கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 3 : திரிதந்தாகிலும் * தேவ பிரானுடை* கரிய கோலத்* திரு உருக் காண்பான் நான்* பெரிய வண்குருகூர்* நகர் நம்பிக்கு ஆள் உரியனாய்* அடியேன் பெற்ற நன்மையே* திரிதந்தாகிலும் - தேவுமற்றறியேன் என்று இருந்தாலும் (ஆழ்வாரைத்தவிர வேறு எந்த தெய்வத்தை பற்றியும் அறிய வேண்டாம் என்று இருந்தாலும்) தேவ பிரானுடை - எம்பெருமானே என்மேல் கடாக்ஷித்தருளி அவனுடைய கரிய கோலத்திரு உரு - உகப்பான கரிய கார்முகில் போன்ற சேவையை தன் தேவிமார்களுக்கும் ஆழ்வாருக்கு சாதித்தபடியே காண்பான் நான் - அடியேனுக்கும் சாதிக்கப்பெற்றேன் பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்கு - பெருமையும் புகழும் மிக்க திருக்குருகூரில் அவதரித்த சிறந்த கல்யாண குணங்களையுடைய ஆழ்வாருக்கே ஆள் உரியனாய் அடியேன் - உரிய அடியனாய் இருக்கப்பெற்றது பெற்ற நன்மையே - அடியேன் பெற்ற பெரும் பேறு கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 4 : நன்மையால் மிக்க* நான்மறையாளர்கள்* புன்மையாகக்* கருதுவர் ஆதலின்* அன்னையாய் அத்தனாய்* என்னை ஆண்டிடும் தன்மையான்* சடகோபன் என் நம்பியே* நன்மையால் மிக்க - ஆத்ம குணங்களோடு அறநெறியில் நிற்பவர்கள் ...
YathirajaSampathKumar Iyengar's Blog