Skip to main content

Posts

Showing posts from April, 2022

உபதேச இரத்னமாலை - பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச இரத்னமாலை பதவுரை முன்னம் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர் தன்னின் படியைத் தணவாத சொல் மணவாள முனி தன் அன்புடன் செய் உபதேச ரத்தின மாலை தன்னைத் தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே -    கோயில் கந்தாடை அண்ணன். முன்னம் - முற்காலத்தில்  திருவாய்மொழிப்பிள்ளை - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  தாம் உபதேசித்த - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும்  ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  நேர் தன்னின் படியை தணவாத சொல் - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான மணவாளமுனி - மணவாளமாமுனி தன் அன்புடன் செய் - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  உபதேசரத்னமாலை தன்னை - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  தம் நெஞ்சு தன்னில் - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே தரிப்பவர் - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  தாள்கள் சரண் நமக்கே. - திருவடிகளே நமக்கு தஞ்சம். உபதேச இரத்னமாலை - பாசுரம் 1 : எந்தை திருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்...

பொது இடங்களில் குழந்தைகள்

மிகவும் அவசியமான நிச்சயம் விவாதிக்க வேண்டிய ஒரு தலைப்பு இன்று. காரணம், "Public  Behaviour" என்று ஆங்கிலத்தில் இன்று பரவலாக பேசப்படும் ஒரு நிகழ்வு இது. பல லக்ஷம் செலவு செய்து பார்க்கக்கூடிய காணொளியும் இதைப்பற்றித்தான். மேலும் "Softskills Development" என்று அதிக கட்டணத்தோடு கற்றுக்கொள்ளும் கல்வியில் / பயிற்சியில் பெரிய பங்கு இந்த Public Behaviourக்கு உண்டு. அப்படி என்ன இதற்க்கு இவ்வளவு அவசியம்?  இது சரியாக இல்லாவிட்டால் வாழ முடியாதா? எல்லோரும் இதையெல்லாம் பார்த்துதான் வாழ்கிறார்களா என்ன? இது போன்ற எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் "ஆம்" என்பது தான். நாம் ஒரு கோவிலுக்கு செல்கிறோம், அல்லது ஒரு பொது இடத்திற்கு செல்கிறோம், அங்கு அமைதியாக, மிகவும் தன்னடக்கதோடு, ஒழுங்காக நடந்து கொள்பவரைப்பார்த்து நாமே என்ன சொல்கிறோம்? இருந்தால் இப்படி இருக்க வேண்டும். ஆனால் அது எப்படி சாத்தியம் ஆயிற்று என்றால், தொடர்ந்து நெறிப்படுத்துதல் மூலமாக. இறுதியில் நம் குழந்தைகளே அவ்வாறு செய்யும் போது, நம் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது, ஒரு திருப்தியும் எற்படும். எல்லாம் சரி, இதில் என்னவெல்...

இராமாயணம் - சுந்தரகாண்டம் - தேவர்கள் சுரசையை அனுப்புதலும் அனுமான் வெற்றிபெறுதலும்

