Skip to main content

Posts

திருப்பாவை பாசுரம் 30 - பதவுரை

பாசுரம்: வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட வாற்றை யணிபுதுவைப் பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பா ரீரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்குந் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய். பதவுரை: வங்கம் கடல் - கப்பல்களையுடைய திருப்பாற்கடலை கடைந்த-(தேவர்களுக்காகக்) கடைந்த,  மாதவனை- ஸ்ரீய:பதியான கேசவனை - கண்ணபிரானை திங்கள் திருமுகத்து சே இழையார் - சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள் சென்று- அடைந்து இறைஞ்சி - வணங்கி அங்கு- அத்திருவாய்ப்பாடி யில் அப் பறை கொண்ட ஆற்றை-பிரஸித்தமான (தங்கள்) புருஷார்த்தத்தைப்பெற்ற வருத்தாந்தத்தை அணிபுதுவை- அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்த பை கமலம் தண் தெரியல் பட்டர்பிரான் - பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான குளிர்ந்த மாலையையுடைய பெரியாழ்வாருடைய திருமகளான கோதை-ஆண்டாள்.  சொன்ன- அருளிச்செய்த சங்கம் தமிழ் மாலை முப்பதும்-திரள் திரளாக அநுபவிக்கவேண்டிய தமிழ்மாலையாகிய இம்முப்பது பாசுர...
Recent posts

திருப்பாவை பாசுரம் 29 - பதவுரை

பாசுரம்: சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம்மேய்த் துண்ணுங் குலத்திற் பிறந்த நீ குற்றேவ லெங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் கோவிந்தா எற்றைக்கு மேழேழ் பிறவிக்கு முன்றன்னோ டுற்றோமே யாவோ முனக்கேநா மாட்செய்வோம் மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். பதவுரை: கோவிந்தா-கண்ணபிரானே! சிற்றஞ்சிறு காலே-உஷ: (அதிகாலையிலே) காலத்திலே  வந்து-(இங்கு) வந்து உன்னை சேவித்து- உன்னை வணங்கி உன் பொன்தாமரை அடி போற்றும் பொருள் -உனது அழகிய திருவடித்தாமரைகளை மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பலனை கேளாய் -கேட்டருளவேணும் பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ-பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக் குலத்தில் பிறந்த நீ எங்களை - எங்களிடத்தில் குற்றேவல்- அந்தரங்க கைங்கரியத்தை கொள்ளாமல் போகாது - திருவுள்ளம் பற்றா தொழியவொண்ணாது இற்றைப் பறைகொள்வான் அன்று காண் - இன்று (கொடுக்கப்படுகிற இப்) பறையைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம் எற்றைக்கும்-காலமுள்ளவளவும் ஏழ் ஏழ் பிறவிக்கும் - எவ்வளவு பிறவியெடுத்தபோதிலும் உன் தன்னோடு-உன்னோடே உற்றோமே ஆவோம் - உறவு உடைய...

திருப்பாவை பாசுரம் 28 - பதவுரை

பாசுரம்: கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா வுன்றன்னோ டுறவேல் நமக்கிங் கொழிக்க வொழியா(து) அறியாத பிள்ளைகளோ மன்பினாலுன் றன்னைச் சிறுபே ரழைத்தனவுஞ் சீறியருளாதே இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். பதவுரை: குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா—ஒரு குறையும் இல்லாதவனான கோவிந்தனே!  யாம் -நாங்கள் கறவைகள் பின் சென்று-பசுக்களின் பின்னே போய் கானம் சேர்ந்து-காடு சேர்ந்து உண்போம்-உண்டு திரிவோம் அறிவு ஒன்றும் இல்லாத-சிறிதும் அறிவற்ற ஆய்க்குலத்து-இடைக் குலத்தில் உன் தன்னை-உன்னை பிறவி பெறும் தனை புண்ணியம் உடையோம்-பிறக்கப் பெறுவதற்குத்தக்க புண்ணியமுடையவர்களாய் இராநின்றோம் இறைவா-எம்பிரானே!  உன் தன்னோடு உறவு-உன்னோடு (எங்களுக்குள்ள)உறவானது இங்கு நமக்கு ஒழிக்க ஒழியாது—இங்கு உன்னாலும் எங்களாலும் ஒழிக்க ஒழியமாட்டாது அறியாத பிள்ளைகளோம்-(உலகவழக்கொன்றும்) அறியாத சிறுபெண்களானநாங்கள்   உன்தன்னை- உன்னை அன்பினால் - பிரீதியினாலே சிறு பேர் அழைத்தனவும் - சிறிய பேராலே அழைத்ததைக் குறித்தும் நீ -(ஆச்ரிதவத...

திருப்பாவை பாசுரம் 27 - பதவுரை

பாசுரம்: கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை யுடுப்போ மதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: கூடாரை-தன் அடிபணியாதாரை,  வெல்லும் சீர்-ஜயிக்கின்ற குணங்களையுடைய கோவிந்தா-கோவிந்தனே! உன் தன்னை-உன்னை பாடி-வாயாரப்பாடி பறை கொண்டு- பறையைப் பெற்று யாம் பெறு சம்மானம் - (மேலும்) நாங்கள் அடையவிருக்கும் பரிசாவது நாடு புகழும் பரிசினால்- ஊரார் புகழும்படியாக சூடகம்—(கைக்கு ஆபரணமான) சூடகங்களும் தோள்வளை - தோள்வளைகளும் தோடு- (காதுக்கு ஆபரணமான) தோடுகளும் செவிப்பூ — கர்ண புஷ்பமும் பாடகம்-(காலுக்கு ஆபரணமான) பாதகடகமும் என்று அனைய பல் கலனும்-என்று சொல்லப்படும் இவ்வாபரணங்கள் போன்ற மற்றும் பல ஆபரணங்களையும் யாம் நன்றாக அணிவோம்-(உன்னாலும் நப்பின்னையாலும் அணிவிக்கப்பட்ட) நாங்கள் நன்றாக அணிந்துகொள்வோம் ஆடை-(உங்களால் அணிவிக்கப்ட்ட) ஆடைகளை உடுப்போம்- உடுத்திக்கொள்வோம் அதன் பின்னே -அதற்குப் பிறகு பால் சோறு - பாலால...

