Skip to main content

Posts

திருப்பாவை பாசுரம் 23 - பதவுரை

பாசுரம்:   மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்க மறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணாவுன் கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த காரிய மாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். பதவுரை: மாரி - மழைகாலத்தில் மலைமுழஞ்சில் - மலைக் குகையொன்றில் மன்னிகிடந்து -- (பேடையோடு ஒன்றாகப்) பொருந்திக்கிடந்து உறங்கும் - தூங்குகின்ற  சீரிய சிங்கம்-(வீர்யமாகிய) சீர்மையை உடைய சிங்கம் அறிவுற்று- உணர்ந்தெழுந்து தீ விழித்து- நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து வேரி மயிர் - பரிமளம் நிரம்பிய பிடரி மயிர்கள் பொங்க- எழும்படி எப்பாடும் - எல்லாப் பக்கங்களிலும் பேர்ந்து - அசைந்து உதறி - (தேஹத்தை) உதறி மூரி நிமிர்ந்து-உடல் ஒன்றாகும்படி நிமிர்ந்து முழங்கி-கர்ஜனை செய்து புறப்பட்டு- வெளிப்புறப்பட்டு போதரும் ஆ போலே - வருகிறது போல் பூவை பூ வண்ணா-காயாம்பூ போல் நிறத்தையுடையவனே!  நீ-நீ உன் கோயில் நின்று- உன்னுடைய திருக்கோயிலிலிருந்து இங்ஙனே போந்தருளி - இவ்விடத்திலே எழுந்த...

திருப்பாவை பாசுரம் 22 - பதவுரை

  பாசுரம்: அங்கண்மா ஞாலத் தரச ரபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ திங்களு மாதித்தியனு மெழுந்தாற்போல் அங்க ணிரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேற் சாப மிழிந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: அம் கண் மா ஞாலத்து அரசர் - அழகியதாய், இடமுடையதாய், பெரிதாயுள்ள பூமியில் (ஆண்டுவரும்) அரசர்கள் அபிமான பங்கமாய் வந்து-(தங்களுடைய) அஹங்காரம் குலைந்து வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே-உன் சிங்காசனத்தின் கீழே சங்கம் இருப்பார்போல்-திரளாகக் கூடி இருப்பதைப்போல் வந்து-(நாங்களும் நீயிருக்குமிடம்) வந்து தலைப்பெய்தோம்-அணுகினோம் கிங்கிணி வாய்ச்செய்த-கிங்கிணியின் வாய்போலே பாதிமலர்ந்த தாமரை பூ போலே- தாமரைப் பூவைப்போலே செம் கண் - சிவந்திருக்கும்  திருக்கண்கள் சிறுச்சிறிதே - சிறிது சிறிதாக எம்மேல் விழியாவோ -  (அடியாரான) எங்கள்மேல் விழிக்கமாட்டாவோ? திங்களும் ஆதித்தியனும்-சந்திரனும் ஸூர்யனும் எழுந்தால் போல்-உதித்தாற்போல் அம் கண் இரண்டும் கொண்டு-அழகிய கண்கள் இரண்டாலும் எங்கள் மேல ...

திருப்பாவை பாசுரம் 21 - பதவுரை

பாசுரம்: ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப்படைத்தான் மகனே! அறிவுறாய்! ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: ஏற்ற கலங்கள்—(தானாகச் சுரக்கும்) பாலை ஏற்றுக்கொள்ள இடப்பட்ட பாத்திரங்களெல்லாம் எதிர்பொங்கி-எதிரே பொங்கி மீது அளிப்ப-மேலே வழியும்படியாக மாற்றாதே-இடைவிடாமல் பால் சொரியும் - பாலைப் பொழியும்படியான வள்ளல்-வண்மையையுடைய பெரும் பசுக்கள் - பெரிய பசுக்களை  ஆற்ற படைத்தான் மகனே - விசேஷமாக உடையவரான நந்தகோபருக்குப் பிள்ளையானவனே!  அறிவுறாய்- திருப்பள்ளியுணரவேணும் ஊற்றம் உடையாய்-(மேலான ப்ரமாணமாகிற வேதத்தில் சொல்லப்படுகையாகிற) திண்மையை உடையவனே!  பெரியாய்-(அந்த வேதத்தாலும் அறியப்படாத) பெருமையை உடையவனே!  உலகினில்-இவ்வுலகத்தில் தோற்றம் ஆய் நின்ற-(ஸகல சேதனருடைய கண்ணுக்கும்) தோன்றி நின்ற சுடரே-தேஜோ ரூபியானவனே!  துயில் எழாய்- துயிலுணர்வாயாக மாற்றார்-உன் னுடைய எதிரிகள் உனக்கு வலி தொ...

திருப்பாவை பாசுரம் 20 - பதவுரை

பாசுரம்: முப்பத்து மூவ ரமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய் செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய். பதவுரை: முப்பத்து மூவர் அமரர்க்கு-முப்பத்து முக்கோடி தேவர்கட்கு முன்சென்று- (இடர் வருவதற்கு) முன்னமே எழுந்தருளி கப்பம்-(அவர்களுடைய)நடுக்கத்தை தவிர்க்கும் - போக்கியருளவல்ல கலியே-பலத்தையுடைய கண்ணபிரானே துயில் எழாய்-படுக்கையினின்றும் எழுந்திராய் செப்பம் உடையாய்(ஆச்ரிதர்களை ரக்ஷிக்கும் விஷயத்தில்) நேர்மை உடையவனே;  திறல் உடையாய்- (ஆச்ரித விரோதிகளை அழியச்செய்யவல்ல) பலத்தை உடையவனே!  செற்றார்க்கு-எதிரிகளுக்கு வெப்பம்-துக்கத்தை கொடுக்கும்-தரும்படியான விமலா - பரிசுத்தனே! துயில எழாய் செப்பு அன்ன-பொற்கலசம் போன்ற  மென்முலை- மிருதுவான முலைகளையும் செவ்வாய்-சிவந்த வாயையும் சிறு மருங்குல் - நுண்ணிய இடையையுமுடைய நப்பின்னை நங்காய் - நப்பின்னை பிராட்டியே! திருவே-பெரிய பிராட்டியை ஒத...

