Skip to main content

Posts

Showing posts from December, 2022

திருப்பாவை பாசுரம் 16 பதவுரை

பாசுரம்: நாயக னாய்நின்ற நந்தகோப(ன்) னுடைய கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண வாசல் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக் கறை பறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா நீ நேச நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். பதவுரை: நாயகன் ஆய் நின்ற-(எங்களுக்கு) ஸ்வாமியாயிருக்கிற நந்தகோபனுடைய-நந்தகோபருடைய கோயில்- திருமாளிகையை காப்பானே-காக்குமவனே!  கொடி தோன்றும்-த்வஜங்கள் விளங்காநிற்கும் தோரண வாசல்-தோரணவாசலை காப்பானே-காக்குமவனே! மணி-ரத்தினங்கள் பதிக்கப்பெற்ற கதவம்-கதவினுடைய தாள் - தாழ்ப்பாளை திறவாய்-திறக்கவேணும் ஆயர் சிறுமியரோமுக்கு-இடைச் சிறுமிகளான எங்களுக்கு மாயன் - ஆச்சரியச் செயல்களையுடையவனும் மணிவண்ணன்- நீலரத்தினம்போன்ற திரு நிறத்தையுடையவனுமான கண்ணபிரான் நென்னலே- நேற்றே அறை பறை வாய் நேர்ந்தான் - சப்திக்கும் பறையைக் கொடுப்பதாக வாக்களித்தான் துயில் எழ-(அவன்) தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும்படி  பாடுவான்-பாடுவதற்காக. தூயோமாய் வந்தோம்-பரிசுத்தைகளாக வந்திருக்கின்றோம் அம்மா- ஸ்வாமி!  முன்னம் முன்னம் - முதன...

உபதேச இரத்னமாலை - பாசுரம் 15 : பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 15 :* உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள் உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் -உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் *பதவுரை:* *உண்டோ வைகாசி விசாகத்துக் கொப்பொருநாள்* - வைகாசி மாதத்து விசாகத்துக்கு நாளுக்கு ஒப்பு ஒரு நாள் உண்டோ?  *உண்டோ சடகோபர்க்கொப்பொருவர்* - ஸ்வாமி நம்மாழ்வாருக்கொப்பான ஒரு ஆழ்வார் உண்டோ?  *உண்டோ திருவாய்மொழிக்கொப்பு?* - திருவாய்மொழிக்கு ஒப்பான பிரபந்தம் ஒன்று உண்டோ?  *தென் குருகைக்குண்டோ ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்?* - இந்த உலகில் தென் குருகையென்னும் (ஆழ்வார் திருநகரி) நகருக்கொப்பானதொரு நகர் உண்டோ?

உபதேச இரத்னமாலை - பாசுரம் 14 : பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 14 :* ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப் பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள் *பதவுரை:* *ஏரார்* - (ஏர் + ஆர்) சீர்மை மிகுந்த  *வைகாசி விசாகத்தின்* - வைகாசிமாதத்து விசாகநாளின்  *ஏற்றத்தை* - பெருமையை  *பாரோரறியப்* - உலகோர்கள் அறிந்துகொள்ள *பகர்கின்றேன்* - சொல்லுகின்றேன்  *சீராரும் வேதம்* - சீர்நிறைந்த வேதத்தை  *தமிழ்செய்த மெய்யன்* - தமிழில் திராவிடவேதமாக அருளிச்செய்த  *எழில் குருகை நாதன்* - அழகிய (ஆழ்வார்) திருநகரிக்கு நாதனாகிய ஸ்வாமி நம்மாழ்வார்  *அவதரித்த நாள்* - அவதாரம் செய்த நாள்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 13 : பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 13 :* மாசிப் புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர் தேசித் திவசத்துக்கு ஏது என்னில் -பேசுகின்றேன் கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால் நல்லவர்கள் கொண்டாடும் நாள் *பதவுரை:* *மாசிபுனர்பூசம் காண்மினின்று* - இன்றைய தினம் மாசி மாதத்து புனர்வசு நாளாகும். *மண்ணுலகீர்* - உலகோர்களே *தேசித் திவசத்துக் கேதென்னில்* - பெருமை இந்த தினத்திற்கு என்னவென்றால்  *பேசுகின்றேன்* - சொல்லுகின்றேன் கொல்லிநகர்கோன் - கொல்லி என்னும் நகரத்துக்கு தலைவரான  *குலசேகரன்* - ஸ்வாமி குலசேகராழ்வார் *பிறப்பால்* - திருவவதாரத்தினால்  *நல்லவர்கள்* - சாதுக்கள்  *கொண்டாடும் நாள்* - குதூகலிக்கும் நாள்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 12 : பதவுரை

*உபதேச ரத்னமாலை - பாசுரம் 12 :* தையில் மகம் இன்று தாரணீயிர் ஏற்றம் இந்தத் தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் துய்ய மதி பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று நற்றவர்கள் கொண்டாடும் நாள் *பதவுரை: * *தையில் மகம் இன்று* - இன்றையதினம் தை மாதத்தில் வரும் மகம் (நக்ஷத்திரம்) நாளாகும் *தாரணியீர்!* - உலகோர்களே *ஏற்றம் இந்த தையில் மகத்துக்கு* - என்ன பெருமை இந்த தையில் மகத்திற்கு என்று *சாற்றுகின்றேன்* - கூறுகின்றேன்  *துய்யமதி பெற்ற மழிசைப்பிரான்* - பரிசுத்தமான ஞானமுடைய திருமழிசையாழ்வார் *பிறந்த நாள் என்று* - திருவவதாரம் செய்த நாள் என்று  *நற்றவர்கள்* - பெரும் தவசீலர்கள்  *கொண்டாடும் நாள்* - குதூகலிக்கும் நாள்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 9 : பதவுரை

