Skip to main content

Posts

Showing posts from May, 2022

துருவ மஹாராஜருடைய வைபவம்-3

  துருவ மஹாராஜருடைய வைபவம் பிறகு, பலவித ஆயுதங்களுடன் அக்னிஜ்ஜவாலை வீசும் முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றி போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள். குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக் கொண்டு அகோரமாக ஊளையிட்டன. சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் “இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்! தின்னுங்கள்!'' என்று பெருங்கூச்சலிட்டார்கள். துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதைலயப்படுத்தியதால், அப்பூத கணங்களின் சப்தங்களும் அச்சுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற்போயின.  அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திரமான சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்துக் கொண்டு, மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன. அதைக் கண்ட தேவதைகள் துருவ மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து, லோகாபிதாவான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து, “தேவ தேவனே! 'துருவனின் தவ மகி...

துருவ மஹாராஜருடைய வைபவம்-2

 துருவ மஹாராஜருடைய வைபவம் அதைக் கேட்ட துருவன், “தாயே! நீ சொன்ன வார்த்தைகள், சுருசி சொன்ன கொடிய நஞ்சினால் பிளந்த என் இதயத்தில் பதியவில்லை. ஐஸ்வர்யகர்வத்தால் அவளால் நிராகரிக்கப்பட்ட நான், மிகவும் உத்தமமான உயர்ந்த பதவியை அடைய ப்ரயத்தனம் செய்கிறேன். புண்ணியசாலி என்று நீ கொண்டாடுகின்ற சுருசியின் கர்ப்பத்தில் பிறவாமல்,உன்னுடைய கர்பத்திலே நான் பிறந்தவனானாலும், என்னுடைய முயற்சி பலன் அளிக்காமல் போகாது.  என் அண்ணன் உத்தமனே, என் தந்தையின் ராஜ்யத்தை ஆளட்டும். நான் என்னுடைய முயற்சியினாலும், சக்தியினாலும் அதைவிட உயர்ந்த பதவியை நிச்சயம் அடைவேன். ஒருவர் கொடுத்ததைப் பெற்று மகிழாமல் நானே முயன்று, என் தகப்பனுக்கும் துர்லபமான மிகவும் உயர்ந்த பதவியை எனது தவத்தினால் சம்பாதிக்கிறேன்!" என்று சொல்லித் தன் தாயின் அனுமதியையும் ஆசியையும் பெற்று, அங்கிருந்து அதிவிரைவாகப் புறப்பட்டு நாட்டைக் கடந்து, அருகாமையிலிருந்த ஒரு காட்டுக்குச் சென்றான். அங்கே, மான் தோல்களைத் தரித்து, குசப்புல்லை ஆசனமாகக் கொண்டு, ஏழு முனிவர்களான சப்த ரிஷிகள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைக் கண்ட துருவன் வணங்கி, "மஹாமுனிவர்களே! நான் மன்...

துருவ மஹாராஜருடைய வைபவம்-1

துருவ மஹாராஜருடைய வைபவம் பராசரர் மகரிஷி மைத்ரேய முனிவரைப் பார்த்து, முநி ஸ்ரேஷ்டரே! சுவாயம்புவ மனுவுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என்னும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களிலே உத்தானபாதனுக்கு சுருசி, சுநீதி என்னும் இரண்டு மனைவியர் இருந்தார்கள். அவர்களில்  சுருசி என்பவள் உத்தானபாதனுக்கு மிகவும் பிரியமுள்ளவளாக இருந்தாள். அவளுக்கு உத்தமன் என்று ஒரு மகன் இருந்தான். அவன் தகப்பனுக்கு மிகவும் ப்ரியமகனாக இருந்தான். சுநீதியிடத்தில் அரசனுக்கு அவ்வளவு ப்ரியமில்லை. சுநீதிக்கு துருவன் என்ற மகன் பிறந்தான். அவன் நற்குண நற்செய்கைகளைக் கொண்ட ஒரு உன்னதமான ஆத்மா. ஒருநாள் சின்னஞ்சிறு குழந்தையாகிற துருவன் தன் தந்தையான மன்னன் உத்தானபாதனின் அந்தப்புரத்திற்குச் சென்றான். அங்கே, தன் தந்தையின் மடியில் தன் சகோதரன் உத்தமன் உட்கார்ந்திருப்பதைப் கண்டான். தானும் அவனைப் போல, உட்கார ஆசைப்பட்டு, தந்தையின் அருகே சென்றான். அப்போது சுருசி தன்னருகில் இருந்ததால், துருவன் விருப்பத்தை மன்னன் ஏற்கவில்லை. இப்படி தன் தந்தையின் மடியின்மீது உட்காரவந்த தன் சக்களத்தி மகனான துருவனைப் பார்த்து, சுருசி ஏளனமாகச் சிரித்து, '...

