ஸ்வாமி மதுரகவியாழ்வாரின் திருநக்ஷத்ரமான இன்று (சித்திரையில் சித்திரை) தொடங்கி 12 நாட்கள் கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம் மற்ற பதிவுகளோடும் சேர்ந்து வரும். தாஸன்
ஸ்வாமி மதுரகவியாழ்வார் அருளிச்செய்த
கண்ணிநுண் சிறுத்தாம்பு
அவிதித விஷயாந்தரஸ் ஸடாரே: உபநிஷதாம் உபகாந மாத்ரபோக:
அபிச குணவஸாத் ததேக ஸேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.
அவிதித விஷயாந்தரஸ் - நம்மாழ்வாரைத்தவிர மற்ற எதையும் அறியாதவராக
ஸடாரே: - ஆழ்வாருடைய ஈரச்சொற்களான
உபநிஷதாம் - திருவாய்மொழியையை
உபகாந மாத்ரபோக: - நித்யம் அனுபவிப்பதே தனக்கு எல்லாம் என்று உடையவரும்
அபிச - பெருமளவு (அளவின்றி)
குணவஸாத் - ஆழ்வாருடைய கருணை எனும் குணத்தினால்
ததேக - அவருக்கே
ஸேஷி - தன்னை அடிமையாக்கிக்கொண்டிருப்பவருமா
மதுரகவிர் - ஸ்வாமி மதுரகவியாழ்வாரை
(மம) ஹ்ருதயே - என் இதயத்தில்
மமாவிரஸ்து - எழுந்தருளியிருக்க வேண்டும்.
வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறெங்கள்
வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே அரண்.
வேறொன்றும் - ஆழ்வாரைத்தவிர மற்ற எதையும்
நானறியேன் - அடியேன் அறிந்திலேன்
வேதம் தமிழ் செய்த - வேதமனைத்தையும் தமிழிலாக்கிய
மாறன் சடகோபன் - எவராலும் கடக்கமுடியாத சடம் எனும் வாயுவை தம் கால்களால் எட்டித்தள்ளி கோபித்து, உலக இயற்க்கையில் இருந்து மாறின மாறனான
வண்குருகூர் ஏறு - வளம் மிக்க குருகூரிலே புலவர்களுக்கெல்லாம் காளையாக வந்தவதரித்த ஸ்வாமி நம்மாழ்வார்
எங்கள் வாழ்வாம் - எங்களுக்கு வாழ்வளிக்க வந்தவர்
என்றேத்தும் - என்று போற்றும்
மதுரகவியார் - மதுரகவி ஆழ்வாரே
எம்மை ஆள்வார் - எம்மை ஆளும் நாதனாவார்
அவரே அரண் - அவரே எம்மை காக்கும் ஸ்வாமியும் ஆவார்.
கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 1 :
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என்னப்பனில்
நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே
கண்ணி - முடிச்சுகளை உடையதும்
நுண் - மிகவும் நுண்ணியதாவும் உள்ள
சிறுத்தாம்பினால் - சிறியதான கயிற்றால் (குட்டையான)
கட்டுண்ணப் பண்ணிய - தன்னைக்கட்டும் படி தானே அமைத்துக்கொடுத்த
பெருமாயன் - உயர்ந்த நிலையில் இருந்தாலும் தன்னை தாழ்த்திக்கொண்டு இருப்பவனும் ஆகிய
என்னப்பனில் நண்ணித் - (என் + அப்பன் + இல் ) - நம்மாழ்வாருக்கு உகப்பான கிருஷ்ணாவதாரத்தை அனுபவித்து, அதை விடுத்தது என் அப்பன் நம்மாழ்வாரே என்று, ஆழ்வாரைப்பெற்று (நண்ணி) அவரைத்தான் அனுபவிக்கும் போது
தென்குருகூர் நம்பி என்றக்கால் - திருக்குருகூரில் அவதரித்த கல்யாண குணங்கள் நிரம்பப்பெற்ற குணபூர்ணர் என்ற மாத்திரத்திலேயே
அண்ணிக்கும் - தித்திக்கும்
அமுதூறும் - அமுதமாகிய ஊற்று பெருக்கெடுத்தாற்போல்
என் நாவுக்கே - என் நா ஊறித்திளைக்கும்
கண்ணிநுன் சிறுத்தாம்பு - பாசுரம் 2:
நாவினாற்நவிற்றின்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே
தேவுமற்றறியேன் குருகூர்நம்பி
பாவினின்னிசை பாடித்திரிவனே.
நாவினாற் நவிற்றின்பம் எய்தினேன் - நாவினால் சொல்லப்படும் சொல் ஒன்றினாலேயே முழுமையான இன்பத்தையடைந்தேன்.
மேவினேன்- என் தலைக்கு மேலாக பெற்றேன்.
அவன் பொன்னடி - ஆழ்வாரது கமலப்பதங்களை.
மெய்மையே - இது சத்யமான ஒன்றாகும்.
தேவுமற்றறியேன்- வேறு தெய்வம் உண்டு என்று நான் அறியவும் வேண்டா.
குருகூர்நம்பி - தென்திருக்குருகூரில் அவதரித்த ஆழ்வாரைத் தவிர.
பாவினின்னிசை - திருவாய்மொழியின் இசையை
பாடித்திரிவனே - இவ்வுலகத்தில் தாரகமாய்ப் பாடித்திரிவனே.
Comments
Post a Comment