உபதேச இரத்னமாலை பாசுரம் 9 :  *மாறன் பணித்த* - ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த   *தமிழ்மறைக்கு* - திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களுக்கும்   *மங்கையர்கோன்* - திருமங்கைஆழ்வார்   *ஆறங்கம் கூற* - ஆறு அங்கங்களாக ஆறு பிரபந்தங்களை அருளிச்செய்ய   *அவதரித்த* - திரு அவதாரம் செய்த   *வீறுடைய* - பெருமை உடைய   *கார்த்திகையில் கார்த்திகைநாள்* - கார்த்திகை மாதத்து க்ருத்திகா (நக்ஷத்ரம்) நாள்   *இன்றென்று* - இன்று என்று   *காதலிப்பார்* - கொண்டாடுபவர்களுடைய    *வாய்த்த மலர்த்தாள்கள்* - திருவடிகளை   *நெஞ்சே! வாழ்த்து* - நெஞ்சமே உகந்து போற்று.

உபதேச இரத்னமாலை - பாசுரம் 8 : பதவுரை

பாசுரம் 8 :   *பேதைநெஞ்சே!* - ஞானமில்லாத மனமே!   *இன்றைப்பெருமை* - இன்று என்ன தினம் அதன் பெருமை என்னவென்று   *அறிந்திலையோ!* - அறிந்துகிள்ளவில்லையோ?   *ஏது பெருமை* *இன்றைக்கென்றென்னில்!* - இன்றைய நாளுக்கு என்ன பெருமை என்று எண்ணுகிறாயோ?  *ஓதுகின்றேன்* - சொல்லுகின்றேன்   *வாய்த்தபுகழ் மங்கையர்கோன்* - பெரும் புகழை உடையவரான திருமங்கையாழ்வார்   *மாநிலத்தில்* - இப்பூவுலகில்   *வந்துதித்த* - வந்து அவதாரம் செய்தருளிய *கார்த்திகையில்* *கார்த்திகைநாள் காண்* - கார்த்திகை மாதத்தில் வரும் க்ருத்திகா (நக்ஷத்ரம்) கண்டுகொள்.

உபதேச இரத்னமாலை - பாசுரம் 7 : பதவுரை

*உபதேச இரத்னமாலை* - பாசுரம் 7 : மாற்றுள்ளவாழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து  நற்றமிழால் நூல்செய்து நாட்டையுய்த்த பெற்றிமையோர்  என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு  நின்றதுலகத்தே நிகழ்ந்து.  *மாற்றுள்ளவாழ்வார்களுக்கு* - பன்னிரு ஆழ்வார்களில் நான்காம் ஆழ்வாரான திருமழிசைப்பிரான் முதலான ஆழ்வார்களுக்கு   *முன்னே வந்துதித்து* - முன்பு வந்து தோன்றி    *நற்றமிழால்* - சிறந்த தமிழ் நூலினால்   *நூல்செய்து* - சிறந்த பிரபந்தங்களை அருளி   *நாட்டையுய்த்த* - நாட்டுமக்கள் உய்வதற்கு உதவும் வண்ணம்   *பெற்றிமையோர் என்று* - போற்றத்தகுந்த பெரியோர்கள் *முதலாழ்வார்கள்*- முதல் ஆழ்வார்கள் (முதன்முதலில் தோன்றியவர்கள்)  *என்னும் பேரிவர்க்கு* - என்கின்ற பெயர் இவர்களுக்கு  *நின்றதுலகத்தே* - உலகத்தில் நிலைபெற்ற *நிகழ்ந்து* - நிகழ்வு நடைபெற்றது.

உபதேச இரத்னமாலை - பாசுரம் 6 பதவுரை

*உபதேச இரத்னமாலை -* பாசுரம் 6 : ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை  ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - எப்புவியும்  பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் பேயாழ்வார் தேசுடனே தோன்று சிறப்பால். பாசுரம் 6 :  *ஐப்பசியில்* - ஐப்பசி மாதத்தில்   *ஓணம் அவிட்டம் சதயம் இவை* - திருஓணம், அவிட்டம், சதயம் ஆகிய நக்ஷத்திரங்கள்    *ஒப்பிலவா நாள்கள்* - ஒப்புயர்வற்ற நாள்களாகும் (ஏனென்றால்)  *உலகத்தீர்* - உலகிலுள்ளீர்களே!    *எப்புவியும் பேசுபுகழ்* - பரந்த உலகம் எங்கும் பேசுகின்ற புகழ் வாய்ந்த   *பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்* - முதல் ஆழ்வார்களாகிய  பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார்   *தேசுடனே தோன்று சிறப்பால்* - சிறந்த தேஜஸுடனே / புகழுடன்  திருவவதாரம் செய்தமையால்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 11 பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 11 :* மன்னியசீர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர் என்னிதனுக் கேற்ற மெனில் உரைக்கேன் - தன்னுபுகழ் மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால் நான்மறையோர் கொண்டாடும் நாள். *பதவுரை:*  *மன்னிய சீர்* - மிகவும் சிறப்பு பொருந்திய  *மார்கழியில் கேட்டை இன்று* - மார்கழிமாதத்தில் கேட்டை நாள் இன்று *மாநிலத்தீர்* - உலகத்தீர் *என்னிதனுக்கேற்றமெனிலுறைக்கேன்* - இம்மார்கழி கேட்டைக்கு என்ன சிறப்பு என்றால் சொல்லுகின்றேன்  *துன்னுபுகழ்* - மிக்க புகழையுடைய  *மாமறையோன்* - பரம வைஷ்ணவரான (வைதீகரான)  தொண்டரடிப்பொடியாழ்வார்  பிறப்பால் - தொண்டரடிப்பொடியாழ்வாருடைய திருவவதாரத்தினால்  *நான்மறையோர் கொண்டாடும் நாள்* - இது நமக்கான நாள் என்று எல்லா வைதீகர்களும் கொண்டாடும் நாள்

