*உபதேச இரத்னமாலை - பாசுரம் 14 :*
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப்
பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்
*பதவுரை:*
*ஏரார்* - (ஏர் + ஆர்) சீர்மை மிகுந்த
*வைகாசி விசாகத்தின்* - வைகாசிமாதத்து விசாகநாளின்
*ஏற்றத்தை* - பெருமையை
*பாரோரறியப்* - உலகோர்கள் அறிந்துகொள்ள
*பகர்கின்றேன்* - சொல்லுகின்றேன்
*சீராரும் வேதம்* - சீர்நிறைந்த வேதத்தை
*தமிழ்செய்த மெய்யன்* - தமிழில் திராவிடவேதமாக அருளிச்செய்த
*எழில் குருகை நாதன்* - அழகிய (ஆழ்வார்) திருநகரிக்கு நாதனாகிய ஸ்வாமி நம்மாழ்வார்
*அவதரித்த நாள்* - அவதாரம் செய்த நாள்
Comments
Post a Comment