பாசுரம்: உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் உங்கள் புழைக்கடை Q < நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணா பாடேலோரெம் பாவாய். பதவுரை: எங்களை - (உன் தோழியராகிய) எங்களை முன்னம் எழுப்புவான் - முதன் முதலில் எழுப்புவதாக வாய் பேசும்- வாயாலே சொல்லிவைத்த நங்காய் - பரிபூர்ணையே! நாணாதாய்- (சொன்னபடி செய்யாதொழிந்தோமே' என்னும்) வெட்கமுமற்றவளே! நா உடையாய்-(இன் சொற்களைப் பொழியும்) நாவை உடையவளே! உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள் - உங்களுடைய புழைக்கடையிலுள்ள தோட்டத்தில் விளங்கும் குளத்தினுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து-செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்—கருநெய்தல் மலர்கள் குவிந்துகொண்டன காண்! (மேலும்) செங்கல் பொடி கூறை- காஷாயம் படிந்த உடையை அணிந்தவரும் வெண்பல் - வெளுத்த பற்களையுடையவரும் தவத்தவர் - தபோவேஷத்தை உடையவருமான சைவஸந்யாஸிகளும் தங்கள் திருக்க...
YathirajaSampathKumar Iyengar's Blog