திருப்பாவை பாசுரம் 15 பதவுரை

பாசுரம்: எல்லே இளங்கிளியே இன்ன முறங்குதியோ சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன் வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய் பதவுரை: இளம் கிளியே -(பேச்சிலும் அழகிலும்) இளமை தங்கிய கிளிபோலிருப்பவளே!  எல்லே- (உன் பேச்சின் இனிமை) என்னே!  இன்னம்-எல்லோரும் வந்து நின்ற பிறகும் உறங்குதியோ - தூங்குகிறாயோ? (என்று எழுப்ப) நங்கைமீர்- பெண் பிள்ளைகளே!  சில் என்று அழையேன்மின்- சிலுகு சிலுகு என்று அழைக்காதீர்கள் போதர்கின்றேன்- (இப்போதே) புறப்பட்டு வருகிறேன் (என்று உள்ளிருப்பவள் விடைகூற,)  வல்லை-(வாய்ப்பேச்சில் நீ ) ஸமர்த்தையாயிராநின்றாய்  உன் கட்டுரைகள்—உன்னுடைய கடுஞ்சொற்களையும் உன் வாய்-உன்னுடைய வாயையும்.  பண்டே அறிதும்- நெடுங்காலமாகவே நாங்கள் அறிவோம் (என்று எழுப்பு கிறவர்கள் சொல்ல)  நீங்களே வல்லீர்கள்—(இப்படி எதிர்வாதம் செய்யும்) நீங்களே வாய் வன்மையுடையவர்கள் நானேதான் ஆயிடுக-(அன்றி...

உபதேச இரத்தினமாலை - பாசுரம் 5: பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 5 :* அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த வாழ்வார்கள் இந்தவுலகி லிருணீங்க- வந்துதித்த மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர் தாமறிய ஈதென்று சொல்லுவோம் யாம். *அந்தமிழால்* - அழகிய தொன்மையான தமிழ் மொழியினால்  *நற்கலைகள்* - நல்ல தமிழ் பாசுரங்களைக்கொண்ட திவ்யப்ரபந்தங்களை  *ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள்* - நன்கு ஆராய்ந்து பொருந்தும்படி அருளிச்செய்த ஆழ்வார்கள்  *இந்தவுலகிலிருள்நீங்க* - அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்த உலகத்தில் இக்காரிருள் நீங்க வந்துதித்த - வந்து அவதாரம் செய்த  *மாதங்கள் நாள்கள்தமை* - மாதங்கள் மற்றும் நக்ஷத்திரங்களையும்  *மண்ணுலகோர்* - இப்பூவுலகில் வாழ்வோர் யாவரும்   *தாமறிய* - அவர்கள் தாம் அறிய  *ஈதென்று* - இது இவ்வாழ்வார் அல்லது ஆசாரியன் அவதார விசேஷம் என்று  *சொல்லுவோம்யாம்* - நாம் கூறுவோம்

உபதேச இரத்னமாலை - பாசுரம் 10: பதவுரை

*உபதேச இரத்னமாலை - பாசுரம் 10:*  கார்த்திகையுரோஹிணி நாள் காண்மினின்று  காசினியீர் வாய்த்த புகழ்ப்பாணர் வந்துதிப்பால்  ஆத்தியர்கள் அன்புடனே தான் அமலனாதிபிரான்  கற்றதிற்பின் கொண்டாடும் நாள் * பதவுரை :*   *கார்த்திகையுரோஹிணி நாள்* - கார்த்திகை மாதத்தில் ரோஹிணி நாள்   *காண்மினின்று* - இன்று கண்டுகொள்ளுங்கள்   *காசினியீர்* - உலகத்தீரே!    *வாய்த்த புகழ்ப்பாணர்* - மிகப்பொருந்திய புகழை உடைய திருப்பாணாழ்வார்   *வந்துதிப்பால் -* திருவவதாரம் செய்தருளினதைக்கொண்டு   *ஆத்தியர்கள்* - ஆஸ்திகர்கள்  அன்புடனே தான் - ப்ரியமுடன்   *அமலனாதிபிரான் கற்றதிற்பின்* - ஸ்வாமி அருளிச்செய்த அமலனாதிபிரான் நமக்கு கிடைக்கப்பெற்றோம் என்று நன்குடனே  *கொண்டாடும் நாள்* - ஆராதித்து கொண்டாடும் நாள்

திருப்பாவை பாசுரம் 12 பதவுரை

பாசுரம்: கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய் இனித்தா னெழுந்திரா யீதென்ன பேருறக்கம் அனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: இளம் கன்று எருமை-இளங் கன்றுகளையுடைய எருமைகளானவை கனைத்து—(பால் கறப்பாரில்லாமையாலே) கதறிக்கொண்டு கன்றுக்கு இறங்கி-(தம்) கன்றுகளிடம் இரக்கங்கொண்டு நினைத்து-அக்கன்றுகளை  நினைத்து முலைவழியே நின்று பால் சோர-(அந்நினைவின் முதிர்ச்சியாலே) முலைகளின் வழியாகப் பால் இடைவிடாமல் பெருக இல்லம் நனைத்து–(அதனால்) வீடு முழுவதும் ஈரமாக்கி சேறு ஆக்கும்- (துகைத்துச்) சேறாக்கும்படியிருப்பவனாய் நல் செல்வன் - க்ருஷ்ண கைங்கர்யமாகிற மேலான செல்வத்தை உடையவனானவனுடைய  தங்காய்-தங்கையே!  தலை பனி வீழ- (எங்கள்) தலையிலே பனி பெய்யும்படியாக நின் வாசல் கடை பற்றி- உன் வாசற்கடையைப் பிடித்துக்கொண்டு தென் இலங்கை கோமானை - செல்வத்தையுடைத்தான இலங்கைக்கு அரசனான ராவணனை  சினத்தினால் செற்ற-(பிராட்...

