உபதேச இரத்னமாலை - பாசுரம் 2 :
*கற்றோர்கள் தாமுகப்பர் -* கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் இப்பிரபந்தத்தை உகப்பாய் ஏற்றிடுவார்
*கல்விதன்னில் ஆசையுள்ளோர் -* கற்பதனில் ஆசையுள்ளோர்
*பெற்றோமெனவுகந்து* - இது கிடைக்கப்பெற்றோமே என கொண்டாடி
*பின்புகற்பர்* - பிறகு இப்பிரபந்தத்தை கற்பார்கள்
*மற்றோர்கள்* - மேலே சொன்னது போல் இவ்விரண்டு நிலைகளிலும் சேராதோர்
*மாச்சர்யத்தாழிகளில்* - வெறுப்பினால் இதனையிகழ்ந்தால்
*வந்ததென்நெஞ்சே!* - நெஞ்சே, நமக்கு என்ன இழப்பு உள்ளது?
*இகழ்கை* - இப்படிப்பட்ட கிரந்தத்தினை இழப்பதென்பது
*ஆச்சர்யமோதானவர்க்கு* - ஆச்சர்யமானதா? (இல்லையே)
Comments
Post a Comment