பாசுரம்:
நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தங் கமழும் குழலீ கடைதிறவாய்
வந்தெங்குங் கோழி யழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை:
மதம் உந்து களிற்றன்- மதஜலத்தைப் பெருக விடுகின்ற யானை போல பலமுள்ளவராய்
ஓடாத தோள் வலியன் — (யுத்த பூமியில்) பின் வாங்கவேண்டாத தோள் வலியை உடையவரான
நந்த கோபாலன் - ஸ்ரீநந்தகோபருடைய
மருமகளே - மருமகளே!
நப்பின்னாய்-நப்பின்னை என்னும் பெயரை உடையவளே!
கந்தம் கமழும் குழலீ-பரிமளம் வீசும்படியான கூந்தலை உடையவளே!
கடை திறவாய்-வாயிலைத் திறப்பாயாக
கோழி-கோழிகள்
எங்கும் வந்து-நாற் புறங்களிலும் பரவி
அழைத்தன காண்- கூவினகாண்!
மாதவி பந்தல் மேல்-- குருக்கத்திக்
கொடிகளாலான பந்தல்மேல் (உறங்கும்)
குயில் இனங்கள்- குயில் கூட்டங்கள்
பல் கால்-பலதடவைகள்
கூவினகாண்- கூவாநின்றனகாண்
பந்து ஆர் விரலி—(கண்ணனை பந்துவிளையாட்டில் தோற்பிக்கைக்கு உபகரணமாயிருந்த)
விளங்கும் விரல்களையுடையவளே!
உன் மைத்துனன் பேர் பாட- உன் நாதனாகிய கண்ணபிரானுடைய நாமங்களை (நாங்கள்) பாடும்படியாக
சீர் ஆர் வளை ஒலிப்ப - சீர்மைபொருந்திய (உன்) கைவளைகள் ஒலிக்கும்படி
வந்து-நடந்துவந்து
செம் தாமரை கையால்-சிவந்த தாமரைபோன்ற உன் திருக்கையால்
மகிழ்ந்து திறவாய்-மகிழ்ச்சியுடன் கதவைத் திறப்பாயாக.
Comments
Post a Comment