திருப்பாவை பாசுரம் 13 பதவுரை

பாசுரம்: புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால் கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: புள்ளின் வாய் கீண்டானை- பறவையுருவங்கொண்டு வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும் பொல்லா அரக்கனை கிள்ளிகளைந்தானை-பொல்லாங்கு களுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பிரானுடைய கீர்த்திமை பாடி போய்-வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று பிள்ளைகள் எல்லாரும் - எல்லாப் பெண்பிள்ளைகளும்  பாவைக்களம்- (க்ருஷ்ணனும் தாங்களும்) நோன்பு நோற்கைக்காகக் குறித்த இடத்திற்கு புக்கார்-புகுந்தனர் வெள்ளிஎழுந்து-சுக்கிரன் மேலெழுந்து வியாழம் உறங்கிற்று - குரு அஸ்தமித்தது (மேலும்,)  புள்ளும் சிலம்பின காண் - பறவைகளும் (இறைதேடக்) கூவிச்செல்கின்றன போது அரி கண்ணினாய்-பூவையும் மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே! பாவாய்- இயற்கையாகவே ஸ்த்ரீத்வத்தைப் பெற்றவளே! நீ -நீ நல்நாள் - கிரு...

திருப்பாவை பாசுரம் 14 பதவுரை

பாசுரம்:  உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் உங்கள் புழைக்கடை Q < நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணா பாடேலோரெம் பாவாய். பதவுரை: எங்களை - (உன் தோழியராகிய) எங்களை முன்னம் எழுப்புவான் - முதன் முதலில் எழுப்புவதாக வாய் பேசும்- வாயாலே சொல்லிவைத்த நங்காய் - பரிபூர்ணையே! நாணாதாய்- (சொன்னபடி செய்யாதொழிந்தோமே' என்னும்) வெட்கமுமற்றவளே!  நா உடையாய்-(இன் சொற்களைப் பொழியும்) நாவை உடையவளே!  உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள் - உங்களுடைய புழைக்கடையிலுள்ள தோட்டத்தில் விளங்கும் குளத்தினுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து-செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்—கருநெய்தல் மலர்கள் குவிந்துகொண்டன காண்! (மேலும்) செங்கல் பொடி கூறை- காஷாயம் படிந்த உடையை அணிந்தவரும் வெண்பல் - வெளுத்த பற்களையுடையவரும் தவத்தவர் - தபோவேஷத்தை உடையவருமான சைவஸந்யாஸிகளும் தங்கள் திருக்க...

வாக்ய குருபரம்பரை

ஸ்ரீ: வாக்ய குருபரம்பரை அஸ்மத் குருப்யோ நம: எனக்கு பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்து வைஷ்ணவனாக்கிய எனது ஆசார்யனை வணங்குகிறேன் அஸ்மத் பரமகுருப்யோ நம: எனது ஆச்சார்யனின் ஆசார்யனையும் அவர் சமகாலத்து ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன் அஸ்மத் ஸர்வ குருப்யோ நம: எனது எல்லா ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன் ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையும் திருவரங்கச் செல்வத்தையுமுடைய எம்பெருமானாரை வணங்குகிறேன் ஸ்ரீ பராங்குச தாஸாய நம: ஆச்சார்ய அபிமானம் ஆகிற செல்வமுடைய பெரியநம்பியை வணங்குகிறேன் ஸ்ரீமத் யாமுந முநயே நம: வேதாந்த சித்தாந்தமாகிற செல்வமுடைய ஆளவந்தாரை வணங்குகிறேன் ஸ்ரீ ராமமிஸ்ராய நம: ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற செல்வரான மணக்கால் நம்பியை வணங்குகிறேன் ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம: ஆச்சார்ய அனுக்ரஹம் ஆகிற செல்வமுடைய உய்யக்கொண்டாரை வணங்குகிறேன் ஸ்ரீமந் நாதமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவ குலபதியும், ப்ரபந்ந குலத்துக்கு முதல்வரும், பரமாச்சார்யரான நம்மாழ்வாரிடம் அருளிச் செயல் செல்வம் பெற்றவரான ஸ்ரீமந் நாதமுநிகளை வணங்குகிறேன் ஸ்ரீமதே சடகோபாய நம: மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை உடையவரான ஸ்வாமி நம்மாழ்வாரை வணங்குகிறேன் ஸ்ர...

உபதேச இரத்னமாலை - பாசுரம் 2: பதவுரை

உபதேச இரத்னமாலை - பாசுரம் 2 :  *கற்றோர்கள் தாமுகப்பர் -* கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் இப்பிரபந்தத்தை உகப்பாய் ஏற்றிடுவார்  *கல்விதன்னில் ஆசையுள்ளோர் -* கற்பதனில் ஆசையுள்ளோர்   *பெற்றோமெனவுகந்து* - இது கிடைக்கப்பெற்றோமே என கொண்டாடி   *பின்புகற்பர்* - பிறகு இப்பிரபந்தத்தை கற்பார்கள்  *மற்றோர்கள்* - மேலே சொன்னது போல் இவ்விரண்டு நிலைகளிலும் சேராதோர்  *மாச்சர்யத்தாழிகளில்* - வெறுப்பினால் இதனையிகழ்ந்தால்   *வந்ததென்நெஞ்சே!* - நெஞ்சே, நமக்கு என்ன இழப்பு உள்ளது?  *இகழ்கை* - இப்படிப்பட்ட கிரந்தத்தினை இழப்பதென்பது   *ஆச்சர்யமோதானவர்க்கு* - ஆச்சர்யமானதா? (இல்லையே)

