Skip to main content

Posts

திருப்பாவை பாசுரம் 16 பதவுரை

பாசுரம்: நாயக னாய்நின்ற நந்தகோப(ன்) னுடைய கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண வாசல் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக் கறை பறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா நீ நேச நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். பதவுரை: நாயகன் ஆய் நின்ற-(எங்களுக்கு) ஸ்வாமியாயிருக்கிற நந்தகோபனுடைய-நந்தகோபருடைய கோயில்- திருமாளிகையை காப்பானே-காக்குமவனே!  கொடி தோன்றும்-த்வஜங்கள் விளங்காநிற்கும் தோரண வாசல்-தோரணவாசலை காப்பானே-காக்குமவனே! மணி-ரத்தினங்கள் பதிக்கப்பெற்ற கதவம்-கதவினுடைய தாள் - தாழ்ப்பாளை திறவாய்-திறக்கவேணும் ஆயர் சிறுமியரோமுக்கு-இடைச் சிறுமிகளான எங்களுக்கு மாயன் - ஆச்சரியச் செயல்களையுடையவனும் மணிவண்ணன்- நீலரத்தினம்போன்ற திரு நிறத்தையுடையவனுமான கண்ணபிரான் நென்னலே- நேற்றே அறை பறை வாய் நேர்ந்தான் - சப்திக்கும் பறையைக் கொடுப்பதாக வாக்களித்தான் துயில் எழ-(அவன்) தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும்படி  பாடுவான்-பாடுவதற்காக. தூயோமாய் வந்தோம்-பரிசுத்தைகளாக வந்திருக்கின்றோம் அம்மா- ஸ்வாமி!  முன்னம் முன்னம் - முதன...

உபதேச இரத்னமாலை - பாசுரம் 15 : பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 15 :* உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள் உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் -உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் *பதவுரை:* *உண்டோ வைகாசி விசாகத்துக் கொப்பொருநாள்* - வைகாசி மாதத்து விசாகத்துக்கு நாளுக்கு ஒப்பு ஒரு நாள் உண்டோ?  *உண்டோ சடகோபர்க்கொப்பொருவர்* - ஸ்வாமி நம்மாழ்வாருக்கொப்பான ஒரு ஆழ்வார் உண்டோ?  *உண்டோ திருவாய்மொழிக்கொப்பு?* - திருவாய்மொழிக்கு ஒப்பான பிரபந்தம் ஒன்று உண்டோ?  *தென் குருகைக்குண்டோ ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்?* - இந்த உலகில் தென் குருகையென்னும் (ஆழ்வார் திருநகரி) நகருக்கொப்பானதொரு நகர் உண்டோ?

உபதேச இரத்னமாலை - பாசுரம் 14 : பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 14 :* ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப் பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள் *பதவுரை:* *ஏரார்* - (ஏர் + ஆர்) சீர்மை மிகுந்த  *வைகாசி விசாகத்தின்* - வைகாசிமாதத்து விசாகநாளின்  *ஏற்றத்தை* - பெருமையை  *பாரோரறியப்* - உலகோர்கள் அறிந்துகொள்ள *பகர்கின்றேன்* - சொல்லுகின்றேன்  *சீராரும் வேதம்* - சீர்நிறைந்த வேதத்தை  *தமிழ்செய்த மெய்யன்* - தமிழில் திராவிடவேதமாக அருளிச்செய்த  *எழில் குருகை நாதன்* - அழகிய (ஆழ்வார்) திருநகரிக்கு நாதனாகிய ஸ்வாமி நம்மாழ்வார்  *அவதரித்த நாள்* - அவதாரம் செய்த நாள்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 13 : பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 13 :* மாசிப் புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர் தேசித் திவசத்துக்கு ஏது என்னில் -பேசுகின்றேன் கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால் நல்லவர்கள் கொண்டாடும் நாள் *பதவுரை:* *மாசிபுனர்பூசம் காண்மினின்று* - இன்றைய தினம் மாசி மாதத்து புனர்வசு நாளாகும். *மண்ணுலகீர்* - உலகோர்களே *தேசித் திவசத்துக் கேதென்னில்* - பெருமை இந்த தினத்திற்கு என்னவென்றால்  *பேசுகின்றேன்* - சொல்லுகின்றேன் கொல்லிநகர்கோன் - கொல்லி என்னும் நகரத்துக்கு தலைவரான  *குலசேகரன்* - ஸ்வாமி குலசேகராழ்வார் *பிறப்பால்* - திருவவதாரத்தினால்  *நல்லவர்கள்* - சாதுக்கள்  *கொண்டாடும் நாள்* - குதூகலிக்கும் நாள்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 12 : பதவுரை