தேவர்கள் சுரசையை அனுப்புதலும் அனுமான் வெற்றிபெறுதலும்: இப்படி அனுமான் வேகமாக செல்லும் போது சுரஸையெனும் நாக கன்னிகை ஒருத்தி தேவர்களால் சொல்லிஅனுப்பப்பட்டு அனுமானது வீரத்தை மேலும் அறிய வேண்டி அதி பயங்கர ராக்ஷச சரீரத்தை எடுத்துக்கொண்டு விகாரமாய் கோர ரூபத்தை தரித்துக்கொண்டு பயத்தை உண்டுபண்ணும்படி வந்து, அனுமானை வழிமறித்து, "ஓ வானரனே! தேவர்கள் உன்னை எனக்கு இரையாக அளித்திருக்கிறார்கள்; ஆகையால் நான் உன்னை புசிக்கும்படி என் வாயில் வந்து புகுவாயாக" என்றாள். இதைக்கேட்ட அனுமான், தான் ராமகார்யமாக மிக அவசரமாக சென்று சீதையின் நிலையறிந்து ராமனுக்கறிவித்த பிறகு, நானே உன் வாயில் வந்து விழுகிறேன் என்று சத்யம் செய்து கூறியும், சுரஸா தேவி அனுமானை நோக்கி "வானரஸ்ரேஷ்டனே, எனது வாயில் புகாமல் நீ போக இயலாது" என்று தன் அகலமான வாயை திறந்தபடி அனுமான் முன் நின்றாள்.  அனுமான் மிகுந்த கோபம் கொண்டு பத்து யோஜனை நீளமும் பத்து யோஜனை அகலமும் தன் சரீரத்தை பெருக்கினான்; உடனே சுரசையானவள் தன் வாயை இருப்பது யோஜனை தூரம் திறந்துவிட்டாள். உடனே அனுமான் முப்பது யோஜனை வளர, சுரஸை நாற்பது யோஜனையாக வளர்ந்தாள். பின்...

இராமாயணம் - சுந்தரகாண்டம் - அனுமானும் மைனாக பர்வதமும்

அனுமானும் மைனாக பர்வதமும் : இப்படி அனுமான் வேகமாக செல்லும்போது சமுத்திர ராஜனானவன் இஷ்வாகு குல திலகரான சகர மஹாராஜாவால் தோண்டி (இதனால் தான் கடல் சாகரம் என்று அழைக்கப்படுகின்றது)  வளர்க்கப்பட்டவன் ஆனபடியால் இஷ்வாகு குலத்தில் உதித்த ராமபிரானுக்கு கைங்கர்யம் செய்கின்ற அனுமானுக்கு உபகாரம் செய்ய எண்ணி அவனுடைய சமுத்திரத்தில் மூழ்கியிருக்கும் மைநாகம் என்னும் பர்வதத்திடம் (மலையிடம்), "மலைக்கரசனே! ராமகார்யத்தின் பொருட்டு ஆகாய மார்கமாய்வரும் அனுமான் சற்று தங்கி இளைப்பாறும் பொருட்டு நீ உடனே நீரிலிருந்து ஆகாயம் நோக்கி மேலெழும்பி உபசரிப்பாயாக!" என்றான். அப்படியே அம்மைநாகமும் நீரிலிருந்து மேல் எழும்பி நின்ற அப்பர்வதத்தை அனுமான் மோதி அமிழ்த்திவிட்டான். அப்போது மிகவும் சந்தோஷித்து மைநாகம் ஒரு மானிட ரூபம் கொண்டு பர்வதத்தின் சிகரத்தில் நின்று கொண்டு அனுமானிடம், "வானரர்களில் உத்தமமான வீரா! உன்னுடைய செயல் போற்றுதலுக்குரியது. அதனால் என்னுடைய என்னுடைய சிகரங்களில் சிறிதுநேரம் இருந்து இளைப்பாறி பிறகு செல்வாயாக; ராமனுடைய முன்னோர்களால் வளர்க்கப்பட்ட சமுத்திரராஜன் உனக்கு உதவிசெய்யும் பொருட்டு என்னை ...

இராமாயணம் - சுந்தரகாண்டம் - அனுமான் மஹேந்திரகிரி உச்சியில் இருந்து லங்கைக்கு புறப்படுதல்