உபதேச இரத்னமாலை - பாசுரம் 4: பதவுரை

உபதேச இரத்னமாலை - பாசுரம் 4 :  *பொய்கையார்* - இப்பூவுலகில் முதலில் தோன்றிய ஆழ்வார் பொய்கையாழ்வார்   *பூதத்தார்* - பூதத்தாழ்வார் இரண்டாமவர்  *பேயார்* - மூன்றாவதாக தோன்றியவர்   *புகழ்மழிசை ஐயன்* - புகழையுடைய திருமழிசை ஆழ்வார் நான்காவதாக தோன்றினவர்  *அருள்மாறன்* - திருமாலின் அருள் நிரம்பப்பெற்ற ஸ்வாமி நம்மாழ்வார் ஐந்தாவதாக தோன்றினார்   *சேரலர்கோன்* - சேர குல மன்னனான குலசேகராழ்வார் ஆறாமவர்  *துய்யப்பட்ட நாதன்* - பவித்ரமான பரிசுத்தமான பெரியாழ்வார் ஏழாவதாக அவதரித்தவர்  *அன்பர்தாள்தூளி* - நண்பரான தொண்டர்களின் பாத தூளி தானே என்னும்படி வந்து தோன்றின தொண்டரடிப்பொடியாழ்வார் எட்டாமவர்   *நற்பாணன்* - லோகாசாரங்கமுனிவரால் கல்லடி பட்டாலும் சாத்விகமாக அவ்விடம் விட்டு நகர்ந்த நம் திருப்பாணாழ்வார் ஒன்பதாவதாக வந்து தோன்றியவர்   *நன்கலியன்* - நம் நாராயணனே "கலியனோ?" என்று வியந்த திருமங்கையாழ்வார் பத்தமாவர்   *ஈதிவர்* - (ஈது + இவர்)  இதுவே இவர்களது   *தோற்றத்தடைவாமிங்கு* - (தோற்றத்து அடைவு) தோன்றின வரிசைக்கிரமம...

உபதேச இரத்னமாலை - பாசுரம் 3: பதவுரை

உபதேசஇரத்னமாலை - பாசுரம் 3:   *ஆழ்வார்கள் வாழி -* பன்னிரு ஆழ்வார்களுக்கு பல்லாண்டு வாழி  *அருளிச்செயல் வாழி* - அவ்வாழ்வார்கள் அருளிசெய்த நாலாயிர திவ்யப்பிரபந்தங்கள் வாழி  *தாழ்வாதுமிழ்* - குறைவொன்றும் இல்லாத  *குரவர் தாம் வாழி* - ஆச்சார்யர்கள் வாழி  *ஏழ்பாரும் உய்ய* - ஏழுலகத்தினில் வாழ்பவர்கள் யாவரும் வாழ  *அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி* - உபயமாக ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அருளிய அனைத்தும் வாழி  *செய்யமறை தன்னுடனே சேர்ந்து* - இவை அனைத்தும் வேதங்களோடு கூடி வாழ்ந்திடுகவே!

உபதேச இரத்னமாலை - பாசுரம் 1: பதவுரை

பாசுரம் 1 :  *எந்தை* - என் ஸ்வாமியான   *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற திருமலையாழ்வாருடைய    *இன்னருளால் வந்த* - பரம கிருபையால் கிடைத்த   *உபதேச மார்கத்தை சிந்தை செய்து* - அவர் தாம் உபதேசித்த வழியை பின்பற்றி   *பின்னரும் கற்க* - தொடர்பவர்கள் அனைவரும் கற்கும் வண்ணம்   *உபதேசமாய் பேசுகின்றேன்* - உபதேசம் செய்வதை போல் கூறுகின்றேன்   *மன்னிய சீர் வெண்பாவில் வைத்து* - ஆச்சார்யர்களின் பெருமைகளையும் குணங்களையும் "மன்னியசீர் வெண்பா" என்னும் வெண்பாவில் வைத்து.

உபதேச இரத்னமாலை - தனியன்: பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: *உபதேச இரத்னமாலை* - தனியன்:  பதவுரை *முன்னம்* - முற்காலத்தில்  *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  *தாம் உபதேசித்த* - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும் ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  *நேர் தன்னின் படியை தணவாத சொல்* - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான *மணவாளமுனி* - மணவாளமாமுனி *தன் அன்புடன் செய்* - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  *உபதேசரத்னமாலை தன்னை* - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  *தம் நெஞ்சு தன்னில்* - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே *தரிப்பவர்* - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  *தாள்கள் சரண் நமக்கே.* - திருவடிகளே நமக்கு தஞ்சம்.

திருப்பாவை பாசுரம் 11 பதவுரை

பாசுரம்: கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே புற்றர வல்குற் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடச் சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய். பதவுரை: கற்றுக் கறவை - கன்றுபோலேயிருக்கும் பசுக்களுடைய பல கணங்கள் - பல கூட்டங்களையும் கறந்து- கறப்பவர்களாய் செற்றார் -எதிரிகளினுடைய திறல் அழிய- பலம் அழிந்து போகும்படி சென்று-(படையெடுத்துப்) போய் செருச் செய்யும்-போர் புரியுமவர்களாய் குற்றம் ஒன்று இல்லாத- ஒருவிதமான குற்றமற்றவர்களான கோவலர்தம்- ஆயர்களுடைய (குலத்தில் பிறந்த) பொன் கொடியே- பொன் கொடிபோன்றவளே!  புற்று அரவு அல்குல் - புற்றிலிருக்கும் பாம்பின் படம்போலேயுள்ள நிதம்ப ப்ரதேசத்தையுடையவளாய்.  புன மயிலே - தன் நிலத்திலேயுள்ள மயில் போன்று இருப்பவளே!  போதராய்-புறப்பட்டு வருவாயாக சுற்றத்துத் தோழிமார் எல்லாரும்- (உனக்கு) உறவினரான தோழிகள் அனைவரும் வந்து - (சேர்ந்து) வந்து நின் முற்றம் புகுந்து— உன்னுடைய மாளிகை முற்றத்திலே புகுந...

