மிகவும் அவசியமான நிச்சயம் விவாதிக்க வேண்டிய ஒரு தலைப்பு இன்று. காரணம், "Public Behaviour" என்று ஆங்கிலத்தில் இன்று பரவலாக பேசப்படும் ஒரு நிகழ்வு இது. பல லக்ஷம் செலவு செய்து பார்க்கக்கூடிய காணொளியும் இதைப்பற்றித்தான். மேலும் "Softskills Development" என்று அதிக கட்டணத்தோடு கற்றுக்கொள்ளும் கல்வியில் / பயிற்சியில் பெரிய பங்கு இந்த Public Behaviourக்கு உண்டு. அப்படி என்ன இதற்க்கு இவ்வளவு அவசியம்? இது சரியாக இல்லாவிட்டால் வாழ முடியாதா? எல்லோரும் இதையெல்லாம் பார்த்துதான் வாழ்கிறார்களா என்ன?
இது போன்ற எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் "ஆம்" என்பது தான். நாம் ஒரு கோவிலுக்கு செல்கிறோம், அல்லது ஒரு பொது இடத்திற்கு செல்கிறோம், அங்கு அமைதியாக, மிகவும் தன்னடக்கதோடு, ஒழுங்காக நடந்து கொள்பவரைப்பார்த்து நாமே என்ன சொல்கிறோம்? இருந்தால் இப்படி இருக்க வேண்டும். ஆனால் அது எப்படி சாத்தியம் ஆயிற்று என்றால், தொடர்ந்து நெறிப்படுத்துதல் மூலமாக. இறுதியில் நம் குழந்தைகளே அவ்வாறு செய்யும் போது, நம் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது, ஒரு திருப்தியும் எற்படும்.
எல்லாம் சரி, இதில் என்னவெல்லாம் அடக்கம்?
முதலில், என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதனை தெளிவாக எடுத்துக்கூறவேண்டும். அதன் வழி நடக்க பழக்கப்படுத்த வேண்டும். இன்றைய கால சூழ்நிலையில், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆசைப்படுவதை எல்லாம் கொடுக்க நினைத்து, நன்றாக வளர்க்க நினைத்து, நல்லவர்களாக வளர்க்க மறந்து விடுகிறார்கள். அப்படி என்ன நாங்கள் மறந்து விட்டோம்? எங்கள் குழந்தைகளை செல்லப்பிள்ளைகளாக வளர்ப்பது தவறா? இல்லை குற்றமா? என்றெல்லாம் நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. ஆனால் நிச்சயம் குற்றம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு உதாரணம் சொல்கிறேன். கோவிலுக்கு குழந்தைகளை கூட்டிச்செல்கிறோம். அங்கு செல்வது எதற்காக? என்ன எப்படி கேட்கிறீர்கள் என்று நீங்கள் என்னைப்பார்த்து கேட்கலாம். ஆனால், உண்மையிலேயே என்னக்கு பலமுறை இந்த சந்தேகம் வந்துள்ளது. காரணம், ஒரு ஆண், ஒரு பெண், ஒரு குழந்தை என ஒரு குடும்பமாக கோவிலுக்கு வருவார்கள். கோவிலுக்கு வரும் முன்னரே அந்த குழந்தை அதன் இயல்புக்கு ஏற்ப சுட்டித்தனதோடு இருக்கும். இப்போது நாம் தான் குழந்தைக்கு சொல்லித்தரவேண்டும், கோவிலுக்குள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று. இங்கு தான், ஒரு திருப்புமுனை நிகழும்.
நூற்றிற்கு எழுபது விழுக்காடு, கோவிலுக்குள் நுழைந்தவுடன் குழந்தை அதன் போக்கில் ஓட ஆரம்பிக்கும், அங்கிருக்கும் ஸ்வாமி திருவுருவங்களை தொட ஆரம்பிக்கும், சத்தமாக பேசும், தன் பெற்றோர்களை கூப்பிடும், வீல் என்று சத்தமிடும், மிக மிக குறைந்த சதவிகிதம் அமைதியாக பெற்றோருடன் செல்லும் குழந்தைகள். அப்போது பெற்றோர்களின் எதிர்வினை இருக்கிறதே, ஒரு வார்த்தை கூட குழந்தையைக் கட்டுப்படுத்துவது போல இருக்காது. சிலர், குழந்தையை கண்டுகொள்ளக்கூட மாட்டார்கள். வேண்டும் என்றால் மற்றவர்கள் காதை மூடிக்கொள்ளட்டும் என்பது போல. அப்போது, யாரவது, சத்தம் போடாதே! என்று குழந்தையிடம் சொன்னால், அவர்களை பயங்கவாதியைப்போல பார்ப்பார்கள்.
