*உபதேச இரத்னமாலை - பாசுரம் 13 :*
மாசிப் புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர்
தேசித் திவசத்துக்கு ஏது என்னில் -பேசுகின்றேன்
கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள்
*பதவுரை:*
*மாசிபுனர்பூசம் காண்மினின்று* - இன்றைய தினம் மாசி மாதத்து புனர்வசு நாளாகும். *மண்ணுலகீர்* - உலகோர்களே
*தேசித் திவசத்துக் கேதென்னில்* - பெருமை இந்த தினத்திற்கு என்னவென்றால்
*பேசுகின்றேன்* - சொல்லுகின்றேன்
கொல்லிநகர்கோன் - கொல்லி என்னும் நகரத்துக்கு தலைவரான
*குலசேகரன்* - ஸ்வாமி குலசேகராழ்வார்
*பிறப்பால்* - திருவவதாரத்தினால்
*நல்லவர்கள்* - சாதுக்கள்
*கொண்டாடும் நாள்* - குதூகலிக்கும் நாள்
Comments
Post a Comment