திருப்பாவை பாசுரம் 10 பதவுரை

பாசுரம்:  நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார். நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். பதவுரை: நோற்று - நோன்பு நோற்று சுவர்க்கம் புகுகின்ற- ஸுகத்தை இடைவிடாமல் அனுபவிக்கின்ற,  அம்மனாய்- அம்மா! வாசல் திறவாதார்-வாசற்கதவைத் திறக்கமாட்டாதவர்கள் மாற்றமும் தாராரோ-ஒரு பதில் வார்த்தையாவது பேசாரோ?  நாற்றத் துழாய் முடி-வாசனை வீசுகின்ற திருத்துழாய் மாலையை முடியிலே சூடியுள்ளவனும் நாராயணன் - நாராயணன் என்னும் ஒப்பற்ற திருநாமத்தை உடையவனும் நம்மால் போற்ற பறைதரும்-நம்மால் பல்லாண்டு பாடப்பெற்று நமக்கு ப்ராப்யமான கைங்கர்யத்தைக் கொடுப்பவனும்  புண்ணியனால்-தர்மமே வடிவெடுத்தவனுமான எம்பெருமானால் பண்டு ஒரு நாள்- முன்னொரு காலத்தில் கூற்றத்தின் வாய் வீழ்ந்த-யமன் வாயில் விழுந்தொழிந்த கும்பகரணனும் - கும்பகர்ணனும் உனக்கே தோற்று-உனக்குத் தோல்வியடைந்து பெரும் துயில் தான்- (தன்) பெருந...

திருப்பாவை பாசுரம் 9 பதவுரை

  பாசுரம்: தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான்மகளே! மணிக்கதவம் தாள் திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ உன்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய். பதவுரை: தூ மணி மாடத்து-தூய்மையை இயற்கையாக உடைய ரத்னங்களினால் இழைக்கப்பெற்ற மாளிகையில் சுற்றும் - எல்லாவிடத்திலும் விளக்கு எரிய-மங்கள தீபங்கள் ஒளிவிடவும் தூபம் கமழ-(அகில் முதலியவற்றின்) புகை மணம் வீசவும் துயில் அணைமேல் (படுத்தாரைத்) தூங்கச்செய்யும் படுக்கையின்மேல் கண் வளரும்-கண்ணுறங்குகிறவளான மாமான் மகளே-மாமன்மகளே!  மணி கதவம் தாள்- மாணிக்கக் கதவுகளின் தாள்களை திறவாய்-திறந்துவிட வேண்டும் மாமீர் - மாமியே! அவளை எழுப்பீரோ-உம்முடைய மகளைத் துயிலெழுப்பவேணும்;  உன் மகள் தான்-உன்னுடைய மகள் ஊமையோ-வாய் பேசமாட்டாத ஊமைப் பெண்ணோ?  அன்றி—அல்லாவிடில் செவிடோ-காதுகேளாத செவிடியோ?  அனந்தலோ—(களைப்பினால்) உறங்குகிறாளோ? ஏமப்பட்டாளோ - காவலிடப்பட்டாளோ?  பெருந் துயில் மந்திரப்பட்டாளோ- நெடுநேரம் தூங்கும...

திருப்பாவை பாசுரம் 8 பதவுரை

பாசுரம்: கீழ்வானம் வெள்ளென்(று) எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்(து) உன்னை கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைப பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவாவென்(று) ஆராய்ந்(து) அருளேலோரெம்பாவாய். பதவுரை: கோதுகலம் உடைய பாவாய் (கிருஷ்ணனுடைய) விருப்பத்தையுடைய பெண்ணே!  கீழ் வானம் - கிழக்கு திக்கில் ஆகாசமானது வெள்ளென்று-வெளுத்தது எருமை-எருமைகள் மேய்வான்-(பனிப்புல்) மேய்கைக்காக சிறு வீடு-(வீடியற்காலையில்) சிறிதுநேரம் அவிழ்த்து விடப்பட்டு பரந்தன காண் -(வயல்களெங்கும்) பரவின போவான் போகின்றார்- போவதையே ப்ரயோ ஜனமாகக்கொண்டு போகின்றவர்களான மிக்குள்ள பிள்ளைகளையும்-மற்றுமுள்ள பெண் பிள்ளைகளையும் போகாமல் காத்து-போகாதபடி தடுத்து உன்னைக் கூவுவான் - உன்னைக் கூப்பிடுவதற்காக வந்து நின்றோம்-(உன் வாசலில்) வந்து நிலையாக நின்றோம் எழுந்திராய்-எழுந்திரு  பாடி-(கண்ணனுடைய குணங்களை பாடி பறை கொண்டு-(அவனிடம்) பறையைப்பெற்று மா வாய் பிளந்தானை - குதிரை வடிவு கொண்ட கேசியின் வாயைப் பிளந்தவனு...

திருப்பாவை பாசுரம் 7 பதவுரை

பாசுரம்: கீசு கீசென்(று) எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசலனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய். பதவுரை: பேய்ப் பெண்ணே!- (பகவத் விஷயரஸத்தை அறிந்தும் மறந்து கிடக்கிற) மதிகெட்ட பெண்ணே!  எங்கும்-எல்லா திசைகளிலும் ஆனைச் சாத்தன்-வலியன் என்னும் பரத்வாஜ பக்ஷிகள் கீசு கீசு என்று-கீச்சு கீச்சு என்று  பேசின-பேசிய பேச்சு அரவம்-பேச்சின் ஒலியை  கேட்டிலையோ-(நீ)கேட்கவில்லையோ?  வாசம் நறும் குழல்-மிக்க பரிமளத்தையுடைய மயிர் முடியையுடைய  ஆய்ச்சியர் - இடைச்சிகளுடைய காசும் - அச்சுத்தாலியும் பிறப்பும்-முளைத்தாலியும்  கலகலப்ப- கலகலவென்று ஒலிக்கும்படியாக கை பேர்த்து-கைகளை அசைத்து மத்தினால்-மத்தினாலே ஓசை படுத்த—ஓசைபடுத்திய  தயிர் அரவம்-தயிரோசையையும் கேட்டிலையோ- (நீ) கேட்கவில்லையோ?  நாயகப் பெண் பிள்ளாய்- பெண்களுக்கெல்லாம் தலைவியாயிருப்பவளே! நாராயணன் மூர்த்தி கேச...

