பாசுரம்:
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதா யறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
உம்பர்கோமானே உறங்கா தெழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
பதவுரை:
அம்பரமே - வஸ்திரங்களையும்
தண்ணீரே-ஜலத்தையும்
சோறே- சோற்றையுமே
அறம் செய்யும்- தர்மம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா-எம் ஸ்வாமியான நந்தகோபரே!
எழுந்திராய் - எழுந்திருக்கவேணும்
கொம்பு அனார்க்கெல்லாம்-வஞ்சிக்கொம்புபோன்ற பெண்களுக்கெல்லாம்.
கொழுந்தே - மேலாயிருப்பவளே!
குலம்விளக்கே - ஆயர்குலத்துக்கு மங்கள தீபமாயுள்ளவளே!
எம்பெருமாட்டி-எமக்குத் தலைவியாயிருப்பவளே!
அசோதாய்-
யசோதைப்பிராட்டியே!
அறிவுறாய் - உணர்ந்தெழுவாயாக
அம்பரம் ஊடு அறுத்து - ஆகாசவெளியைத் துளைத்துக்
கொண்டு,
ஓங்கி-உயர்ந்து,
உலகு அளந்த - ஸகல லோகங்களையும் அளந்தருளிய
உம்பர் கோமானே - தேவதேவனே!
உறங்காது- கண்வளர்ந்தருளாமல் எழுந்திராய் எழுந்திருக்க வேணும்;
செம் பொன் கழல் அடி- சிவந்த பொன்னால் செய்த வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையுடைய
செல்வா- ஸ்ரீமானே!
பலதேவா - பலதேவனே!
உம்பியும் நீயும்- உன் தம்பியாகிய கண்ணனும் நீயும்
உறங்கேல் - தூங்கா
தொழியவேணும்.
Comments
Post a Comment