பாசுரம்: முப்பத்து மூவ ரமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய் செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய். பதவுரை: முப்பத்து மூவர் அமரர்க்கு-முப்பத்து முக்கோடி தேவர்கட்கு முன்சென்று- (இடர் வருவதற்கு) முன்னமே எழுந்தருளி கப்பம்-(அவர்களுடைய)நடுக்கத்தை தவிர்க்கும் - போக்கியருளவல்ல கலியே-பலத்தையுடைய கண்ணபிரானே துயில் எழாய்-படுக்கையினின்றும் எழுந்திராய் செப்பம் உடையாய்(ஆச்ரிதர்களை ரக்ஷிக்கும் விஷயத்தில்) நேர்மை உடையவனே; திறல் உடையாய்- (ஆச்ரித விரோதிகளை அழியச்செய்யவல்ல) பலத்தை உடையவனே! செற்றார்க்கு-எதிரிகளுக்கு வெப்பம்-துக்கத்தை கொடுக்கும்-தரும்படியான விமலா - பரிசுத்தனே! துயில எழாய் செப்பு அன்ன-பொற்கலசம் போன்ற மென்முலை- மிருதுவான முலைகளையும் செவ்வாய்-சிவந்த வாயையும் சிறு மருங்குல் - நுண்ணிய இடையையுமுடைய நப்பின்னை நங்காய் - நப்பின்னை பிராட்டியே! திருவே-பெரிய பிராட்டியை ஒத...
YathirajaSampathKumar Iyengar's Blog