Skip to main content

Posts

Showing posts with the label Vishnu Puraanam

விஷ்ணு புராணம் - 4 - ஆத்யந்திகப் பிரளயம்

  கலியுக தர்மம்   (விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது) ஆத்யந்திகப் பிரளயம் மைத்ரேயரே! அறிவுடையவன் ஆத்யாத்மிகம் முதலிய தாபங்கள் மூன்றையும் அறிந்து ஞானமும் வைராக்கியமும் உண்டாகப் பெற்று மோக்ஷம் என்ற ஆத்யந்திக லயத்தை  அடைகிறான். ஆத்தியாத்மிக தாபமாவது தன் ஆன்மாவையும்  தேகத்தையும் பற்றிய துக்கமாகும். அது சரீரத்தைப் பற்றியதும் மனதைப் பற்றியதும் ஆகும். தலைவலி பீனசம், ஜ்வரம், சூலை, பகந்தரம், குன்மம், ரத்தபேதி, சோகை, சுவாசம், வாந்தி, கண் நோய், அதிசாரம், குஷ்டம், வாயுரோகம் இவை போன்ற ஏராளமான விஷயங்கள்  சரீரத்தைப் பற்றியவை.  காமம், குரோதம், பயம், த்வேஷம், லோபம், மோகம், துக்கம், சோகம், அசூயா, அவமானம், பகைபாராட்டுதல், முதலிய மனது சம்பந்தப்பட்டவை பலவாகும். ஆதி பௌதிகமாவது ஜந்துக்களைப் பற்றியது. மிருக, பக்ஷி, மனுஷ்ய,  பைசாச, ஸர்ப்ப, ராக்ஷஸஸாதிகளாலேயே உண்டாவதானால் அதுவும் பலவகைப்பட்டடது. ஆதிதைவிகம் என்பது தெய்வத்தால் வருவது. அதுவும் குளிர், காற்று, வெய்யில், மழை, இடி முதலியவற்றால் உண்டாகும் பலவகையாகும். இந்தத் தாபங்கள் மூன்றும் கருவினாலும் பிறப்பினாலும் இறப்பினாலு...

விஷ்ணு புராணம் - 3 - பிராகிருதப் ப்ரளயம்

  கலியுக தர்மம்   (விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது) பிராகிருதப் ப்ரளயம் "மைத்ரேயரே! இவ்விதமாகப் பெருமழை பொழிந்து அந்தத்தண்ணீர்ப் பெருக்கானது சப்தரிஷி மண்டலத்தையும் கவர்ந்து நிற்பதால் மூன்று உலகங்களும் ஏகார்ணவமாகிவிடும். அப்போது ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருமுகத்திலிருந்து ஒரு மூச்சுக் காற்று உண்டாகி, அந்தப் பெரிய மேகங்களையெல்லாம் நாசஞ் செய்து கொண்டு ஒரு நூற்றாண்டளவு வரை பெருங்காற்றாக வீசிக்கொண்டே இருக்கும்.  பின்னர் சர்வபூதமயனாகவும் நினைத்தற்கும் அரியனாயும் அனாதியாயும் பிரபஞ்சத்துக்கு ஆதியாயும் மகாப்பிரபுவாகவும் இருக்கும் ஸ்ரீஹரி பகவான் அந்தக் காற்றை அமுது செய்து ப்ரம்மரூபத்தோடு அந்த ஏகார்ணவத்தில், சேஷசயனத்தின் மீது ஜனலோகத்திலுள்ள சனக, சனந்தனர் முதலிய யோகிகளாலும், ப்ரம்மலோகத்திலுள்ள முமூட்சுக்களாலும்தியானிக்கப்பட்டவராய் தமது மாயா ஸ்வரூபமான யோகநித்திரையைக் கைக்கொண்டு ஸ்ரீவாசுதேவன் என்ற திருநாமமுடன் தம்மையே சிந்தித்தவண்ணம் திருக்கண்வளர்ந்தருள்வார். ஸ்ரீஹரி பகவான் இவ்வாறு ப்ரம்ம ரூபத்துடன் அந்தக் காலத்தில் துயில்கொள்ளும் காலம் நிமித்தமாக இருப்பதாலேயே, இவ்விதம் நடக்கும் பிர...