இராமாயணம் சுந்தரகாண்டம் அனுமான் மஹேந்திரகிரி உச்சியில் இருந்து லங்கைக்கு புறப்படுதல்: அதிவீர தீரனான அனுமான் மஹேந்திரகிரியின் உச்சியில் நின்றுகொண்டு தனது பிதாவான வாயுபகவானை தியானித்து வணங்கி தென் திசை நோக்கி செல்வதற்காக அனைத்து வானர வீரர்களும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தன்னுடைய தேகத்தை அதி பிரம்மாண்டமாக பெருக்கினான். இப்படி சமுத்திரத்தினை கடக்கவேண்டிய பெரிய தேகத்தையெடுத்த அனுமான் தன் கைகளால் அம்மலையை குலுக்கினான். அதனால் அங்கு பூத்திருந்த மரங்களெல்லாம் பூக்களை உதிர்ந்துவிட்டன. அனுமானால் மிதிக்கப்பட்ட அந்த பர்வதமானது மதயானை மதஜலத்தைப் வெளிவிடுவதுபோல் எங்கும் தண்ணீரைப் பெருகவிட்டது. அம்மலையில் அனுமானின் மிதி பட்டதனால் நெருக்கப்பட்ட குகைகளிலிருந்த பிராணிகள் விகாரமாய் கூச்சலிட்டன. அதிலுள்ள பாம்புகளெல்லாம் படம் எடுத்து ஆடிக்கொண்டு கோரமான விஷ அக்னியைக் கக்கி பற்களால் கற்களை கடித்துக்கொண்டன. அதில் வசித்துவந்த கல்வியாளர்கள் தம் மனைவியருடன் மிகவும் பயந்து கவலையுடன் ஆகாயத்தில் வளர்ந்து நிற்கும் அனுமானை கண்டு ஆச்சரியமடைந்தனர். அனுமான் ஆகாயமார்கமாக போகிறபடியால் வாலை நீட்டி தோள்களை இறுக்கி, இடுப்...

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பதவுரை - பாசுரம் 10 & 11

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 10 : பயன் அன்றாகிலும்* பாங்கல்லர் ஆகிலும்* செயல் நன்றாகத்* திருத்திப் பணி கொள்வான்* குயில் நின்றார் பொழில் சூழ்* குருகூர் நம்பி* முயல்கின்றேன்* உந்தன் மொய்கழற்க்கு அன்பையே* பதவுரை: பயன் அன்றாகிலும் - தாம் உபதேசிக்கும் ஒருவரால் எந்த வித உபகாரமும் இல்லாவிடினும் பாங்கல்லர் ஆகிலும் - தம்முடைய உபதேசத்தைக்கேட்டு ஒரு பிரயோஜனமும் ஏற்படாமல் தம் நிலையிலேயே இருப்பவர்களாகிலும் செயல் நன்றாகத் - தம் செயலாலே (கருணையால்) நன்றாம் படி திருத்திப் பணி கொள்வான் - நல்வழியிலே திருத்தி பணிகொண்டு குயில் நின்றார் - தம் (நம்மாழ்வார்) பாசுரங்களை குயில்கள் பயின்று சொல்லும் பொழில் சூழ் - அழகிய பொழிகளால் சூழப்பட்ட குருகூர் நம்பி - குருகூரில் அவதரித்த குணபூர்னரான ஆழ்வாரிடம் முயல்கின்றேன் - மீண்டும் மீண்டும் முயற்சிக்கின்றேன் உந்தன் மொய்கழற்க்கு - தன்னை அண்டினவரின் மேல் விழுந்து காக்கும் தன்மையுடைய திருவடிகளுக்கு அன்பையே - அன்படிமைசெய்யவே கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 11 : அன்பன் தன்னை* அடைந்தவர்கட்கெல்லாம் அன்பன்* தென் குருகூர் நகர் நம்பிக்கு* அன்பனாய்* மதுர கவி சொன்ன சொல் நம்புவார...

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பதவுரை - பாசுரம் 6, 7, 8 & 9