உபதேச இரத்னமாலை - பதவுரை

    ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச இரத்னமாலை பதவுரை உபதேச இரத்னமாலை - பாசுரம் 11 : மன்னியசீர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர் என்னிதனுக் கேற்ற மெனில் உரைக்கேன் - தன்னுபுகழ் மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால் நான்மறையோர் கொண்டாடும் நாள். மன்னிய சீர் - மிகவும் சிறப்பு பொருந்திய  மார்கழியில் கேட்டை இன்று - மார்கழிமாதத்தில் கேட்டை நாள் இன்று மாநிலத்தீர் - உலகத்தீர் என்னிதனுக்கேற்றமெனிலுறைக்கேன் - இம்மார்கழி கேட்டைக்கு என்ன சிறப்பு என்றால் சொல்லுகின்றேன்  துன்னுபுகழ் - மிக்க புகழையுடைய  மாமறையோன் - பரம வைஷ்ணவரான (வைதீகரான)  தொண்டரடிப்பொடியாழ்வார்  பிறப்பால் - தொண்டரடிப்பொடியாழ்வாருடைய திருவவதாரத்தினால்  நான்மறையோர் கொண்டாடும் நாள் - இது நமக்கான நாள் என்று எல்லா வைதீகர்களும் கொண்டாடும் நாள் உபதேச ரத்னமாலை - பாசுரம் 12 : தையில் மகம் இன்று தாரணீயிர் ஏற்றம் இந்தத் தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் துய்ய மதி பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று நற்றவர்கள் கொண்டாடும் நாள் தையில் மகம் இன்று - இன்றையதினம் தை மாதத்...

உபதேச இரத்னமாலை - பதவுரை

  ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச இரத்னமாலை பதவுரை உபதேச இரத்னமாலை - பாசுரம் 5 : அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த வாழ்வார்கள் இந்தவுலகி லிருணீங்க- வந்துதித்த மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர் தாமறிய ஈதென்று சொல்லுவோமி யாம். அந்தமிழால் - அழகிய தொன்மையான தமிழ் மொழியினால்  நற்கலைகள் - நல்ல தமிழ் பாசுரங்களைக்கொண்ட திவ்யப்ரபந்தங்களை  ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் - நன்கு ஆராய்ந்து பொருந்தும்படி அருளிச்செய்த ஆழ்வார்கள்  இந்தவுலகிலிருள்நீங்க - அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்த உலகத்தில் இக்காரிருள் நீங்க  வந்துதித்த - வந்து அவதாரம் செய்த  மாதங்கள் நாள்கள்தமை - மாதங்கள் மற்றும் நக்ஷத்திரங்களையும்  மண்ணுலகோர் - இப்பூவுலகில் வாழ்வோர் யாவரும்   தாமறிய - அவர்கள் தாம் அறிய  ஈதென்று - இது இவ்வாழ்வார் அல்லது ஆசாரியன் அவதார விசேஷம் என்று  சொல்லுவோம்யாம் - நாம் கூறுவோம் உபதேச இரத்னமாலை  - பாசுரம் 6 : ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை  ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - எப்புவியும்  பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வா...