts with the label துருவ மஹாராஜருடைய வைபவம்-2

துருவ மஹாராஜருடைய வைபவம்-2

 துருவ மஹாராஜருடைய வைபவம் அதைக் கேட்ட துருவன், “தாயே! நீ சொன்ன வார்த்தைகள், சுருசி சொன்ன கொடிய நஞ்சினால் பிளந்த என் இதயத்தில் பதியவில்லை. ஐஸ்வர்யகர்வத்தால் அவளால் நிராகரிக்கப்பட்ட நான், மிகவும் உத்தமமான உயர்ந்த பதவியை அடைய ப்ரயத்தனம் செய்கிறேன். புண்ணியசாலி என்று நீ கொண்டாடுகின்ற சுருசியின் கர்ப்பத்தில் பிறவாமல்,உன்னுடைய கர்பத்திலே நான் பிறந்தவனானாலும், என்னுடைய முயற்சி பலன் அளிக்காமல் போகாது.  என் அண்ணன் உத்தமனே, என் தந்தையின் ராஜ்யத்தை ஆளட்டும். நான் என்னுடைய முயற்சியினாலும், சக்தியினாலும் அதைவிட உயர்ந்த பதவியை நிச்சயம் அடைவேன். ஒருவர் கொடுத்ததைப் பெற்று மகிழாமல் நானே முயன்று, என் தகப்பனுக்கும் துர்லபமான மிகவும் உயர்ந்த பதவியை எனது தவத்தினால் சம்பாதிக்கிறேன்!" என்று சொல்லித் தன் தாயின் அனுமதியையும் ஆசியையும் பெற்று, அங்கிருந்து அதிவிரைவாகப் புறப்பட்டு நாட்டைக் கடந்து, அருகாமையிலிருந்த ஒரு காட்டுக்குச் சென்றான். அங்கே, மான் தோல்களைத் தரித்து, குசப்புல்லை ஆசனமாகக் கொண்டு, ஏழு முனிவர்களான சப்த ரிஷிகள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைக் கண்ட துருவன் வணங்கி, "மஹாமுனிவர்களே! நான் மன்...