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 6 : இன்று தொட்டும்* எழுமையும் எம்பிரான்* நின்று தன் புகழ்* ஏத்த அருளினான்* குன்ற மாடத்* திருக்குருகூர் நம்பி* என்றும் என்னை* இகழ்விலன் காண்மினே* பதவுரை: இன்று தொட்டும் - இனிமேல் எப்பொழுதாவது எண்ணும் படி இல்லாமல் இன்றே இப்பொழுதே  எழுமையும் - இனிமேல் உள்ள காலமெல்லாம்  எம்பிரான் - அடியேனுக்கு உபகாரம் செய்து உய்விக்கிறவரான  நின்று தன் புகழ் - எப்போதும் இருக்கிறபடி நிரந்தரமாக தன் புகழே ஏத்த அருளினான் - நிலைத்திருக்கும்படி அருளினான்  குன்ற மாடத் - சிறு மலையை போன்று மணிமாட செல்வம் நிறைந்த   திருக்குருகூர் நம்பி - திருக்குருகூரில் தோன்றிய குணபரிபூர்ணர் என்றும் என்னை இகழ்விலன் - எக்காலத்தும் அடியேனைக் கைவிடாது  காப்போன்   காண்மினே - காணுங்கள் கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 7 : கண்டு கொண்டென்னைக்* காரி மாறப் பிரான்* பண்டை வல்வினை* பாற்றி அருளினான்* எண் திசையும்* அறிய இயம்புகேன்* ஒண் தமிழ்* சடகோபன் அருளையே* பதவுரை: கண்டு கொண்டென்னைக் - (கண்டு + கொண்டு + என்னை) என் தாழ்மையான நிலையைக்கண்டும்  கூட என்னைக் கைக்கொண்டு...

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பதவுரை - பாசுரம் 3, 4 & 5

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 3 : திரிதந்தாகிலும் * தேவ பிரானுடை* கரிய கோலத்* திரு உருக் காண்பான் நான்* பெரிய வண்குருகூர்* நகர் நம்பிக்கு ஆள் உரியனாய்* அடியேன் பெற்ற நன்மையே* திரிதந்தாகிலும் - தேவுமற்றறியேன் என்று இருந்தாலும் (ஆழ்வாரைத்தவிர வேறு எந்த தெய்வத்தை பற்றியும் அறிய வேண்டாம் என்று இருந்தாலும்) தேவ பிரானுடை - எம்பெருமானே என்மேல் கடாக்ஷித்தருளி அவனுடைய கரிய கோலத்திரு உரு - உகப்பான கரிய கார்முகில் போன்ற சேவையை தன் தேவிமார்களுக்கும் ஆழ்வாருக்கு சாதித்தபடியே காண்பான் நான் - அடியேனுக்கும் சாதிக்கப்பெற்றேன்   பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்கு - பெருமையும் புகழும் மிக்க திருக்குருகூரில் அவதரித்த சிறந்த கல்யாண குணங்களையுடைய ஆழ்வாருக்கே   ஆள் உரியனாய் அடியேன் - உரிய அடியனாய் இருக்கப்பெற்றது  பெற்ற நன்மையே - அடியேன் பெற்ற பெரும் பேறு கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 4 : நன்மையால் மிக்க* நான்மறையாளர்கள்* புன்மையாகக்* கருதுவர் ஆதலின்* அன்னையாய் அத்தனாய்* என்னை ஆண்டிடும் தன்மையான்* சடகோபன் என் நம்பியே* நன்மையால் மிக்க - ஆத்ம குணங்களோடு அறநெறியில் நிற்பவர்கள்  ...

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பதவுரை - பாசுரம் 1 & 2

ஸ்வாமி மதுரகவியாழ்வாரின் திருநக்ஷத்ரமான இன்று (சித்திரையில் சித்திரை) தொடங்கி 12 நாட்கள் கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம் மற்ற பதிவுகளோடும் சேர்ந்து வரும். தாஸன்   ஸ்வாமி மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணிநுண் சிறுத்தாம்பு தனியன் - (ஸ்வாமி நாதமுனிகள் அருளிச்செய்தது): அவிதித விஷயாந்தரஸ் ஸடாரே: உபநிஷதாம் உபகாந மாத்ரபோக: அபிச குணவஸாத் ததேக ஸேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து. அவிதித விஷயாந்தரஸ் - நம்மாழ்வாரைத்தவிர மற்ற எதையும் அறியாதவராக ஸடாரே: - ஆழ்வாருடைய ஈரச்சொற்களான உபநிஷதாம் - திருவாய்மொழியையை உபகாந மாத்ரபோக: -  நித்யம் அனுபவிப்பதே தனக்கு எல்லாம் என்று உடையவரும் அபிச - பெருமளவு (அளவின்றி) குணவஸாத் - ஆழ்வாருடைய கருணை எனும் குணத்தினால் ததேக - அவருக்கே ஸேஷி - தன்னை அடிமையாக்கிக்கொண்டிருப்பவருமா கிய மதுரகவிர் - ஸ்வாமி மதுரகவியாழ்வாரை (மம) ஹ்ருதயே - என் இதயத்தில் மமாவிரஸ்து - எழுந்தருளியிருக்க வேண்டும். வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறெங்கள் வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார் எம்மை ஆள்வார் அவரே அரண். வேறொன்றும் - ஆழ்வாரைத்தவிர மற்ற எதையும் நா...

