உபதேச இரத்னமாலை - பாசுரம் 4 : *பொய்கையார்* - இப்பூவுலகில் முதலில் தோன்றிய ஆழ்வார் பொய்கையாழ்வார் *பூதத்தார்* - பூதத்தாழ்வார் இரண்டாமவர் *பேயார்* - மூன்றாவதாக தோன்றியவர் *புகழ்மழிசை ஐயன்* - புகழையுடைய திருமழிசை ஆழ்வார் நான்காவதாக தோன்றினவர் *அருள்மாறன்* - திருமாலின் அருள் நிரம்பப்பெற்ற ஸ்வாமி நம்மாழ்வார் ஐந்தாவதாக தோன்றினார் *சேரலர்கோன்* - சேர குல மன்னனான குலசேகராழ்வார் ஆறாமவர் *துய்யப்பட்ட நாதன்* - பவித்ரமான பரிசுத்தமான பெரியாழ்வார் ஏழாவதாக அவதரித்தவர் *அன்பர்தாள்தூளி* - நண்பரான தொண்டர்களின் பாத தூளி தானே என்னும்படி வந்து தோன்றின தொண்டரடிப்பொடியாழ்வார் எட்டாமவர் *நற்பாணன்* - லோகாசாரங்கமுனிவரால் கல்லடி பட்டாலும் சாத்விகமாக அவ்விடம் விட்டு நகர்ந்த நம் திருப்பாணாழ்வார் ஒன்பதாவதாக வந்து தோன்றியவர் *நன்கலியன்* - நம் நாராயணனே "கலியனோ?" என்று வியந்த திருமங்கையாழ்வார் பத்தமாவர் *ஈதிவர்* - (ஈது + இவர்) இதுவே இவர்களது *தோற்றத்தடைவாமிங்கு* - (தோற்றத்து அடைவு) தோன்றின வரிசைக்கிரமம...
YathirajaSampathKumar Iyengar's Blog