திருப்பாவை பாசுரம் 19 - பதவுரை

பாசுரம்: குத்து விளக்கெரியக் கோட்டுக்காற் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை எத்தனை போதுந் துயிலெழ வொட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய். பதவுரை: குத்து விளக்கு-நிலைவிளக்கானது எரிய- எரியா நிற்க கோடு கால் கட்டில் மேல்-யானைத் தந்தங்களால் செய்த கால்களையுடைய கட்டிலிலே மெத்தென்ற - மெத்தென்றிருக்கும் பஞ்ச சயனத்தின் மேல் ஏறி-பஞ்சினாலான படுக்கையின் மீது ஏறி கொத்து அலர் பூ குழல்-கொத்துக் கொத்தாக மலரும் பூக்களை அணிந்த குழலையுடைய நப்பின்னை- நப்பின்னைப் பிராட்டியுடைய கொங்கைமேல் - திருமுலைத் தடங்களின்மேலே வைத்து கிடந்த மலர் மார்பா- (தன்னுடைய) அகன்ற மார்பை வைத்துக் கிடப்பவனே! வாய் திறவாய்--வாய் திறந்து வார்த்தை சொல்லுவாயாக மைதடம் கண்ணினாய்-மையிட்டலங்கரித்த பரந்த கண்களை உடையவளே!  நீ-நீ உன் மணாளனை-உனக்குக் கணவனான கண்ணனை எத்தனை போதும்-ஒரு கணநேரமும் துயில் எழ- திருப்பள்ளியெழ ஒட்டாய்காண்-சம்மதிக்கிறாயில்லை எத்தனையேலும் - சிறிதுபோதும் பிரிவ...

திருப்பாவை பாசுரம் 18 - பதவுரை

பாசுரம்: உந்து மதகளிற்ற னோடாத தோள்வலியன் நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய் கந்தங் கமழும் குழலீ கடைதிறவாய் வந்தெங்குங் கோழி யழைத்தனகாண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச் செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: மதம் உந்து களிற்றன்- மதஜலத்தைப் பெருக விடுகின்ற யானை போல பலமுள்ளவராய் ஓடாத தோள் வலியன் — (யுத்த பூமியில்) பின் வாங்கவேண்டாத தோள் வலியை உடையவரான நந்த கோபாலன் - ஸ்ரீநந்தகோபருடைய  மருமகளே - மருமகளே!  நப்பின்னாய்-நப்பின்னை என்னும் பெயரை உடையவளே!  கந்தம் கமழும் குழலீ-பரிமளம் வீசும்படியான கூந்தலை உடையவளே!  கடை திறவாய்-வாயிலைத் திறப்பாயாக கோழி-கோழிகள் எங்கும் வந்து-நாற் புறங்களிலும் பரவி அழைத்தன காண்- கூவினகாண்! மாதவி பந்தல் மேல்-- குருக்கத்திக் கொடிகளாலான பந்தல்மேல் (உறங்கும்)  குயில் இனங்கள்- குயில் கூட்டங்கள்  பல் கால்-பலதடவைகள்  கூவினகாண்- கூவாநின்றனகாண் பந்து ஆர் விரலி—(கண்ணனை பந்துவிளையாட்டில் தோற்பிக்கைக்கு உபகரணமாயிருந்த) விளங்கும் விரல்களையுடையவளே!...

திருப்பாவை பாசுரம் 17 - பதவுரை

பாசுரம்:  அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய் கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெரு மாட்டி யசோதா யறிவுறாய் அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த உம்பர்கோமானே உறங்கா தெழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய். பதவுரை: அம்பரமே - வஸ்திரங்களையும்  தண்ணீரே-ஜலத்தையும் சோறே- சோற்றையுமே அறம் செய்யும்- தர்மம் செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா-எம் ஸ்வாமியான நந்தகோபரே!  எழுந்திராய் - எழுந்திருக்கவேணும் கொம்பு அனார்க்கெல்லாம்-வஞ்சிக்கொம்புபோன்ற பெண்களுக்கெல்லாம்.  கொழுந்தே - மேலாயிருப்பவளே!  குலம்விளக்கே - ஆயர்குலத்துக்கு மங்கள தீபமாயுள்ளவளே!  எம்பெருமாட்டி-எமக்குத் தலைவியாயிருப்பவளே!  அசோதாய்- யசோதைப்பிராட்டியே!  அறிவுறாய் - உணர்ந்தெழுவாயாக அம்பரம் ஊடு அறுத்து - ஆகாசவெளியைத் துளைத்துக் கொண்டு,  ஓங்கி-உயர்ந்து,  உலகு அளந்த - ஸகல லோகங்களையும் அளந்தருளிய  உம்பர் கோமானே - தேவதேவனே!  உறங்காது- கண்வளர்ந்தருளாமல் எழுந்திராய் எழுந்திருக்க வேணும்;  செம் பொன் கழல் அடி- சி...