*உபதேச இரத்னமாலை -* பாசுரம் 6 :
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - எப்புவியும்
பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
பேயாழ்வார் தேசுடனே தோன்று சிறப்பால்.
பாசுரம் 6 :
*ஐப்பசியில்* - ஐப்பசி மாதத்தில்
*ஓணம் அவிட்டம் சதயம் இவை* - திருஓணம், அவிட்டம், சதயம் ஆகிய நக்ஷத்திரங்கள்
*ஒப்பிலவா நாள்கள்* - ஒப்புயர்வற்ற நாள்களாகும் (ஏனென்றால்)
*உலகத்தீர்* - உலகிலுள்ளீர்களே!
*எப்புவியும் பேசுபுகழ்* - பரந்த உலகம் எங்கும் பேசுகின்ற புகழ் வாய்ந்த
*பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்* - முதல் ஆழ்வார்களாகிய
பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார்
*தேசுடனே தோன்று சிறப்பால்* - சிறந்த தேஜஸுடனே / புகழுடன்
திருவவதாரம் செய்தமையால்
Comments
Post a Comment