Skip to main content

Posts

விஷ்ணு புராணம் - 5 - கேசித்வஜ - காண்டிக்ய விவாதம்

 விஷ்ணு புராணம்   கலியுக தர்மம்   (விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது)   கேசித்வஜ - காண்டிக்ய விவாதம் “நாம் முன்பு கூறியபடி, குணங்களும் விபூதிகளும் அவதார ஸ்வரூபமும் உள்ள பகவான், தத்துவம் உணர்த்தும் சாஸ்திரத்தினாலும் யோகத்தினாலும் வெளிப்படுத்தப்படுவான். இந்த இரண்டு ஞானமும்தான் அவனை அடைவதற்குச் சாதனமாகும், ஆகையால் சாஸ்திரங்களை நன்கு விசாரித்து, யோகத்தில் இறங்க வேண்டும். யோகத்தில் இறங்கிய பிறகு அந்த தத்வத்தை திடப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய யோகங்கள் இரண்டும் நன்றாய்ப் பரிமளித்தால் பரமாத்மா காணப்படுவான். அந்தப் பரமாத்மாவைக் காண்பதற்குச் சாஸ்திரம் ஒரு கண் யோகம் மற்றொரு உயர்ந்த கண். பரப்பிரஹ்மமானவன் இந்தக் கண்களால் காணக் கூடியவனே தவிர இந்த மாம்சங்களாலான  கண்களால் காணக்கூடியவனல்லன்” என்று பராசரர் உரைக்க, மைத்ரேயர் அவரை நோக்கி, “பராசர மகரிஷியே! எல்லாவற்றிற்கும் ஆதாரமான பரமேஸ்வரனை அடியேன் எத்தகைய யோகநெறியினால் காணமுடியுமோ அதை அடியேனுக்குச்சொல்லியருள வேண்டும்!” என்று ப்ரார்திக்க, "மைத்ரேயரே! பூர்வத்தில் காண்டிக்ய ஜனகருக்கு கேசித்வஜன் உபதேசித்தாற்போல், அந்த ...

அர்ச்சிராதி மார்க்கம்

அர்ச்சிராதி மார்க்கம்  (மோட்சம் அடையும் ஆத்மாக்கள் மட்டுமே இந்த வழியை அணுக முடியும். மீதமுள்ளவர்களுக்கு அல்ல) "முதலில் ஜீவாத்மா பிரிதல்": முதுகுத்தண்டை மத்தாக வைத்துக் கொண்டு உடல் முழுவதையும் கடைந்து, புலன்கள் மற்றும் பூத சூஷ்ஷுமங்கள் அனைத்தையும் ப்ராணவாயு மற்றும் மனதுடன் சேர்த்து கொட்டி ஆத்மாவை சரீரத்தில் இருந்து பிரித்து விடுகிறார் வைகுண்டநாதனான ஸ்ரீமன் நாராயணன். "இரண்டாவதாக  ஜீவாத்மா வெளியேறுதல்": இதயத்தில் இருந்து தலைக்கு 101 மிக நுண்ணிய நரம்புகள் (நாடிகள்) பிரயாணம் செய்கின்றன. அதில் 101வது நாடி சூஷூம்னா நாடி ஆகும். நம் ஆத்மா இந்த சூஷூம்னா நாடியை பற்றினால் தான் வைகுண்டம் செல்லும் அர்ச்சிராதி மார்கத்தில் ப்ரயாணிக்க முடியும். பூரண இருட்டிலே வைகுண்டநாதனே தன் திருமேனி ஒளியாலே ஆத்மாவுக்கு 101வது நாடியை பிடித்து கொடுக்க ஆத்மாவும் அதைப்பற்றி பிரம்மரந்திரம் என்னும்படியான உச்சம் தலையின் ஒரு சிறு துளை வழியாக வெளியேறுகிறது. மூன்றாவதாக "வைகுண்ட மார்க்கம்": ஆத்மா சரீரத்தில் இருந்து வெளியேறி பன்னிரண்டு (12) லோகங்கள் பிரயாணிக்க மிக நுண்ணிய உடலை வைகுண்டநாதன் கொடுக்க...