*உபதேச ரத்னமாலை - பாசுரம் 12 :* தையில் மகம் இன்று தாரணீயிர் ஏற்றம் இந்தத் தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் துய்ய மதி பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று நற்றவர்கள் கொண்டாடும் நாள் *பதவுரை: * *தையில் மகம் இன்று* - இன்றையதினம் தை மாதத்தில் வரும் மகம் (நக்ஷத்திரம்) நாளாகும் *தாரணியீர்!* - உலகோர்களே *ஏற்றம் இந்த தையில் மகத்துக்கு* - என்ன பெருமை இந்த தையில் மகத்திற்கு என்று *சாற்றுகின்றேன்* - கூறுகின்றேன்  *துய்யமதி பெற்ற மழிசைப்பிரான்* - பரிசுத்தமான ஞானமுடைய திருமழிசையாழ்வார் *பிறந்த நாள் என்று* - திருவவதாரம் செய்த நாள் என்று  *நற்றவர்கள்* - பெரும் தவசீலர்கள்  *கொண்டாடும் நாள்* - குதூகலிக்கும் நாள்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 9 : பதவுரை

உபதேச இரத்னமாலை பாசுரம் 9 :  *மாறன் பணித்த* - ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த   *தமிழ்மறைக்கு* - திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களுக்கும்   *மங்கையர்கோன்* - திருமங்கைஆழ்வார்   *ஆறங்கம் கூற* - ஆறு அங்கங்களாக ஆறு பிரபந்தங்களை அருளிச்செய்ய   *அவதரித்த* - திரு அவதாரம் செய்த   *வீறுடைய* - பெருமை உடைய   *கார்த்திகையில் கார்த்திகைநாள்* - கார்த்திகை மாதத்து க்ருத்திகா (நக்ஷத்ரம்) நாள்   *இன்றென்று* - இன்று என்று   *காதலிப்பார்* - கொண்டாடுபவர்களுடைய    *வாய்த்த மலர்த்தாள்கள்* - திருவடிகளை   *நெஞ்சே! வாழ்த்து* - நெஞ்சமே உகந்து போற்று.

உபதேச இரத்னமாலை - பாசுரம் 8 : பதவுரை

பாசுரம் 8 :   *பேதைநெஞ்சே!* - ஞானமில்லாத மனமே!   *இன்றைப்பெருமை* - இன்று என்ன தினம் அதன் பெருமை என்னவென்று   *அறிந்திலையோ!* - அறிந்துகிள்ளவில்லையோ?   *ஏது பெருமை* *இன்றைக்கென்றென்னில்!* - இன்றைய நாளுக்கு என்ன பெருமை என்று எண்ணுகிறாயோ?  *ஓதுகின்றேன்* - சொல்லுகின்றேன்   *வாய்த்தபுகழ் மங்கையர்கோன்* - பெரும் புகழை உடையவரான திருமங்கையாழ்வார்   *மாநிலத்தில்* - இப்பூவுலகில்   *வந்துதித்த* - வந்து அவதாரம் செய்தருளிய *கார்த்திகையில்* *கார்த்திகைநாள் காண்* - கார்த்திகை மாதத்தில் வரும் க்ருத்திகா (நக்ஷத்ரம்) கண்டுகொள்.