விஷ்ணு புராணம் - 2 - கலியின் குணம்

கலியுக தர்மம்   (விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது) கலியின் குணம் மைத்ரேயரே! மாபெரும் அறிஞரான வேத வியாசரும் கலிபுருஷன் விஷயத்தில் ஒரு விசேஷத்தைச் சொல்லியிருக்கிறார். அதையும் நாம் உமக்குச் சொல்கிறோம். ஒரு காலத்தில் தவமுனிவர்களிடையே ஒரு புண்ணிய வாதம் உண்டாயிற்று. அதாவது “கொஞ்சம் தருமம் செய்தாலும் பயன் அதிகமாகக் கிடைக்கும் காலம் எது? எவர் அத்தகைய தருமத்தை எளிதில் செய்வதற்கு உரியவர்கள்?” என்பதே அவர்களது விவாதமாகிவிட்டது. எனவே இந்த தர்மத்தைப் பற்றிய தெளிவு பெற, உண்மையை அறிந்து கொள்ள, முனிவர்கள் அனைவரும் வேதவ்யாச மகரிஷியின் ஆஸ்ரமத்தை நோக்கிச் சென்றார்கள். அப்போது என் மகனான வேதவ்யாசர், கங்கை நதியிலே நீராடிக் கொண்டிருந்தார். அதனால் அந்த முனிவர்கள் அவர் நீராடிவிட்டு வரும் வரையில் கரையோரமாக இருந்த மரங்களின் நிழல்களில் உட்கார்ந்திருந்தனர்.  அப்போது கங்கா தீர்த்தத்தில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்த என் குமாரர், முழுக்கிலிருந்து எழுந்து “சூத்திரன் ஸாது; கலி ஸாது” என்று முனிவர்களின் காதுகளில் கேட்கும்படிச் சொல்லிவிட்டு மீண்டும் நீரில் மூழ்கினார். பிறகு அவர் எழுந்து, “ஸாது ஸாது சூத்...

விஷ்ணு புராணம் - 1 - கலியுக தர்மம்

விஷ்ணு புராணம் (விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது) கலியுக தர்மம் மைத்ரேய முநி, ஸ்ரீபராசர மகரிஷியை நோக்கி, “முனிஸ்ரேஷ்டரே! உலக சிருஷ்டியையும் வம்சங்களையும் மன்வந்தரங்களின் நிலைகளையும் எனக்கு விளக்கமாகக் கூறினீர்கள். இனி கல்பத்தின் முடிவில் மகாப்ரளயம் பற்றியும் தாங்கள் கூறவேண்டும்!" என்று கேட்டார். "கல்பாந்தத்திலும் ப்ராகிருதத்திலும் பிரளயம் உண்டாகும் விதத்தைச் சொல்கிறேன், கேளுங்கள். நம்முடைய மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். நமது வருஷம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். இரண்டாயிரம் சதுர்யுகங்கள் பிரம்மனுக்கு ஒருநாள். சதுர்யுகம் என்பது கிருதயுகம், திரேதயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நான்கும் சேர்ந்ததாகும். இந்த நான்கு யுகங்களும் தேவமானத்தினால் பன்னீராயிரம் ஆண்டுகளாகும். மைத்ரேயரே! கல்பத்தின் ஆதியான கிருதயுகத்தையும் முடிவான கலியுகத்தையும் தவிர மற்றைய சதுர்யுகங்கள் யாவும் சமானமானவையே ஆகும். ஆதிக்ருத யுகத்திலே பிரம்மா எப்படிப்படைக்கிறாரோ, அப்படியே  இறுதியான கலியுகத்திலே சம்காரம் செய்கிறார்” என்று பராசரர் சொல்லும்போது, மைத்ரேயர் மற்றொரு விஷயத்தைப் பற்றிக் கேட்க ஆசைகொண்டு, மகரி...