மந்திர ஸம்ஸ்காரம் - ரஹஸ்யத்ரயம்

மந்திர  ஸ ம்ஸ்காரம் -  ரஹஸ்யத்ரயம் மந்திர சம்ஸ்காரம் பஞ்ச ஸம்ஸ்காரத்தின் ஓர் அங்கம் ஆகும். இதில் ரஹஸ்யத்ரயம் என்று கொண்டாடப்படும் திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம் ஆகியன அடக்கம். திருமந்த்ரத்திற்கு  "மந்திர ராஜம்" என்ற பெயருண்டு. திருமந்திரம்: அஷ்டாக்ஷர (எட்டு எழுத்து உள்ளது) திருமந்திரம்:  “ஓம் நமோ நாராயணாய” இதில், ஓம் என்ற சொல் தான் ப்ரணவம் எனப்படுவது. இதிலிருந்து தான் அனைத்தும் ஏற்பட்டது. ப்ரணவம் தான் நமக்கும் பரமாத்வான ஸ்ரீமன் நாராயணனுக்கும் உள்ள பந்தத்தை உணர்த்துவது. இம்மந்திரம் பத்ரிகாஸ்ரமத்தில் நாராயண ரிஷியால் நரனுக்கு உபதேசிக்கப்பட்டதாகும். ப்ரணவமான "ஓம்" என்பதைப் பிரித்தால் அ, உ, ம கிட்டும். இங்கு  அ -  பரமாத்மா  உ - சேஷத்துவம் (தாஸ்யம், அடிமை செய்வது) ம - ஜீவாத்மா ஓம் - ஜீவாத்மா பரமாத்மாவுக்கே அடிமை செய்வது "நமோ" என்பதைப் பிரித்தால் ந, மோ ந - இல்லை  மோ - எனக்கு நமோ - எனக்காக இல்லை  (பகவானுக்காக என்று இருத்தல்) "நாராயணாய" என்பதைப் பிரித்தால் நார + அயணம்  என்று கிட்டும்.  இங்கு  நார - நீர் அயணம் - இருப்பிடம் நாரா...

ஸ்ரீ கூர நாராயண ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஸடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்ரீபராஸர பட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்க பாலகம் நாராயண முநிம் வந்தே ஜ்ஞாநாதி குணஸாகரம் (ஸ்ரீபராசர பட்டரின் சிஷ்யரும் ஸ்ரீரங்கத்தை அஷ்ட திக் பாலகர்களைப்போல பாதுகாப்பவரும்  ஞான பக்தி வைராக்யக் கடலுமான ஸ்ரீநாராயண முநியை வணங்குகிறேன்.) ஸ்ரீ கூர நாராயண ஜீயர் திருவடிகளே சரணம் ஸ்வாமி எம்பாரின் இளைய சகோதரர் சிறிய கோவிந்தப் பெருமாளின் குமாரராக ஸ்வாமி ஸ்ரீரங்கத்தில் மார்கழி கேட்டையில் திருவவதாரம் செய்தார். ஸ்வாமி கூரத்தாழ்வானிடமும் பின்பு  ஸ்வாமி ஸ்ரீ பராசர பட்டரிடமும் காலக்ஷேபம் கேட்டவர். இவருடைய திருக்குமாரர் “எடுத்தகை அழகிய நாராயணர்” ஆவார். ஸ்வாமி பராசர பட்டரின் காலத்திற்குப்பின்பு ஸ்ரீரெங்க ராமானுஜ மடத்திற்கு பட்டத்திற்கும் நிர்வாகத்திற்கும் எவரும் இல்லாத போது, ஸ்வாமி கூரத்தாழ்வான் ஆண்டாள் அம்மங்கார் ஆணைக்கிணங்க சன்யாஸ ஆஸ்ரமம் பெற்று "கூர நாராயண ஜீயர்" என்று திரு நாமம் சாற்றப்பெற்று திகழ்ந்தார்.  மேலும் நலம் திகழ் நாராயணஜீயர், நாராயணமுநி, பெரியஜீயர், ஸ்ரீரங்க நாராயணஜீயர், ஸுத்த ஸம்ப்ரதாய நிஷ்...

விஷ்ணு புராணம் - 4 - ஆத்யந்திகப் பிரளயம்

  கலியுக தர்மம்   (விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது) ஆத்யந்திகப் பிரளயம் மைத்ரேயரே! அறிவுடையவன் ஆத்யாத்மிகம் முதலிய தாபங்கள் மூன்றையும் அறிந்து ஞானமும் வைராக்கியமும் உண்டாகப் பெற்று மோக்ஷம் என்ற ஆத்யந்திக லயத்தை  அடைகிறான். ஆத்தியாத்மிக தாபமாவது தன் ஆன்மாவையும்  தேகத்தையும் பற்றிய துக்கமாகும். அது சரீரத்தைப் பற்றியதும் மனதைப் பற்றியதும் ஆகும். தலைவலி பீனசம், ஜ்வரம், சூலை, பகந்தரம், குன்மம், ரத்தபேதி, சோகை, சுவாசம், வாந்தி, கண் நோய், அதிசாரம், குஷ்டம், வாயுரோகம் இவை போன்ற ஏராளமான விஷயங்கள்  சரீரத்தைப் பற்றியவை.  காமம், குரோதம், பயம், த்வேஷம், லோபம், மோகம், துக்கம், சோகம், அசூயா, அவமானம், பகைபாராட்டுதல், முதலிய மனது சம்பந்தப்பட்டவை பலவாகும். ஆதி பௌதிகமாவது ஜந்துக்களைப் பற்றியது. மிருக, பக்ஷி, மனுஷ்ய,  பைசாச, ஸர்ப்ப, ராக்ஷஸஸாதிகளாலேயே உண்டாவதானால் அதுவும் பலவகைப்பட்டடது. ஆதிதைவிகம் என்பது தெய்வத்தால் வருவது. அதுவும் குளிர், காற்று, வெய்யில், மழை, இடி முதலியவற்றால் உண்டாகும் பலவகையாகும். இந்தத் தாபங்கள் மூன்றும் கருவினாலும் பிறப்பினாலும் இறப்பினாலு...