திருப்பாவை பாசுரம் 6 பதவுரை

பாசுரம்: புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வென்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்(து) அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய் பதவுரை: புள்ளும்-பறவைகளும் சிலம்பின காண்- கூவிக்கொண்டு செல்லாநின்றன காண்;  புள் அரையன் கோஇலில்-பட்சிகளுக்கு அரசனான கருடாழ்வானுக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனுடைய ஸந்நிதியிலே,  வெள்ளை விளி சங்கின்- வெண்மையானதும், (எல்லாரையும்) கூப்பிடுவதுமான சங்கத்தினுடைய.  பேர் அரவம் - பெரிய ஒலியையும் கேட்டிலையோ-கேட்கவில்லையோ?  பிள்ளாய்!-(பகவத்விஷயத்தில் புதியவளான) பெண்ணே! எழுந்திராய்-(சீக்கிரமாக) எழுந்திரு;  பேய் முலை நஞ்சு-(தாய் வடிவுகொண்ட) பேயாகிய பூதனையின் முலையில் (தடவியிருந்த) விஷத்தை, உண்டு-(அவளுடைய ஆவியுடன்) அமுது செய்து,  கள்ளச்சகடம்-வஞ்சனை பொருந்திய சகடாஸுரனை கலக்கு அழிய- கட்டுக் குலையும்படி கால் ஓச்சி-திருவடிகளை நிமிர்த்து வெள்ளத்து—திருப்பாற்கடலில்  அரவில்-ஆத...

திருப்பாவை பாசுரம் 5 பதவுரை

பாசுரம்: மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய். பதவுரை: மாயனை - ஆச்சரியமான செயல்களை உடையவனும்,  மன்னு வடமதுரை மைந்தனை - (நித்யமான பகவத்ஸம்பந்தத்தாலே) விளங்காநின்றுள்ள வடமதுரைக்கு அரசனும்.  தூய பெரு நீர் - பரிசுத்தமானதும் ஆழம் மிக்கிருப்பதுமான நீரையுடைய. யமுனைத்துறைவனை -யமுனைக்கரையிலே விளையாடுபவனும்,  ஆயர் குலத்தினில் தோன்றும் - இடைக்குலத்தில் திருவவதரித்த, அணிவிளக்கை - மங்கள தீபம் போன்றவனும் தாயை குடல் விளக்கம் செய்த -  தாயாகிய யசோதைப்பிராட்டியின் திருவயிற்றை விளங்கச்செய்த தாமோதரனை-(கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய) எம்பிரானை.  நாம்—(அவனால் அணுகத்தக்க) நாம்.  தூயோம் ஆய் வந்து-பரிசுத்தர்களாகக் கிட்டி,  தூமலர் தூவி - நல்ல மலர்களைத் தூவி,  தொழுது-வணங்கி வாயினால் பாடி-வாயாரப்பாடி மனத்தினால் சிந்த...

திருப்பாவை பாசுரம் 4 பதவுரை

பாசுரம்: ஆழி மழைக்கண்ணா! ஒன்று(ம்) நீ கை கரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொ(டு) ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப் பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கமுதைத்த சரமழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய். பதவுரை: ஆழி-கடல்போலே கம்பீரமான ஸ்வபாவத்னயுடைய. மழைக்கண்ணா!- மழைக்குத் தலைவனான வருணதேவனே!  நீ-நீ,  ஒன்றும் - சிறிதும்,  கை கரவேல்-ஒளிக்கக்கூடாது; ஆழியுள் புக்கு-ஸமுத்திரத்தினுள் புகுந்து. முகந்து கொடு- (அங்குள்ள நீரை) மொண்டுகொண்டு, ஆர்த்து-இடிஇடித்துக்கொண்டு.  ஏறி - ஆகாசத்தில் ஏறி. ஊழி முதல்வன்-காலம் முதலிய ஸகலபதார்த்தங்களுக்கும் காரணபூதனான எம்பெருமானுடைய,  உருவம் போல்-திருமேனிபோல், மெய் கறுத்து—உடம்பு கறுத்து. பாழி அம்தோள் உடை - பெருமையையும் அழகையும் கொண்ட தோளையுடையவனும், பற்பநாபன் கையில்-நாபீகமலத்தை யுடையவனுமான எம்பிரானுடைய வலது கையிலுள்ள, ஆழி போல் மின்னி - திருவாழியாழ்வானைப் போலே மின்னி. வலம்புரிபோல் -(இடது கையிலுள்ள) பாஞ்சஜன்யாழ்வானைப்போலே.   நின்று அதி...

திருப்பாவை பாசுரம் 3 பதவுரை

பாசுரம்: ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகள பூங்கு வளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். பதவுரை: ஓங்கி - உயர வளர்ந்து,  உலகு-மூன்று உலகங்களையும்,  அளந்த-(தன் திருவடிகளாலே) அளந்து கொண்ட,  உத்தமன்-புருஷோத்தமனுடைய,  பேர் - திருநாமங்களை,  நாங்கள் பாடி-(திருநாமத்தைச் சொல்லாவிடில் உயிர் வாழகில்லாத) நாங்கள் பாடி,  நம் பாவைக்கு சாற்றி-எங்கள் நோன்புக்கு என்றொரு காரணத்தை முன்னிட்டு நீராடினால்-ஸ்நாநம் செய்தால்,  நாடு எல்லாம்-தேசமெங்கும் தீங்கு இன்றி-ஒரு தீமையுமில்லாமல், திங்கள் - மாதந்தோறும்,  மும்மாரி பெய்து-மூன்று மழை பெய்திட, ஓங்கு பெரும் செந்நெல் ஊடு- உயர்ந்து பருத்த சிவந்த நெற்பயிர்களின் நடுவே.  கயல் உகள-கயல் மீன்கள் துள்ள பொறி வண்டு- அழகிய வண்டுகள்,  பூம் குவளைப் போதில் - அழகிய நெய்தல் மலரான குவளை ...

