ஸ்ரீ: ஸ்ரீமதே ஸடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்ரீபராஸர பட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்க பாலகம் நாராயண முநிம் வந்தே ஜ்ஞாநாதி குணஸாகரம் (ஸ்ரீபராசர பட்டரின் சிஷ்யரும் ஸ்ரீரங்கத்தை அஷ்ட திக் பாலகர்களைப்போல பாதுகாப்பவரும் ஞான பக்தி வைராக்யக் கடலுமான ஸ்ரீநாராயண முநியை வணங்குகிறேன்.) ஸ்ரீ கூர நாராயண ஜீயர் திருவடிகளே சரணம் ஸ்வாமி எம்பாரின் இளைய சகோதரர் சிறிய கோவிந்தப் பெருமாளின் குமாரராக ஸ்வாமி ஸ்ரீரங்கத்தில் மார்கழி கேட்டையில் திருவவதாரம் செய்தார். ஸ்வாமி கூரத்தாழ்வானிடமும் பின்பு ஸ்வாமி ஸ்ரீ பராசர பட்டரிடமும் காலக்ஷேபம் கேட்டவர். இவருடைய திருக்குமாரர் “எடுத்தகை அழகிய நாராயணர்” ஆவார். ஸ்வாமி பராசர பட்டரின் காலத்திற்குப்பின்பு ஸ்ரீரெங்க ராமானுஜ மடத்திற்கு பட்டத்திற்கும் நிர்வாகத்திற்கும் எவரும் இல்லாத போது, ஸ்வாமி கூரத்தாழ்வான் ஆண்டாள் அம்மங்கார் ஆணைக்கிணங்க சன்யாஸ ஆஸ்ரமம் பெற்று "கூர நாராயண ஜீயர்" என்று திரு நாமம் சாற்றப்பெற்று திகழ்ந்தார். மேலும் நலம் திகழ் நாராயணஜீயர், நாராயணமுநி, பெரியஜீயர், ஸ்ரீரங்க நாராயணஜீயர், ஸுத்த ஸம்ப்ரதாய நிஷ்...
YathirajaSampathKumar Iyengar's Blog