விஷ்ணு புராணம் - 3 - பிராகிருதப் ப்ரளயம்

  கலியுக தர்மம்   (விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது) பிராகிருதப் ப்ரளயம் "மைத்ரேயரே! இவ்விதமாகப் பெருமழை பொழிந்து அந்தத்தண்ணீர்ப் பெருக்கானது சப்தரிஷி மண்டலத்தையும் கவர்ந்து நிற்பதால் மூன்று உலகங்களும் ஏகார்ணவமாகிவிடும். அப்போது ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருமுகத்திலிருந்து ஒரு மூச்சுக் காற்று உண்டாகி, அந்தப் பெரிய மேகங்களையெல்லாம் நாசஞ் செய்து கொண்டு ஒரு நூற்றாண்டளவு வரை பெருங்காற்றாக வீசிக்கொண்டே இருக்கும்.  பின்னர் சர்வபூதமயனாகவும் நினைத்தற்கும் அரியனாயும் அனாதியாயும் பிரபஞ்சத்துக்கு ஆதியாயும் மகாப்பிரபுவாகவும் இருக்கும் ஸ்ரீஹரி பகவான் அந்தக் காற்றை அமுது செய்து ப்ரம்மரூபத்தோடு அந்த ஏகார்ணவத்தில், சேஷசயனத்தின் மீது ஜனலோகத்திலுள்ள சனக, சனந்தனர் முதலிய யோகிகளாலும், ப்ரம்மலோகத்திலுள்ள முமூட்சுக்களாலும்தியானிக்கப்பட்டவராய் தமது மாயா ஸ்வரூபமான யோகநித்திரையைக் கைக்கொண்டு ஸ்ரீவாசுதேவன் என்ற திருநாமமுடன் தம்மையே சிந்தித்தவண்ணம் திருக்கண்வளர்ந்தருள்வார். ஸ்ரீஹரி பகவான் இவ்வாறு ப்ரம்ம ரூபத்துடன் அந்தக் காலத்தில் துயில்கொள்ளும் காலம் நிமித்தமாக இருப்பதாலேயே, இவ்விதம் நடக்கும் பிர...

விஷ்ணு புராணம் - 2 - கலியின் குணம்

கலியுக தர்மம்   (விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது) கலியின் குணம் மைத்ரேயரே! மாபெரும் அறிஞரான வேத வியாசரும் கலிபுருஷன் விஷயத்தில் ஒரு விசேஷத்தைச் சொல்லியிருக்கிறார். அதையும் நாம் உமக்குச் சொல்கிறோம். ஒரு காலத்தில் தவமுனிவர்களிடையே ஒரு புண்ணிய வாதம் உண்டாயிற்று. அதாவது “கொஞ்சம் தருமம் செய்தாலும் பயன் அதிகமாகக் கிடைக்கும் காலம் எது? எவர் அத்தகைய தருமத்தை எளிதில் செய்வதற்கு உரியவர்கள்?” என்பதே அவர்களது விவாதமாகிவிட்டது. எனவே இந்த தர்மத்தைப் பற்றிய தெளிவு பெற, உண்மையை அறிந்து கொள்ள, முனிவர்கள் அனைவரும் வேதவ்யாச மகரிஷியின் ஆஸ்ரமத்தை நோக்கிச் சென்றார்கள். அப்போது என் மகனான வேதவ்யாசர், கங்கை நதியிலே நீராடிக் கொண்டிருந்தார். அதனால் அந்த முனிவர்கள் அவர் நீராடிவிட்டு வரும் வரையில் கரையோரமாக இருந்த மரங்களின் நிழல்களில் உட்கார்ந்திருந்தனர்.  அப்போது கங்கா தீர்த்தத்தில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்த என் குமாரர், முழுக்கிலிருந்து எழுந்து “சூத்திரன் ஸாது; கலி ஸாது” என்று முனிவர்களின் காதுகளில் கேட்கும்படிச் சொல்லிவிட்டு மீண்டும் நீரில் மூழ்கினார். பிறகு அவர் எழுந்து, “ஸாது ஸாது சூத்...