Skip to main content

Posts

Showing posts with the label கண்ணிநுண் சிறுத்தாம்பு பதவுரை பாசுரம் 1 & 2

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பதவுரை - பாசுரம் 1 & 2

ஸ்வாமி மதுரகவியாழ்வாரின் திருநக்ஷத்ரமான இன்று (சித்திரையில் சித்திரை) தொடங்கி 12 நாட்கள் கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம் மற்ற பதிவுகளோடும் சேர்ந்து வரும். தாஸன்   ஸ்வாமி மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணிநுண் சிறுத்தாம்பு தனியன் - (ஸ்வாமி நாதமுனிகள் அருளிச்செய்தது): அவிதித விஷயாந்தரஸ் ஸடாரே: உபநிஷதாம் உபகாந மாத்ரபோக: அபிச குணவஸாத் ததேக ஸேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து. அவிதித விஷயாந்தரஸ் - நம்மாழ்வாரைத்தவிர மற்ற எதையும் அறியாதவராக ஸடாரே: - ஆழ்வாருடைய ஈரச்சொற்களான உபநிஷதாம் - திருவாய்மொழியையை உபகாந மாத்ரபோக: -  நித்யம் அனுபவிப்பதே தனக்கு எல்லாம் என்று உடையவரும் அபிச - பெருமளவு (அளவின்றி) குணவஸாத் - ஆழ்வாருடைய கருணை எனும் குணத்தினால் ததேக - அவருக்கே ஸேஷி - தன்னை அடிமையாக்கிக்கொண்டிருப்பவருமா கிய மதுரகவிர் - ஸ்வாமி மதுரகவியாழ்வாரை (மம) ஹ்ருதயே - என் இதயத்தில் மமாவிரஸ்து - எழுந்தருளியிருக்க வேண்டும். வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறெங்கள் வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார் எம்மை ஆள்வார் அவரே அரண். வேறொன்றும் - ஆழ்வாரைத்தவிர மற்ற எதையும் நா...