திருப்பாவை பாசுரம் 2 பதவுரை

பாசுரம்: வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். பதவுரை: வையத்து - இப்பூவுலகில். வாழ்வீர்காள்- வாழப்பிறந்தவர்களே!,  நாமும்-(அவனாலே பேறு என்றிருக்கும்) வையத்து வாழ்வீர்காள் நாமும்.  உய்யும் ஆறு எண்ணி-உஜ்ஜீவிக்கும் உபாயத்தை உணர்ந்து,  உகந்து-மகிழ்ச்சியுடன்,  நம் பாவைக்கு- நம்முடைய நோன்புக்கு.  செய்யும் கிரிசைகள்—பண்ணும் காரியங்களை  கேளீரோ - கேளுங்கள்;  பால் கடலுள்-திருப்பாற்கடலினுள்.  பைய துயின்ற பரமன் -கள்ளநித்திரை கொள்ளும் புருஷோத்தமனுடைய.  அடிபாடி- திருவடிகளைப் பாடி.  ஐயமும் -தகுந்தவர்களுக்குக் கொடுக்கும் பொருளையும்.  பிச்சையும் —(ப்ரஹ்மசாரிகளுக்கும் ஸந்யாஸிகளுக்கும் கொடுக்கும்) பிக்ஷையையும். ஆந்தனையும் — (அவர்கள்) கொள்ளவல்லராயிருக்குமளவும்.  கை காட்டி- கொடுத்தும். நெய...

திருப்பாவை தனியன்கள் - Tiruppavai Taniyans Vyakyanam

தனியன்கள் வ்யாக்யானம் தனியன் 1: நீளாதுங்கஸ்த நகிரிதடீஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதிஸதஸிரஸ்ஸித்தமத்யாபயந்தீ| ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய:|| பதவுரை: யா கோதா- எந்த ஆண்டாள்,  நீளா துங்கஸ்தன கிரி தடீ ஸுப்தம் — நப்பின்னைப் பிராட்டியினுடைய திருமார்பிலே உறங்குபவனாய்,   ஸ்வோச் சிஷ்டாயாம்- தன்னாலே சூடிக்களையப்பட்ட, ஸ்ரஜி-மாலையிலே, நிகளிதம்-கட்டப்பட்டவனாயிருக்கும், க்ருஷ்ணம்-க்ருஷ்ணனாகிற ஸிம்ஹத்தை,  உத்போத்ய-(துயில்)உணர்த்தி, ஸ்ருதி ஸத ஸரஸ் ஸித்தம்-நூற்றுக்கணக்கான வேதாந்த வாக்கியங்களினால் ஸித்திக்கிற,  ஸ்வம் - தன்னுடைய,   பாரார்த்யம்-பாரதந்த்ர்யத்தை, அத்யாபயந்தீ-அறிவித்து பலாத்க்ருத்ய-வலுக்கட்டாயமாக  புங்க்தே-அனுபவிக்கிறாளோ,  தஸ்யை- அப்படிப்பட்ட ஆண்டாளுக்கு   பூயோ பூய ஏவ- மறுபடியும் மறுபடியும், இதமிதம் நம: நன்றியோடுகூடின நமஸ்காரம் அஸ்து-ஆகவேண்டும். தனியன் 2: அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல் பதியம்-இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை ...

திருப்பாவை பாசுரம் 1 பதவுரை

ஸ்ரீ: ஸ்ரீமதே ஸடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருப்பாவை - பாசுரம் 1: மார்கழித்‌ திங்கள்‌ மதி நிறைந்த நன்னாளால்‌   நீராடப்போதுவீர்‌ போதுமினோ நேரிழையீர்‌! சீர்‌ மல்கும்‌ ஆய்ப்பாடிச்‌ செல்வச்‌ சிறுமீர்காள்‌! கூர்‌ வேல்‌ கொடுந்தொழிலன்‌ நந்தகோபன்‌ குமரன்‌ ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்‌ கார்மேனிச்‌ செங்கண்‌ கதிர்‌ மதியம்‌ போல்‌ முகத்தான்‌  நாராயணனே நமக்கே பறை தருவான்‌ பாரோர்‌ புகழப்‌ படிந்தேலோரெம்பாவாய்‌. பதவுரை: மார்கழித்‌திங்கள்‌- (பரம வைஷ்ணவமான) மார்கழி மாதமாகவும்‌,  மதிநிறைந்த நல்‌ நாள்‌- சந்திரன்‌ பூர்ணமாயுள்ள அழகிய நாளாகவும்‌ இருக்கிறது; நீராட போதுவீர்‌- கண்ணணுடைய வைபவங்களிலே இஷ்டமுடையவர்கள் போதுமின் -  வாருங்கள்‌; நேர்‌ இழையீர்‌- அழகிய  ஆபரணங்களை அணிந்துள்ளவர்களே! சீர்‌ மல்கும்‌-செல்வம்‌ நிறைந்துள்ள, ஆய்ப்பாடி-திருவாய்ப்பாடியிலுள்ள செல்வச்‌ சிறுமீர்காள்‌- (பகவத்‌ ஸம்பந்தமாகிற) செல்வத்தையும்‌, இளம்‌ பருவத்தையுமுடைய பெண்களே!  கூர்வேல்‌-கூரிய வேலை உடையவரும்‌, கொடும்‌ தொழிலன்‌-(கண்ணனுக்கு தீங்கு செய்யவரும்‌ சிறு ஜந்துக்கள்‌ விஷயத்தி...