சிலர், குழந்தையை பிடித்துக்கொண்டு, நம்மை முறைத்துப்பார்ப்பார்கள். நாம், அஞ்சி நடுங்கி அமைதியாக போக வேண்டும் என்பது போல. சிலர், குழந்தையை, அடிக்கவே செய்வார்கள் நம்முன்பே. சிலர், குழந்தையின் கையைப்பிடித்து தர தரவென இழுத்துக்கொண்டு, கோவிலை விட்டே போய்விடுவார்கள். இங்கு, நாம் "சத்தம் போடாதே!" என்று சொன்னதன் விளைவு. இதன் அடிப்படையைப் பற்றி சிறிது பார்ப்போம். இங்கு, பெற்றோர்கள் கோவிலுக்கு குழந்தையை அழைத்துவருவதன் முன்னரே, நிச்சயம் குழந்தைக்கு ஒரு வகுப்பு எடுக்க வேண்டும், நாம் இப்போது கோவிலுக்கு செல்கிறோம், அங்கு அமைதியாக இருக்க வேண்டும், நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் தரும் "கடவுள்" அங்கிருக்கிறார். அதனால் நாம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்லி அழைத்துவர வேண்டும். கடைசிபக்ஷம், கோவிலுக்கு வந்த பின்னராவது, இதை செய்ய வேண்டும்.
இன்னும் சிலர், குழந்தை அப்படிதான் இருக்கும் என்று நம்மிடம் வாதிடுவார்கள். சில பெற்றோர்கள், குழந்தையிடம் சொல்வார்கள், அங்கு போய் விளையாடு என்று! ஏன் என்றால். இவர்கள் பேசிக்கொண்டிருப்பதற்கு குழந்தை இடையூறாக இருக்கக்கூடாது என்பதால். கோவில் என்ன விளையாட்டுக்கூடமா? யோசித்து பாருங்கள் எப்படி இருக்கும் என்று! இன்று கண் முன்னே நாம் காணலாம், பல முதியவர்கள், மனா நிம்மதிக்காக கோவிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு இது எப்படி இருக்கும் என்று பாருங்கள். இதை விட கொடுமையான விஷயம், இருந்து பெண்மணிகள், இருந்து குழந்தைகளைக் கூப்பிட்டுக் கொண்டு கோவிலுக்கு வந்துவிட்டால்!!!!! அங்கு, பிரளயமே நடந்தாலும், அவர்கள் பேசுவதை நிறுத்தமாட்டார்கள், மேலும், குழந்தைகளை யாரவது கண்டித்தால் கூட கண்டுகொள்ள மாட்டார்கள். குழந்தைகள் நம்மிடம் தயங்கி, அல்லது அஞ்சி, அவர்களிடம் சென்றால் தான் நாம் அவர்களை அக்குழந்தைகளின் தாய்மார்கள் என்று அடையாளம் காணவே முடியும். இல்லாவிட்டால், அவர்களின் பேச்சு, நிச்சயம் சுவாரஸ்யம் குறையாமல் போயிக்கொண்டேதான் இருக்கும். இதில், இதை படிக்கும் பலபேர், நீங்களே கூட நினைக்கலாம், அவர்களுக்கு மனம்விட்டு பேச கிடைத்த ஒரே இடம் இறைவனின் சன்னதி, அதனால் தன் என்று. ஆனால், மனம்விட்டு இறைவனிடம் பேசவில்லையே?
இப்போது நாம் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இடத்தில், நம் குழந்தை, நம் கையைப்பிடித்துக்கொண்டு, அமைதியாக நம்முடன் வந்து, பக்தி செலுத்தி, நிம்மதியாக நாமும் மற்றவர்களும் வழிபட எந்த இடையூறும் செய்யாமல் இருந்தால், எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் ஆலோசனை செய்து பாருங்கள். முடிந்தால், நீங்களும் கடைபிடியுங்கள், பிறருக்கும் ஆலோசனையாக தெரிவியுங்கள். நன்றி!
Comments
Post a Comment