நான் திருந்தவே மாட்டேன்

     இன்று நாம் விவாதிக்கும் ஒரு தலைப்பு, வாழ்க்கையில் முன்னேற நல்ல குண நலன்களோடு வாழ பிறருக்கு தொந்தரவு மனதாலும் செய்கையினாலும் செய்யாமல் இருப்பது எப்படி என்பது தான். ஆனால் தலைப்பு "நான் திருந்தவே மாட்டேன்" என்று இருக்கிறதே என்றால், இந்த ஒரே வரி தான் மேலே சொன்ன எல்லாவற்றிக்கும் காரணம். எப்படி என்றால், நாம் ஒரு செயலை செய்யும் போது அது அடுத்தவருக்கு எந்த விதத்திலும் துன்பமோ இடைஞ்சலோ தராமல் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அப்படி எல்லாமே நடப்பதில்லை. அது தான் வருத்தத்திற்கு உரிய விஷயமாக இருக்கிறது. இனி உதாரணங்களைப்பார்ப்போம்.      நாம் ஒரு பேருந்தில் பயணம் செய்கிறோம். அப்போது அப்பேருந்தில் உட்கார இடம் இருக்கலாம். இடம் இருந்தால் உட்கார்ந்து கொள்ளலாம். இல்லையெனில் நின்றுகொண்டு பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்போது, அமர்ந்திருப்பவர்களுக்கு இடையூறு இல்லாமல் நிற்க வேண்டியது அவசியம். நாம் முதலில் எங்கு பிடித்து நிற்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உயரமாக இருக்கிறோம், கைகளில் ஏதும் பிரச்சினை இல்லை என்றால், பேருந்தின் மேல்புறம் பிடி...

எண்ணங்கள் - கோபம்

          ஒவ்வொருவரின் மனதிலும் பல சிறந்த எண்ணங்கள் ஒவ்வொருநாளும் தோன்றிக்கொண்டு தான் இருக்கும். ஆனால் எந்த அளவுக்கு அதை நாம் நம் வாழ்க்கையில் செயல்படுத்துகிறோம் என்பதை பொறுத்து தான் அந்த எண்ணங்களின் சொந்தக்காரனாக நாம் ஆக முடியும். இல்லாவிட்டால் நம்மைப்போன்ற நல்ல எண்ணங்கள் தோன்றி நன்மை செய்யும் மற்றவர்களை பார்த்தோ அல்லது சினிமாவில் பார்த்தோ ஏக்கப்பெருமூச்சு விட்டுக்கொள்ளவேண்டியது தான்.           முதலில் நாம் மிகவும் சிறந்தவர்கள், சிறப்பான பல செயல்களை செய்வதற்காக இந்த உலகில் பிறவி எடுத்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது மிகவும் அவசியம். ஏன் என்றால் அது தான் சுய-பலம். பல நேரங்களில் நம்முடைய எண்ணங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள கூடாது, முடியாதும் கூட. அந்த சூழ்நிலைகளில் அந்த எண்ணங்களை அப்படியே மூட்டை கட்டி வைத்து விடுவதா என்ன? இல்லை, அதனை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்கிற உறுதியை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ளவேண்டும்.           சரி, அப்படி செயல்படுத்தும் போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய, சம...