திருப்பாவை பாசுரம் 26 - பதவுரை

பாசுரம்: மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியமே Q < திருப்பாவை-இருபத்தாறாம் பாட்டு. ||| திருப்பாவை போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலி னிலையா யருளேலோ ரெம்பாவாய். பதவுரை: மாலே-(அடியாரிடத்தில்) அன்புடையவனே! மணி வண்ணா-நீலரத்னம்போன்ற வடிவையுடையவனே! ஆலின் இலையாய்-(ப்ரளயகாலத்தில்) ஆலந்தளிரில் கண்வளர்ந்தவனே!  மார்கழி நீராடுவான்-மார்கழி நீராட்டத்திற்காக மேலையார்-முன்னோர்கள் செய்வனகள்-செய்யும் கிரியைகளுக்கு வேண்டுவன-வேண்டும் உபகரணங்களை கேட்டியேல் -கேட்டாயாகில் (அவற்றைச் சொல்லுகிறோம்;)  ஞாலத்தை எல்லாம்-பூமிமுழுவதும் நடுங்க-நடுங்கும்படி முரல்வன-ஒலிக்கக்கூடிய பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே-பால்போன்ற நிறமுடையதான உன்னுடைய ஸ்ரீபாஞ்சஜந்யம்போன்ற சங்கங்கள் - சங்கங்களையும் போய் பாடு உடையன-மிகவும் இடமுடையனவாய் சால பெரு-மிகவும் பெரியனவான பறை-பறைகளையும் பல்லாண்டு இசைப்பார்- திருப்பல்லாண்டு பாடுமவர்களையும் கோலம் விளக்கு-மங்கள தீப...

திருப்பாவை பாசுரம் 25 - பதவுரை

பாசுரம்: ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில் ஒருத்தி மகனா யொளித்து வளரத் தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் ஒருத்திமகனாய் நெருப்பென்ன நின்ற நெடுமாலே யுன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமுஞ் சேவகமும் யாம்பாடி வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: ஒருத்தி-தேவகிப் பிராட்டியாகிற ஒருத்திக்கு மகன் ஆய்-பிள்ளையாய் பிறந்து-தோன்றி ஓர் இரவில்- (அவதரித்த அந்த) ஒப்பற்ற இரவிலேயே ஒருத்தி-யசோதைப் பிராட்டியாகிய ஒருத்தியுடைய மகன் ஆய்—பிள்ளையாக ஆகி ஒளித் துவளர-ஒளிந்திருந்து வளரும் காலத்தில் தான்--கம்ஸனாகிறவன் தரிக்கிலான் ஆகி-(ஒளிந்து வளருவதையும்) பொறுக்கமாட்டாதவனாய் தீங்கு நினைந்த- (இவனைக் கொல்லவேணும் என்னும்) தீச்செயலை நினைத்த கஞ்சன் - கம்ஸனுடைய கருத்தை - எண்ணத்தை பிழைப்பித்து-வீணாக்கி (கஞ்சன்) வயிற்றில் - அக்கம்ஸனுடைய வயிற்றில் நெருப்பு என்ன நின்ற-'நெருப்பு' என்னும்படி நின்ற நெடுமாலே-ஸர்வாதிகனே! உன்னை-உன்னிடத்தில் அருத்தித்து வந்தோம்-(எங்களுக்கு வேண்டியவற்றை) யாசித்துக்கொண்டு வந்தோம்;  பறை தருதி ஆகில்-எங்களுடைய விருப்ப...

திருப்பாவை பாசுரம் 24 - பதவுரை

பாசுரம்: அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகட முதைத்தாய் புகழ்போற்றி கன்று குணிலா வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடையா வெடுத்தாய் குணம்போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி என்றென்றுன் சேவகமே யேத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய். பதவுரை: அன்று—(இந்திரன் முதலானவர்கள் மஹாபலியினால் வருந்திய) அக்காலத்தில்  இவ்உலகம்-இந்த உலகங்களை அளந்தாய்-(இரண்டடிகளால்) அளந்தருளியவனே! அடி—(உன்னுடைய அந்தத்) திருவடிகள்  போற்றி—பல்லாண்டு பல்லாண்டு வாழ்க அங்கு-இராவணன் இருக்குமிடத்தில்  சென்று-எழுந்தருளி தென் இலங்கை-(அவன் நகராகிய) அழகிய இலங்கையை செற்றாய்-அழித்தவனே! திறல்-(உன்னுடைய) பலம் போற்றி-பல்லாண்டு வாழ்க! சகடம்-சகடாசுரனானவன்  பொன்ற-அழிந்துபோகும்படி உதைத்தாய்–(அச்சகடத்தை) உதைத்தவனே!  புகழ்—(உன்னுடைய) கீர்த்தியானது போற்றி - நீடூழி வாழ்க கன்று- கன்றாய் நின்ற வத்ஸாஸுரனை குணிலா-எறிதடியாகக் கொண்டு எறிந்தாய்-(விளங்கனியாய் நின்ற அஸுரன்மீது) எறிந்தருளியவனே! கழல்-(அப்போது மடக்கிநின்ற) உன் திருவடிகள் போற்றி - நீட...