பாசுரம்: எல்லே இளங்கிளியே இன்ன முறங்குதியோ சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன் வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய் பதவுரை: இளம் கிளியே -(பேச்சிலும் அழகிலும்) இளமை தங்கிய கிளிபோலிருப்பவளே! எல்லே- (உன் பேச்சின் இனிமை) என்னே! இன்னம்-எல்லோரும் வந்து நின்ற பிறகும் உறங்குதியோ - தூங்குகிறாயோ? (என்று எழுப்ப) நங்கைமீர்- பெண் பிள்ளைகளே! சில் என்று அழையேன்மின்- சிலுகு சிலுகு என்று அழைக்காதீர்கள் போதர்கின்றேன்- (இப்போதே) புறப்பட்டு வருகிறேன் (என்று உள்ளிருப்பவள் விடைகூற,) வல்லை-(வாய்ப்பேச்சில் நீ ) ஸமர்த்தையாயிராநின்றாய் உன் கட்டுரைகள்—உன்னுடைய கடுஞ்சொற்களையும் உன் வாய்-உன்னுடைய வாயையும். பண்டே அறிதும்- நெடுங்காலமாகவே நாங்கள் அறிவோம் (என்று எழுப்பு கிறவர்கள் சொல்ல) நீங்களே வல்லீர்கள்—(இப்படி எதிர்வாதம் செய்யும்) நீங்களே வாய் வன்மையுடையவர்கள் நானேதான் ஆயிடுக-(அன்றி...
YathirajaSampathKumar Iyengar's Blog